நீங்கள் ஆடி மாதத்தில் இவற்றை செய்தால் அதிக பலன்களை பெறலாம்

aadi-month
- Advertisement -

தமிழ் வருடங்களில் நான்காவது மாதமாக வருகின்ற ஆடி மாதம் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக இருக்கிறது. இந்த மாதத்தில் தான் அம்மன் அல்லது அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், விழாக்கள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக திருமணம் போன்ற நற்காரியங்களை இந்த மாதத்தில் செய்வதை தவிர்த்தாலும், உங்கள் வாழ்விற்கு தேவையான விடயங்களுக்கான முயற்சிகளை அம்பாளை வழிபட்டு இந்த மாதத்தில் தொடங்குவதால் நன்மையான பலன்களை பெற முடியும். அத்தகைய ஆடி மாதத்தில் தினமும் நமது வீட்டிற்கு முன்பாக விளக்கேற்றுவதால் ஏற்படும் அற்புதமான பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

amman

பொதுவாக ஆடி மாதம் என்பது வானியல் ரீதியாக பார்க்கும்போது ஆடி மாதம் என்பது கடுமையான கோடை காலம் தீர்ந்து, தீவிர மழைப்பொழிவு ஏற்படுவதற்கு இடைப்பட்ட ஒரு மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் பலம் வாய்ந்த காற்று அதிகம் வீசுவது வழக்கம். வெப்பமும், ஈரப்பதமும் நிறைந்திருக்கின்ற இந்த மாதத்தில்தான் ஈக்களின் உற்பத்தி அதிகமாகி, அதன்மூலம் உணவுகளில் கிருமித் தொற்று ஏற்பட்டு பல வகையான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.

- Advertisement -

அற்புதமான இந்த ஆடி மாதத்தில் வீட்டுக்கு முன்பாக தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கேற்றும் போது வீட்டிற்கும், அதில் வசிப்பவர்களுக்கும் நன்மை பயக்கும் என ஆன்மீக சான்றோர்கள் கூறுகின்றனர். ஆடி மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி முதல் காலை 6.30 மணி வரையான காலத்திலும், பிரதோஷ கால நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரை வீட்டிற்கு வெளியே தீபம் ஏற்றுவதால் நோய் பரப்பும் கிருமிகள், ஆபத்தான பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டை அணுகாமல் தடுப்பதோடு, தெய்வீக ஆற்றல் நமது வீட்டிற்குள்ளாக வருவதற்கு வழி வகை செய்கிறது.

deepam

இந்த ஆடி மாதத்தில் வீட்டிற்கு வெளியே தீபம் ஏற்றும் போது, கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். கிரக தோஷங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் உண்டாகும். சொந்த வீடு இல்லாதவர்கள் கூடிய விரைவில் தங்களுக்கு சொந்தமான வீடு வாங்குவார்கள்.

- Advertisement -

தென்கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு புத்தி கூர்மை, அறிவாற்றல் மேம்படும். தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றிய பின்பு அந்த தீபத்தின் புகையை குழந்தைக்கு நெற்றியில் இட வேண்டும்.

deepam

தென்மேற்கு திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் சகல விதமான துன்பங்கள் நீங்கும். திருமணத் தடை, தாமதங்கள் நீங்கி நல்ல வாழ்க்கை துணை கிடைக்கப்பெறுவார்கள். மேற்குத்திசையில் தீபம் ஏற்றுவதால் பணம் சம்பந்தமான பிரச்சனைகள். கடன் தொல்லைகள் நீங்கும். வடமேற்குத் திசை பார்த்தவாறு தீபம் ஏற்றினால் குடும்ப பிரச்சனை, பகைமை போன்றவை நீங்கும்.

- Advertisement -

deepam

வடக்குத் திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும். வடகிழக்கு இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் அதிகம் செல்வம் சேர்ந்து பிறரின் துன்பத்தை போக்கும் கொடையாளிகளாக அந்த வீட்டில் இருப்பவர்கள் மாறுவார்கள். மேலும் அவர்களின் சந்ததியினரும் புண்ணிய பலன்களை பெறுவார்கள்.

neideepam

தெற்கு திசை என்பது எமதர்மன் திசை அல்லது இறந்தவர்களின் திசை என்பதால் எக்காரணம் கொண்டும் வீட்டில் இருப்பவர்கள் இந்த திசையில் தீபங்களை ஏற்ற கூடாது. எனினும் கோயில்களில் இறந்தவர்களின் நற்கதிக்காக தெற்கு திசை பார்த்தவாறு மோட்ச தீபம் ஏற்றலாம்.

இதையும் படிக்கலாமே:
கடன் தீர இவற்றை செய்தால் பலன் அதிகம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aadi month deepam in Tamil. It is also called as Aadi matham in Tamil or Deepam etrum thisai in Tamil or Lakshmi kadatcham in Tamil or Aadi matham enna seiyya vendum in Tamil.

- Advertisement -