ஆடி வெள்ளியில் இறைவனை வணங்குவதால் எத்தனை பலன்கள் தெரியுமா ?

Amman

நமது இந்து மதம் தினந்தோறும் இறைவனை துதிப்பதை ஒரு சிறந்த செயலாக போற்றுகிறது. அதன்படி வாரத்தின் ஏழு நாட்களிலும் நாம் இறைவனை வழிபடுகிறோம். இந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் அடிப்படையில் கிழமைகளாக கருதப்படுகின்றன. அந்த வகையில் “வெள்ளி” என்றழைக்கப்படும் “சுக்கிரன்” கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட வெள்ளிக்கிழமை இறைவழிபாட்டிற்கென்றே இருக்கிற ஒரு கிழமையாகும். அதுவும் “ஆடி” மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பானதாகும். அது குறித்து மேலும் சில விடயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Amman

பொதுவாக வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை தெய்வீகமான இறைவழிபாட்டிற்கு ஏற்ற சிறந்த கிழமையாகும். மேலும் வெள்ளிக்கிழமை என்ற பதத்தில் “வெள்ளி” என்பது நவகிரகங்களில் சுகங்கள் மற்றும் செல்வங்களுக்கு அதிபதியாகிய சுக்கிர பகவானை குறிப்பதாகும். உலோகங்களில் “வெள்ளி” மீது ஆதிக்கம் கொண்ட கிரகமாக இருப்பதாலும், வெள்ளி நிறத்தில் இரவு நேரத்தில் தெரிவதாலும் இந்த கிரகத்திற்க்கு வெள்ளி என்று பெயரிட்டனர் பழந்தமிழ் வானியல் நிபுணர்கள். பின்னே வரும் பல பண்டிகைகளுக்கு தொடக்க பண்டிகை மாதமாக இருக்கும் “ஆடி மாதத்தில்” வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

வாழ்வில் பொருளாதார நிலையில் கஷ்டப்படுபவர்கள், திருமணம் கால தாமதம் ஆகிறவர்கள், தொழில் மற்றும் வியாபாரங்களில் அதிக லாபம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள், இன்ன பிற துயரங்களால் அவதிப்படுபவர்கள் இந்த ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு எந்த வகை உணவோ பானங்களோ பருகாமல், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து உங்கள் பூஜை அறையில் வைத்து, பழம் பால் போன்றவற்றை நிவேதனம், வைத்து தீப தூபங்கள் காட்டி வழிபட உங்கள் வீட்டில் செல்வ நிலை உயர தொடங்கும்.

amman

மேலும் திருமணம் காலதாமதமாகும் ஆண்கள், இந்த ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று அந்த அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். அதே போல் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள் இதே ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று, சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட திருமணம் தாமதமாகும் ஆண் பெண் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளும் மற்றும் செல்வ நிலை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள், இம்மாத வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டின் பூஜையறையில் அபிராமி அன்னையின் படத்திற்கு பூக்களை சாற்றி, பால் பாயசம் நிவேதனம் வைத்து அன்னைக்குரிய மந்திரத்தை கூறி வழிபட வேண்டும். மேலும் சுக்கிர பகவானின் அம்சத்தை கொண்ட “ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதரை” இந்த ஆடி மாத வெள்ளிக்கிழமை அன்று வழிபடுவது மேன்மையை தரும்.

இதையும் படிக்கலாமே:
புதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிட பலன்கள் பற்றி அறிய எங்களோடு இணைந்திருங்கள்.