ஆடி மாத ராசி பலன் 2018

Aadi Matha Rasi Palan
- Advertisement -

மேஷம்:
மேஷராசி அன்பர்களே!
4-ல் சூரியன், புதன்; 5,6-ல் சுக்கிரன்; 7-ல் குரு; 9-ல் சனி(வ); 10-ல் செவ்வாய், கேது; 4-ல் ராகு.

இந்த மாதம் முழுவதும் குருபகவானால் முன்னேற்றம் ஏற்படும். மாத முற்பகுதியில் சுக்கிரன் பல நன்மைகளை அளிப்பார். புதனால் பொருளாதார வளம் மேம்படும். மேலும் அவர் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கச் செய்வார். மேஷராசி அன்பர்களுக்கு பல வகை களிலும் முன்னேற்றம் உண்டாகும்.

- Advertisement -

கணவன், மனைவிக்கிடையே அன்பு, பாசம் மேலோங்கும். உறவினர் வருகையால் நன்மைகள் ஏற்படும். மாத இறுதியில் உறவினர்களிடம் பக்குவமாகப் பழகுவது நல்லது.தேவையில்லாத பேச்சினைத் தவிர்த்து ஒதுங்கி இருப்பது நல்லது. மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். குரு சாதகமான இடத்தில் இருப்பதால் பின் தங்கிய நிலை மாறும். இதுநாள் வரை தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

- Advertisement -

தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சந்திரனால் தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம். மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். நற்பெயர் , புகழுக்கு களங்கம் ஏற்படாது. கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

- Advertisement -

மாணவர்கள் சிறப்பான நிலையை காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

பெண்கள் குடும்பத்துடன் வெளியூரில் இருக்கும் புனித தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் நடந்துகொள்வார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மாதப் பிற்பகுதியில் பிள்ளைகளால் பிரச்னை வரலாம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 20, 21, 27, 28, 29, ஆக 3, 4, 5, 9, 14
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 22, 23, 24

பரிகாரம்: வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்கை வழிபாடு, செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்.

ரிஷபம்:
Rishabam Rasi

3-ல் சூரியன், புதன்; 4,5 -ல் சுக்கிரன்; 6-ல் குரு; 8-ல் சனி(வ); 9 -ல் செவ்வாய், கேது; 3 -ல் ராகு

இந்த மாதம் முழுவதும் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.செயலில் வெற்றி, குடும்பத் தில் மகிழ்ச்சி, தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தற்போது குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளதால் பிரச்னையை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பகைவர்களின் சூழ்ச்சி உங்களிடம் எடுபடாது. பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான வசதிகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். மாத பிற்பகுதியில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாகச் செயல்படுவர். மனதில் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னை மறையும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உறவினர்களின் வருகையும், அவர்களால் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களின் ஆதரவு வளர்ச்சிக்கு துணை நிற்கும். மாதப் பிற்பகுதியில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு அமையும். வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.
மாணவர்களுக்கு சுமாரான நிலையே காணப்படும். சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆனாலும் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.

பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 20, 21, 23, 24, 30, 31, ஆக 1, 11, 16
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 25, 26

பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், சனியன்று சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம். துர்கைக்கு ராகுகாலத்தில் நெய்தீப வழிபாடு

மிதுனம்:
Mithunam Rasi

2-ல் சூரியன், புதன்; 3,4 -ல் சுக்கிரன்; 5-ல் குரு; 7-ல் சனி(வ); 8 -ல் செவ்வாய், கேது; 2 -ல் ராகு

இந்த மாதம் சுக்கிரன் மற்றும் குரு ஆகியோரால் முன்னேற்றம் ஏற்படும். 5ம் இடத்தில் இருக்கும் குருபகவான் குடும்பத்தில் குதூகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தையில் சாதகமான முடிவு ஏற்படும். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாகச் செயல்படுவர். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மறுபடியும் நாடி வருவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படக்கூடும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்துடன் விருந்து, விழா என்று செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார். குறிப்பாக மாதப் பிற்பகுதியில் அவர்களால் அதிக அனுகூலம் பெறலாம். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். சிலருக்கு புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு குறையும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மாத பிற்பகுதியில் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.தொழில் விஷய மாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
கலைஞர்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மதிப்பு, மரியாதை கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் விடாமுயற்சியும், கூடுதல் கவனமும் தேவை. ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 22, 23, 25, ஆக 1, 2, 3, 5, 9, 12
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 27, 28, 29

பரிகாரம்: ராகு கேதுவுக்கு அர்ச்சனை, சனியன்று மாலையில் சனீஸ்வரருக்கு எள்தீபம், செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்.

