இன்று ஆடி மாத கடைசி வெள்ளி! அம்மனின் மனதை குளிர வைத்து, அருளாசியை முழுமையாக பெற, இன்று மாலை இந்த பூஜையை செய்ய தவறாதீர்கள்!

amman

ஆடி மாதம் முழுவதும் அம்மனை, நாம் முழு மனதோடு வழிபாடு செய்திருந்தாலும் கூட, இந்த கடைசி வெள்ளிக்கிழமை அன்று, நம் வீட்டில் முக்கியமாக செய்ய வேண்டிய பூஜை முறைகள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த முறைப்படி நம்முடைய வீட்டில், ஆடி மாத வெள்ளிக்கிழமை பூஜையை நிறைவு செய்தால், அம்மனின் மனம் முழுமையாக குளிர்ந்து, வேண்டிய வரத்தை உடனே நமக்கு கொடுத்து விடுவாள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

irukkankudi-amman

இன்று மாலை, நம்முடைய வீட்டில் பூஜை செய்வதற்கு, முதலில் இறைவனின் திருவுருவப் படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். கட்டாயம் ஒரு நெய் தீபம் இருக்க வேண்டும். குத்து விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து திரிகளைப் போட்டு தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள்.

ஒரு மஞ்சள் நிற புடவை, ரவிக்கைத் துணி அல்லது குழந்தைகள் அணிந்து கொள்வது போல், மஞ்சள் நிற பாவாடை சட்டை, ரிப்பன், குங்குமம் மஞ்சள், கண்ணாடி வளையல், வெற்றிலை பாக்கு பூ பழம், இவைகள் அனைத்தையும் ஒரு தாம்பூல தட்டில் வைத்து தயார் செய்து கொள்ளுங்கள். அதை அம்மனுக்கு வைத்து படைக்க வேண்டும்.

thambulam

அம்மனுக்கு நெய்வேத்தியமாக ஏலக்காய் போட்டு, பால் பாயாசம் செய்யலாம் அல்லது ரவை கேசரி செய்யலாம் அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்யலாம் அது அவரவர் சௌகரியம். நெய்வேதித்தையும் அம்மனுக்கு படித்து விடுங்கள். அதன்பின்பு, அம்மன் போற்றிகள் தெரிந்தால் 108 அம்மன் போற்றி களை, உச்சரித்து குங்கும அர்ச்சனை செய்லாம்.

- Advertisement -

லக்ஷ்மி அஷ்டோத்திரம், லட்சுமி சஹஸ்ரநாமம் இவைகளை ஒலிக்கச் செய்து, மலர்களால் அர்ச்சனை செய்யலாம். அடுத்தபடியாக, உங்கள் வீட்டு வழக்கப்படி தேங்காய் உடைத்து, தீப ஆராதனை காட்டி உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். உங்களது பூஜை நிறைவு ஆனபின்பு, தாம்பூல தட்டில் வைத்திருக்கும் அந்த பொருட்களோடு, அம்மனுக்கு பிரசாதமாக படைத்த நெய்வேதத்தையும் வைத்து, யாருக்காவது ஒருவருக்கு தானம் கொடுக்க வேண்டும். அது ஒரு சுமங்கலி பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது சிறுவயதில் இருக்கும் கன்னிப் பெண்ணாக இருந்தாலும் சரி. இந்தப் பூஜையை மட்டும் மனநிறைவோடு செய்து பாருங்கள்! உங்கள் குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை எதுவாக இருந்தாலும், அதற்கான தீர்வு கட்டாயம் கிடைக்கும்.

poojai arai

இன்றைய தினத்தில், அம்மனை வேண்டிக் கொண்டு, செய்யக்கூடிய மங்கலம் பொருட்களின் தானம் நமக்கு பல மடங்கு புண்ணியத்தையும், வீட்டில் லட்சுமி கடாட்சத்தையும் தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டிற்குத் தேவையான மஞ்சள், குங்குமம், உப்பு, ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை மிகுந்த மல்லிகைப்பூ, இந்த பொருட்களில் ஏதாவது ஒன்றை புதியதாக, காசு கொடுத்து வாங்குவது மிகவும் நல்லது.

annathanam

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்லுவார்கள். இன்றையதினம் ஏழை எளியவர்களுக்கு, உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்தால், அந்த அம்மன் மனம் குளிர்ந்து உங்களுக்கான ஆசியை பரிபூரணமாக வழங்குவாள் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த தானம் செய்பவர்களுக்கு எல்லா தானத்தையும் செய்த பலன் கிடைக்குமாம்! அப்படி என்ன தானம் அது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.