ஆடி மாதம் குழந்தை பிறக்கலாமா ?

Amman

தமிழர்களின் பண்பாடு மற்றும் நாகரீகம் உலகில் மிக பழமை வாய்ந்தது. அவர்களின் எந்த ஒரு செயலுமே விஞ்ஞானம் மற்றும் மெய்ஞ்ஞானம் கலந்ததாகவே இருக்கும். அப்படி அவர்கள் ஒரு வருடத்தை 12 மாதங்களாக பிரித்து, அந்த மாதங்கள் ஒவ்வொன்றும் ஒரு ராசியை கொண்டதாக குறிப்பிட்டனர். அதில் சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் வீதம் கடப்பதில் நான்காவது ராசியான கடக ராசியில் கடப்பதை “ஆடி மாதம்” என பெயரிட்டனர். இது தெய்வத்திற்குரிய மாதமாக இருப்பதால் இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் நல்லதா என அதிகமான மக்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அதுகுறித்து இங்கு தெளிவு பெறுவோம்.

baby

பொதுவாக ஆடி மாதம் இயற்கை பருவ நிலையின் ஒரு கலவையான மாதமாக இருக்கிறது. சில நாட்கள் அதிக வெப்பமிகுந்ததாகவும், மற்ற சில நாட்களில் மழையும் பெரும்பாலான நேரங்களில் பலம் வாய்ந்த காற்றும் வீசுவதாக இருக்கிறது. இப்படியான ஆடி மாதம் தான் பெரும்பாலான தெய்வங்களுக்கு திருவிழாக்கள், உற்சவங்கள் கொண்டாப்படும் ஆன்மீக மாதமாகவும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண் தெய்வமான அம்மனின் வழிபாட்டிற்கு ஏற்ற காலமாகிறது. அம்மன் தெய்வங்கள் எல்லாமே சற்று உக்கிரத்தனம் மிக்கதாகும். எனவே இக்காலத்தில் பெண் தெய்வங்கள் மற்றும் இதர உக்கிரமான தெய்வங்களை ஆசுவாசப்படுத்த இறை வழிபாடு மற்றும் திருவிழாக்களை அதிகம் கொண்டாடுகின்றனர்.

இத்தகைய காரணத்தினால் தான் ஆடி மாதத்தில் திருமணம் மற்றும் புதுமனை புகுவிழா போன்ற மக்கள் அதிகம் கூடி மகிழும் மங்கல நிகழ்வுகள் எதையும் செய்வதில்லை. ஆனால் இம்மாதத்தில் குழந்தை பிறப்பு நிகழ்ந்தால் பெரும்பாலனவர்கள் ஏதோ ஒரு மிகப்பெரும் தீங்கு ஏற்பட்டுவிட்டது போல் கருதுகின்றனர். “மழை பொழிவும் குழந்தை பிறப்பும் அந்த பகவானுக்கே தெரியாது” என்று ஒரு பழமொழி உண்டு. மனித பிறவி ஒரு கிடைத்தற்கரிய பிறவியாகும். தாயின் வயிற்றில் பத்து மாதங்கள் வளரும் குழந்தை வருடத்தின் பன்னிரண்டு மாதங்களில் எந்த மாதத்திலும் பிறப்பது போன்றது தான் ஆடி மாத பிறப்பும்.

Amman

அதிலும் இந்த மாதம் கடக ராசியில் தொடங்குகிறது. ஜோதிடத்தில் கடக ராசி மனோகாரகன் மற்றும் அறிவாற்றலுக்கு அதிபதியாகிய “சந்திரனின்” ராசியாகும். ஆகவே இம்மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே மனோதிடமும், சிறந்த அறிவுத்திறனையும் கொண்டிருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகள், அது ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி அவர்கள் பிறை சந்திரனை அணிகலனாக சூடியிருக்கும் “அம்பிகையின்” அருளுக்கு பாத்திரமானவர்களாகின்றனர். இதற்கு மேலும் இம்மாதத்தில் குழந்தை பிறந்ததால் தோஷம் ஏற்பட்டதாக கருதுபவர்கள், பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை முடித்து வரும் வெள்ளிக்கிழமையில் ஏதேனும் அம்மன் கோவிலுக்கு சென்று அந்த தெய்வத்திற்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட தோஷங்களும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
ஆடி செவ்வாய் விரத வழிபாடு பலன்கள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், மருத்துவ குறிப்புகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we discussed whether it is good or bad if baby born on Aadi month. In tamil it is called as Aadi matham kulanthai piranthal palan.