ஆடி மாதத்தில் இந்த தானம் செய்தால் கோடி புண்ணியம் வந்து சேருமாம் தெரியுமா? அப்படி என்ன தானம் அது?

amman-koozh-ghee
- Advertisement -

தானம் செய்ய நேரம் காலம் எல்லாம் கிடையாது என்றாலும் ஒரு சில தானங்களை அந்தந்த மாதங்களில் செய்யும் பொழுது தான் அதற்கான முழு பலன்களும் நமக்குக் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். அந்த வகையில் ஆடி மாதத்தில் செய்யக்கூடிய இந்த வகையான தானம் நமக்கு கோடி புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பது நியதி. அப்படி ஆடி மாதத்தில் நாம் விசேஷமாக என்ன தானம் செய்ய வேண்டும்? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

thanam

வெயில் காலங்களில் கொடுக்க வேண்டிய தானங்களை குளிர்ச்சியாகவும், மழைக் காலங்களில் கொடுக்கக்கூடிய தானங்களை அதற்குத் தேவையானவை போலவும் இருப்பது விசேஷமான பலன்களை கொடுக்கும். எந்த நேரத்தில் எது தேவையோ அதை தானமாக கொடுக்கும் போது தான் அதற்குரிய பலன்கள் நம்மை வந்து முழுமையாக சேர்ந்தடைகின்றன. மழை கொட்டிக் கொண்டிருக்கும் பொழுது மோர் தானம் செய்தால் எப்படி இருக்கும்? எனவே தானம் செய்வதற்கும் காலம், நேரம் எல்லாம் உண்டு. அந்த வகையில் ஆடி மாதத்தில் செய்யக்கூடிய தானங்களை பற்றி தான் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

பொதுவாக ஆடி மாதத்தில் மட்டுமல்லாமல் எந்த மாதத்திலும் செய்யக் கூடிய அற்புதமான தான வகைகளில் ஒன்று தான் அன்னதானம். நீங்கள் என்ன தானம் செய்தாலும், அதனை போதும் என்று சொல்ல முடியாது. ஆனால் அன்னதானம் செய்யும் பொழுது அதை மனமார போதும் என்று ஒருவர் கூற முடியும். எனவே தானத்தில் சிறந்தது அன்னதானம் தான். எல்லாக் காலங்களிலும் செய்யக்கூடிய அன்னதானம் ஆடி மாதத்திலும் நீங்கள் செய்து வந்தால் உங்களுடைய குலம் விருத்தி அடையும்.

ghee

ஆடி மாதத்தில் கோவில்களுக்கு நெய் தானம் செய்து வர உங்களுக்கு வீடு பேறு அமையும் என்கிறது சாஸ்திரம். கோவில்களில் அம்மனுக்கு ஏற்றும் திரு விளக்குகளில் நீங்கள் வாங்கிக் கொடுக்கும் நெய்யை கொண்டு தீபம் ஏற்றும் பொழுது உங்களுடைய வீடும் சுபிக்ஷம் அடைந்து புதிய வீடு, மனை பெறும் பாக்கியம் உண்டாகும். மங்கலப் பொருளான மஞ்சள் தானம் கோவில்களில் வரும் பெண்களுக்கும், உங்கள் வீடுகளில் வரும் சுமங்கலிப் பெண்களுக்கும் கொடுத்து வழி அனுப்பினால் சர்வ மங்களமும் உங்களுக்கு உண்டாகும்.

- Advertisement -

ஆடி மாதத்தில் வஸ்திர தானம் செய்ய சகல ரோகமும் நிவர்த்தி அடையும் என்கிறது சாஸ்திரம். இல்லாத ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த துணிமணிகளை வாங்கிக் கொடுங்கள், எந்த விதமான நோய் நொடியும் அண்டாமல் பாதுகாப்பாக இருக்கலாம். துஷ்ட சக்திகள் அல்லது துர் சொப்பனங்கள் போன்ற பிரச்சினைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், ஆடி மாதத்தில் சாலை ஓரங்களில் வசிக்கும் எளிய மக்களுக்கு போர்த்திக் கொள்ள கம்பளி போர்வை தானம் செய்து வாருங்கள். எத்தனை பேருக்கு உங்களால் வாங்கி தர முடியுமோ, அத்தனை பேருக்கு வாங்கிக் கொடுங்கள், உங்கள் பிரச்சனை நிவர்த்தி அடையும்.

kambali

புத்திர பாக்கியம் உண்டாக ஆடி மாதங்களில் கூழ் ஊற்றுவது, வெல்லம், அரிசி, பால், பழம் போன்ற பொருட்களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு, வறியவர்களுக்கு தானம் செய்து வந்தால் நீண்ட நாள் தடைப்பட்ட பிள்ளைப்பேறு கூட விரைவாக உண்டாகும் என்பது நம்பிக்கை. மேலும் தண்ணீரை தாராளமாக தானம் செய்யுங்கள். தண்ணீர் பந்தல் அமைப்பது, கோவில்களில் அல்லது மடங்களில் நீர் தானம் செய்து வர கோடான கோடி புண்ணியம் உங்களை வந்து சேர்ந்தடையும். தண்ணீர் தானம் செய்பவர்களுக்கு மனதில் ஏற்படும் குழப்பங்கள் நீங்கி மனம் சாந்தமடையும். இப்படி மேற்கூறிய பொருட்களை உங்களால் முடியும் பொழுது, நேரம் கிடைக்கும் சமயங்களில், ஆடி மாதங்களில் செய்து வர சகல, சவுபாக்கியங்களையும் பெறுவீர்கள்.

- Advertisement -