ஆடி மாதம் துவங்கிய இன்று மாலை இந்த 5 பொருட்களை வைத்து அம்பாளை முறையாக வழிபடுங்கள்! அள்ள அள்ள குறையாத செல்வம் சேரும்.

aadi-amman
- Advertisement -

12 மாதங்களில் ஆடி என்பது தெய்வீக மாதமாக கருதப்படுகிறது. தெய்வீக வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக ஆடி மாதம் இன்று வரை இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆடியில் அம்பாளை வேண்டி வழிபட்டு வந்தால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது பக்தர்களுடைய தீவிர நம்பிக்கை. பால் குடம் எடுப்பது, பூ மிதிப்பது போன்ற விசேஷங்களை இந்த மாதத்தில் தான் அம்பாள் கோவில்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. அத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று மாலை வீட்டில் எளிதாக அம்பாளை வரவேற்பது எப்படி? இதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

ஆடி மாதம் முதல் நாளான இன்று அம்பாளை வீட்டிற்கு வரவழைத்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. காலையிலேயே பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வீடு தோறும் மாவிலை தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, புத்தாடை ஒன்றை அம்பாளுக்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள், சிவப்பு, பச்சை ஆகிய ஏதாவது ஒரு வர்ணங்களில் பட்டுடை ஒன்றை அம்பாளுக்கு வைத்து வழிபடுவது விசேஷம்.

- Advertisement -

நிலை வாசலுக்கு இன்றைய நாளில் கட்டாயம் மஞ்சள், குங்குமம் வைத்து அகல் விளக்கு தீபம் ஏற்றுங்கள். வாசலில் சாணம் தெளித்து மாக்கோலமிட்டு, பூசணி பூ வையுங்கள். இன்று இதெல்லாம் செய்வதன் மூலம் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறையும். குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு கன்னிப் பெண்களும் இன்றைய நாளில் மஞ்சள் பூசி குளியுங்கள். இன்று முதல், இந்த மாதம் முடியும் வரை தினம்தோறும் உங்களுடைய இல்லங்களில் மாவிலை தோரணம் கட்டி, அம்பாளுக்கு பூஜைகள் நடை பெற்றால் அடுத்த ஒரு வருடம் வரை உங்களுக்கு அம்பாள் துணையாக நின்று காத்தருள்வாள் என்பது நம்பிக்கை.

annadhanam 1

இம்மாதத்தில் உங்களால் முடிந்த அளவிற்கு இல்லாத, இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்வது, குளிர்ச்சியாக மோர் தானம், நீர் தானம், கேழ்வரகு கூழ் தானம் ஆகியவற்றை செய்யலாம். மாலையில் பிரதான வாசலில் இரு விளக்குகள், நிலை வாசலில் இரு விளக்குகள், அம்பாளுக்கு இரண்டு அகல் விளக்குகள் வைத்து குத்து விளக்கில் ஐந்து திரி இட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள்.

- Advertisement -

நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டிற்கு பயன்படுத்தும் அரிசி, துவரம்பருப்பு, கல் உப்பு, மஞ்சள் ஆகியன மட்டும் வைத்து நீங்கள் வாங்கி வந்த புதிய பட்டாடையை தாம்பூலத்தில் வைத்து, மங்கள பொருளான வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இது எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு லலிதா ஸஹஸ்ரநாமம் கட்டாயம் படியுங்கள். பின்னர் தூப, தீப ஆராதனை காண்பித்து அம்பாளை இன்முகத்துடன் இல்லத்திற்கு வரவேற்று பூஜையை நிறைவு செய்யுங்கள்.

poojai

நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் அல்லது கற்கண்டு, உலர் திராட்சை போன்றவற்றை வைக்கலாம். கட்டாயம் மகாலட்சுமியை வரவேற்க பூஜை அறையில் உங்களிடம் இருக்கும் பணம் மற்றும் நாணயங்களை ஒரு தாம்பூல தட்டில் வைத்து அதில் கொஞ்சம் அட்சதை தூவி வையுங்கள். இவ்வாறு முறையாக அம்பாளை வீட்டிற்கு வரவேற்று வழிபட்டால் வருடமெல்லாம் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும். மேலும் இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியும் இருக்கும்.

- Advertisement -