கடகம்:
Kadagam Rasi

1-ல் சூரியன், புதன்; 2,3 -ல் சுக்கிரன்; 4-ல் குரு; 6 -ல் சனி(வ); 7 -ல் செவ்வாய், கேது; 1 -ல் ராகு

இந்த மாதம் முழுவதும் நன்மை தரும் மாதமாகவே அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். பொருளாதார வளம் மேம்படும்.
வீட்டில் அவ்வபோது சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். சிலருக்கு வீண் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். சிலருக்கு வீண்அபவாதங்கள் ஏற்படலாம் மாத முற்பகுதியில் குடும்பத்தில் பொருளாதார வளம் பெருகும். அரசு வகையில் ஆதாயம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். வேலையில் கூடுதல் கவனமுடன் இருக்கவும். பணிச்சுமையை சந்திக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்வது நல்லது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும்.

தொழிலதிபர், வியாபாரிகளுக்கு மாத முற்பகுதியில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக் கடனுதவி எளிதாகக் கிடைக்கும். தொழில் விஷயமாக மற்றவர்களிடம் பிரச்னை செய்யவேண்டாம். சக வியாபாரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் ஆற்றல் ஏற்படும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். மாத முற்பகுதியில் அவ்வப்போது மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

மாணவர்கள் சிரத்தையுடன் படிக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையைப் பின்பற்றுவது நல்லது.

பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் பொறூப்புக்களை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19, 25, 28, ஆக 3, 4, 5, 6,11, 15
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 30, 31

பரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், வியாழன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனை

சிம்மம்:
simmam

12 -ல் சூரியன், புதன்; 1,2 -ல் சுக்கிரன்; 3-ல் குரு; 5 -ல் சனி(வ); 6 -ல் செவ்வாய், கேது; 12 -ல் ராகு

முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கவலை வேண்டாம். சில நன்மைகள் ஏற்படும். பொருளாதார வளம் மேம்படும். முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும், அதை முறியடித்து வெற்றிக்கு வழி காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். தங்கள் செயல்பாடுகளால் உங்களுக்குப் பெருமை தேடித் தருவார்கள். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளில் உதவியாக இருப்பர்.அவர்களால் முயற்சிகள் சாதகமாக முடியும்.

புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டாகும். உங்கள் வளர்ச்சிக்கு வாழ்க்கைத்துணை இருப்பார். புத்தாடை, ஆபரணங்கள் வாங்கப் பெறலாம். கணவர் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

பணியாளர்களுக்கு வேலைச்சுமை அதிகரிப்பதன் காரணமாக விரக்தியான மனநிலை ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். சிலர் இடமாற்றத்தைச் சந்திக்கலாம்.வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். மாதப் பிற்பகுதியில் நிலைமை சீராகும்.

தொழில், வியாபாரத்தில் வீண் விரயம் ஏற்படலாம். போட்டி வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படலாம். ஆனால், மாதப் பிற்பகுதியில் வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடனுதவியும் எளிதாகக் கிடைக்கும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும்.

கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

மாணவர்கள் விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் சிறப்பிடம் பெறுவர். அக்கம்பக்கத்தினரின் அன்பும், ஆதரவும் உண்டாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணப் பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 20, 21, 27, 28, 29, 30, ஆக 6, 7, 9, 15
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சந்திராஷ்டம நாள்கள்: ஆக 1, 2

பரிகாரம்: ஞாயிறு ராகு காலத்தில் நாகருக்கு பாலாபிஷேகம், புதன்கிழமையில் பெருமாள் கோயிலில் நெய்தீபம்.

கன்னி:
Kanni Rasi

11 -ல் சூரியன், புதன்; 12,1 -ல் சுக்கிரன்; 2-ல் குரு; 4 -ல் சனி(வ); 5 -ல் செவ்வாய், கேது; 11 -ல் ராகு

இந்த மாதம் மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். அடுத்தடுத்து பல நன்மைகள் உண்டாகும். பல்வேறு இடையூறுகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிவீர்கள். குடும்பத்தில் பகை, பிரிவு ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படாது.
பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர் வகையில் உங்களைப் பற்றிய உயர்வான அபிப்பிராயம் ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். பணவரவு கூடும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்கள் உதவிகரமாகச் செயல்படுவர். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உண்டாகும். மாதப் பிற்பகுதியில் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என்று சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். மாத முற்பகுதியில் உறவினர் வருகையால் பிரச்னை வர வாய்ப்பு இருப்பதால் சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். மாதப் பிற்பகுதியில் எதிர்பாராத நன்மை கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கியில் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தைக் கொடுக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். லாபம் அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். பாடத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டுப் போட்டி களிலும் வெற்றி காண்பர்.

பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் பெற்று மகிழ்வர். வேலைக்குச் செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். எதிர்பாராத பதவி உயர்வு வந்து சேரும். சிலருக்கு புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19, 22, 23, 24, ஆக 1, 2, 9, 10, 11, 15
அதிர்ஷ்ட எண்கள்: 1, 9
சந்திராஷ்டம நாள்கள்: ஆக 3, 4, 5

பரிகாரம்: சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை, செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்.

பாரதியார் கவிதைகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

துலாம்:
Thulam Rasi

10 -ல் சூரியன், புதன்; 11,12 -ல் சுக்கிரன்; 1-ல் குரு; 3 -ல் சனி(வ); 4 -ல் செவ்வாய், கேது; 10 -ல் ராகு

முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். தொடங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். ஆனால், குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் அவசியம். சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்ற உறவினர்கள், உங்கள் அருமையைப் புரிந்துகொண்டு வலிய வந்து அன்பு பாராட்டுவார்கள். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியவர்களும்கூட உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

பணியாளர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது. உங்கள் திறமைக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நன்மை நடக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும்.

சிலருக்கு தொழிலில் மந்த நிலை ஏற்படலாம். ஆனால், உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். போட்டியாளர்களின் சூழ்ச்சிகளை உடைத்து, வளர்ச்சி காண்பீர்கள். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். வருமானம் அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் சில தடைகள் ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாதப் பிற்பகுதியில் காரியங்களில் தடை, தாமதங்களும் வீண்செலவுகளும் ஏற்படக்கூடும்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நன்மைக்கு வழிவகுக்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசு, பாராட்டு பெறுவீர்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடம்பர வசதி பெருகும். வாகன சுகம் உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 20, 21, 25, 26, ஆக 3, 4, 5, 11, 12, 13
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9
சந்திராஷ்டம நாள்கள்: ஆக 6, 7

பரிகாரம்: செவ்வாயன்று முருகனை வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நல்ல பலன் தரும்.

விருச்சிகம்:
Virichigam Rasi

9 -ல் சூரியன், புதன்; 10, 11 -ல் சுக்கிரன்; 12-ல் குரு; 2 -ல் சனி(வ); 3 -ல் செவ்வாய், கேது; 9 -ல் ராகு

இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் விலகும். பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். பொன், பொருள் போன்றவை சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணலாம். ஆனால், மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பொறுமையுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகை அடிக்கடி இருக்கும். இதனால் மகிழ்ச்சி கூடும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.மாத முற்பகுதியில் உறவினர் வருகையால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

பணியாளர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு திடீர் இடமாற்றம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் நன்மை கிடைக்கும். வீண் அலைச்சல், வேலைப்பளு குறையும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வகையில் பணம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு புதிய பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வருமானமும் அதிகரிக்கும்.

மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும்.ஆசிரியர், பெற்றோர் அறிவுரையை ஏற்று நடந்துகொள்வது அவசியம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பெண்களுக்கு ஆடம்பரப் பொருள்களை வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாதப் பிற்பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19, 22, 24, 27, ஆக 3, 4, 6, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சந்திராஷ்டம நாள்கள்: ஆக 8, 9

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு, வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவதும் நலம் தரும்.

தனுசு:
Dhanusu Rasi

8 -ல் சூரியன், புதன்; 9, 10 -ல் சுக்கிரன்; 11-ல் குரு; 1 -ல் சனி(வ); 2 -ல் செவ்வாய், கேது; 8 -ல் ராகு

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். சகோதரிகளால் நன்மை பெறலாம். நினைத்தது எல்லாம் நிறைவேறும். எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சி சாதகமாக முடியும்.ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாத முற்பகுதியில் எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் நன்மை ஏற்பட்டாலும், அவர்கள் வகையில் மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம். சிலரது வீட்டில் பொருள்கள் திருட்டு போக வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காணலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடம், பணி மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் கூடும். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். வரவு, செலவுகளில் கவனமாக இருக்கவும். எதிலும் அதிக முதலீடு செய்யவேண்டாம். மாதத்தின் இடையில் சிறுசிறு தடைகள் ஏற்படும். மாதத்தின் இறுதியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. பங்குதாரர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும்.

கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிரிகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படலாம். மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும்.

