ஆடி மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

aadi-month
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் சூரியன் இடம் பெயரும் பொழுது தமிழ் மாதம் துவங்குகிறது. 12 மாதங்களில் ஆடி மாதம் என்பது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. தெய்வ வழிபாடுகளுக்கு உகந்த ஆடி மாதம் ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது. இம்மாதத்தில் இறைவனுக்கு நீங்கள் செய்யும் பணிகள் மூலம் ஆத்ம திருப்தியையும், அனுகூலமான பலன்களையும் பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு உரிய பலன்களை இந்த ஆடி மாதம் எப்படி கொடுக்க இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக அமைய இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த குழப்ப நிலை மாறும். பிரிந்து சென்ற குடும்பத்தினர் ஒன்று இணைவார்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட சிறப்பான முன்னேற்றத்தை காண இருக்கிறீர்கள். இதுவரை நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு பெற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரம் உங்கள் திறமைக்கு ஏற்ப கிடைக்க இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நலம் தரும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக பிறந்திருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி காணலாம். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மூத்தவர்கள் உடன் இணக்கமாக செல்வது நல்லது. தொழில் சார்ந்த விஷயங்களில் அவர்களுடைய அனுபவம் உங்களுக்கு உதவிகரமாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க புதிய உத்திகளை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்த்து அமைதி காப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கியம் படிப்படியாக முன்னேற்றம் காணும். கவலைகள் நீங்க கந்தனை வழிபட்டு வாருங்கள்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கமான பலன்களை காண இருக்கிறீர்கள். நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். எனவே நடப்பது நடக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டு உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தில் திருமண பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன கசப்புகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் சலுகைகள் எதிர்பார்க்கும் நேரத்தில் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கவனம் தேவை. வெளியிட பயணங்களின் பொழுது அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். ஆரோக்கியம் சீராக இருக்கும். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த நன்மைகள் எல்லாம் நடக்க இருக்கிறது. குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார விருத்தி அடைய புதிய விஷயங்களை மேற்கொள்வது நல்லது. அனுபவசாலிகளின் அறிவுரைகளைக் கேட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்காத மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். வேலைப்பளு அதிகரித்தாலும் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நிலவும் பனிப்போர் குறையும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். பிரச்சனைகள் திங்கள் தோறும் ஈசனை வழிபட்டு வாருங்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக அமைய இருக்கிறது. கனிவான பேச்சாற்றல் மூலம் மற்றவர்களை எளிதாக கவரும் உங்கள் ராசிக்கு தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் இனிதே நடந்தேறும். உங்களை விட்டு சென்றவர்கள் அவர்களாகவே உங்களைத் தேடி வரக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தகுந்த சமயத்தில் பொருளாதார ரீதியாக உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் எல்லாம் மறைய கூறிய இனிய மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக சிறப்பாக அமைந்து இருக்கிறது. தொடர்ந்து உங்களுடைய பங்களிப்பை அதிகமாக கொடுத்து வாருங்கள். ஆரோக்கிய விஷயத்தில் எச்சரிக்கை தேவை. வேலனை வழிபட நினைத்ததெல்லாம் நடக்கும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய மாதமாக அமைய இருக்கிறது. உங்களை சார்ந்த விஷயங்களை தவிர தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுய லாபம் காணக்கூடிய வகையில் வாய்ப்புகள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகத்தை கவனமுடன் கையாளுங்கள். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மகிழ்ச்சி நீடிக்க மகேஸ்வரியை வழிபடுங்கள்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் நினைத்த காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய இரக்க சுபாவத்தால் பல்வேறு நன்மைகளை காண இருக்கிறீர்கள். ஆரணி ரீதியான வீண் விரையங்கள் ஏற்படாமல் இருக்க உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்ய செல்வம் நிலைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டங்கள் வந்து சேரக்கூடிய இனிய மாதமாக அமைந்திருக்கிறது என்றே கூறலாம். இதுவரை திரும்பி வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டாலும் முன்னேற்றம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய பாக்கியம் உண்டு. உங்களுடைய பேச்சுக்கும் மரியாதை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம். வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சரியாக பராமரித்து வருவது நல்லது. குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நன்மைகள் நடக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான நல்ல மாதமாக அமையும். நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆதரவானது உங்களுக்கு அதிகம் பெருகும். நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனை அனுபவிக்கும் நேரமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பகைகள் மறையும். எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தனலாபம் பெருக விடா முயற்சி தேவை. உங்களுடைய முழு ஒத்துழைப்பு மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை வாங்கிக் கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த உறவு சிக்கல் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் கொடுக்கும். வேங்கடவனை வழிபட்டு வாருங்கள் வேண்டியதெல்லாம் கிடைக்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி காணும். இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த நிறைய விஷயங்கள் ஒவ்வொன்றாக நடந்து வருவதை காணலாம். தகுந்த சமயத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் மூலம் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் அனுகூலமான பலன்களைக் கொடுக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் அவ்வபோது வந்து மறையும். வெள்ளிக்கிழமை தோறும் அம்பாள் வழிபாடு செய்யுங்கள் பாவங்கள் நீங்கும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக அமைந்திருக்கிறது. நீங்கள் மனதில் நீண்ட நாள் நினைத்துக் கொண்டிருந்த சில விஷயங்கள் எதிர்பார்க்காத சமயத்தில் நடக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தட்டி சென்ற சுபகாரியங்கள் கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி தொழில் சூடு பிடிக்கத் தொடங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். வேலை பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையான நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உமையவளை வழிபடுங்கள் நன்றாக உறக்கம் வரும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் அதிர்ஷ்ட மாதமாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய நல்ல மாதமாக இருக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடுவதும் கவனத்துடன் இருங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வம்பு, வழக்குகளை நீங்களே இழுத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது உத்தமம். உணவு தட்டுப்பாடு மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். முருகனை வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

- Advertisement -