மாணவர்களுக்கு முன்னேற்றமான மாதமாக அமையும். கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கிடைக்க பெறுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தோழிகள் உதவியாக இருப்பார்கள்.பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19, 20, 21, 31, ஆக 6, 7, 15, 16
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
சந்திராஷ்டம நாள்கள்: ஆக 10, 11

பரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், பவுர்ணமியன்று அம்பிகைக்கு நெய் விளக்கு

மகரம்:
Magaram rasi

7 -ல் சூரியன், புதன்; 8, 9 -ல் சுக்கிரன்; 10-ல் குரு; 12 -ல் சனி(வ); 1 -ல் செவ்வாய், கேது; 7 -ல் ராகு

பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

இந்த மாதம் ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பொருளாதார வளம் பெருகும். எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. மனதில் அவ்வப்போது சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். எத்தனை இடையூறுகள் குறுக்கிட்டாலும் அனைத்தையும் முறியடிப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது.

குடும்பத்தில் குழப்பம் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். உங்கள் திறமைக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பதவி உயர்வுக்கு தடை இருக்காது. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்பது அவசியம். பெண்களை பங்குதாரராகக் கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பண இழப்பு, எதிரிகளால் இடையூறு என்பதால் கவனம் தேவை.

கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர், பெற்றோர் ஆதரவு கிடைக்கும். விரும்பிய நிறுவனத்தில் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

பெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும். பிள்ளைகளின் விஷயங்களில் பொறுமையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். நிதானம் தேவை. ஆனால் வழக்கமான சம்பளம், பதவி உயர்வுக்குத் தடை இருக்காது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 20, 21, 23, 24, 25, ஆக 1, 2, 9, 10
அதிர்ஷ்ட எண்கள்: 4, 7
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 27, ஆக 12, 13

பரிகாரம்: வெள்ளியன்று ராகு காலத்தில் துர்கை வழிபாடு, சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை செய்வதும் நலம் தரும்.

கும்பம்:
Kumbam Rasi

6-ல் சூரியன், புதன்; 7, 8 -ல் சுக்கிரன்; 9-ல் குரு; 11 -ல் சனி(வ); 12 -ல் செவ்வாய், கேது; 6 -ல் ராகு

இந்த மாதம் முழுவதும் சாதகமான பலன்களே நிகழும். பொருளாதார வளம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். கணவன் – மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். அடிக்கடி குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர், நண்பர் வீட்டு விழாக்களில் கலந்துகொள்வீர்கள். சகோதர வழியில் உதவி கிடைக்கும். உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. மாதப் பிற்பகுதியில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். மேலதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். இதுவரை இருந்த தடைகள் விலகும். பகைவரின் சதியை முறியடிப்பீர்கள். மாதப் பிற்பகுதியில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

கலைஞர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நற்பெயரும், புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும்.

மாணவர்களுக்கு பெரியோர்களின் வழிகாட்டுதல் உதவிகரமாக இருக்கும். விரும்பிய மேல்படிப்பினை தொடருவீர்கள். படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். இதுவரை உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் தங்கள் தவறினை உணர்ந்து மன்னிப்பு கோருவார்கள். இதுவரை தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சி நடந்தேறும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வளர்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 22, 23, 24, 30, 31, ஆக 3, 4, 5, 12, 13
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 18, 19, ஆக 14, 15

பரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு நெய்தீபம்.

தினம் தோறும் நல்ல நேரம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்

மீனம்:
Meenam Rasi

5-ல் சூரியன், புதன்; 6, 7 -ல் சுக்கிரன்; 8-ல் குரு; 10 -ல் சனி(வ); 11 -ல் செவ்வாய், கேது; 5 -ல் ராகு

இந்த மாதம் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய மாதமாக அமையும். எந்த ஒரு செயலையும் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. மனதில் தேவையில்லாத சஞ்சலமும், அதனால் கவலை யும் ஏற்பட்டாலும் குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி, வெற்றி ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கலாம். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக் கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும். சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் மிகுந்த நன்மையைப் பெறுவீர்கள். உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். விசேஷங்களிலும் விருந்துகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.

பணியாளர்களுக்கு சீரான வளர்ச்சி இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறுவதில் சற்று தாமதம் ஏற்படலாம். பணியின் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். பணிச்சுமை அதிகரிக்கும். யாரையும் நம்பி பொறுப்பினை ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடலாம். எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கவும்.

கலைஞர்களுக்கு இதுவரை இருந்த தடையும், சோர்வும் நீங்கும். இதுநாள் வரை உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். விரும்பிய மேற்படிப்பில் சேர்ந்து படிப்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் பொறுமையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லவும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19 25, 27, 29, ஆக 1, 2, 6, 7, 15
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 20, 21, ஆக 16

பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம், ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு.

மாத ராசி பலன், வார பலன், யோக முத்திரைகள், குழந்தைகளுக்கான சிறு கதைகள் உள்ளிட்ட பல தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்..

- Advertisement -