ஆண்கள் இந்த தவறுகளை செய்தால் அடிக்கடி அவமானத்தில் தலை குனிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆண்கள் செய்யவே கூடாத அந்த தவறு என்ன?

cash
- Advertisement -

பெண்களுக்கு மட்டும் தான் இதை செய்யக்கூடாது அதை செய்யக்கூடாது என்று பெரிய கட்டுப்பாட்டுகள் உள்ளதாக நாம் நினைத்திருக்கின்றோம். ஆனால் ஆண்களுக்கும் அதை மிஞ்சிய நிறைய விதிமுறைகள் உள்ளது. அதை மீறும் போது அவர்களுக்கும்  கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். ஆண்கள் தவறி கூட செய்யவே கூடாத சில தவறுகள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

ஆண்கள் எப்போதுமே பெண்களின் மனது புண்படும்படி பேசக்கூடாது. பெண்களை துன்புறுத்தக் கூடாது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இருக்கும் பெண்கள் மனது கஷ்டப்படும் படி ஆண்களின் வாயிலிருந்து வார்த்தை வரக்கூடாது. பெண் குழந்தைகள் தவறு செய்திருந்தாலும் அவர்களை திருத்துகின்றேன் என்று சொல்லி பெண் குழந்தைகளை, அப்பா கைநீட்டி அடிப்பது கூட தவறுதான். அதிலும் குறிப்பாக இந்த தவறை வெள்ளிக்கிழமை அன்று செய்யவே கூடாது.

- Advertisement -

ஆண்கள் எப்போதுமே கடன் வாங்க கூடாது. கடன் வாங்கும் பழக்கம் மிக மிக தவறு. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று கைநீட்டி கடன் வாங்கி விட்டால், அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் சில இடங்களில் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். அது மட்டும் இல்லாமல் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை உண்டு பண்ணும்.

பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் கொடுக்கல் வாங்கல் இருக்காது. ஆனால் வங்கிக்கு சென்று கடன் வாங்குவது, அல்லது வட்டிக்கு கடன் தருபவர்களிடம் கைநீட்டி கடன் வாங்குவது போன்ற இடங்களில் நாள்கிழமை பார்க்க மாட்டார்கள். தொழில் செய்பவர்களிடம் அவசரத்திற்கு எப்போது பணம் கேட்டாலும் கொடுப்பார்கள் அல்லவா. அந்த மாதிரி அவசரத்திற்கு கூட வெள்ளிக்கிழமை அன்று, ஆண்கள் கை நீட்டி கடன் வாங்கிடாதீங்க.

- Advertisement -

இது பணத்திற்கு மட்டுமல்ல. பணம் அல்லாத மற்ற பொருட்களை கூட, ஆண்கள் வெள்ளிக்கிழமை அன்று கடன் வாங்கக் கூடாது. வெள்ளிக்கிழமை வேறு வழியே இல்லை அவசியமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை என்றால் உங்கள் வீட்டுப் பெண்களின் கையால் அந்த கடனை வாங்க வேண்டும். (பெண்களும் வெள்ளிக்கிழமை கைநீட்டி கடன் வாங்க கூடாது. சூழ்நிலைக்காக இருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு இந்த சலுகை.)

வெள்ளிக்கிழமை ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவே கூடாது. சாதாரணமாக தலைக்கு குளித்துக் கொள்ளலாம். வெள்ளிக்கிழமை இதே போல நகம் வெட்டக்கூடாது, முடி சவரம் செய்யக்கூடாது. அதாவது ஷேவிங் செய்து கொள்ளக் கூடாது. செவ்வாய் கிழமை அன்றும் ஆண்கள் முடி வெட்டுவது சேவிங் செய்வது போன்ற தவறை செய்யக்கூடாது. இது வீட்டில் சுப காரியங்களை உண்டு பண்ணிவிடும்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் இந்த தவறை மட்டும், தவறியும் செய்து விடாதீர்கள், உங்களிடம் தங்கம் சேரும் யோகம் இல்லாமலே போய் விடும்.

சில ஆண்கள் எப்போதுமே வீட்டில் கையிலி கட்டிக்கொண்டு இருப்பார்கள். அதாவது லுங்கி என்று சொல்லப்படும் ஆடையை ஆண்கள் 24 மணி நேரமும் அணிந்து கொண்டிருக்கும் போது அது அவர்களுக்கு சோம்பேறித்தனத்தை உண்டு பண்ணிவிடும். இது ஒரு விதமான தரித்திரம். லுங்கிக்கு பதில் ஷாக்ஸ் போன்ற ஆடைகளை பயன்படுத்துவது அவர்களுக்கு நன்மை தரக்கூடிய விஷயமாக அமையும். வீட்டிலேயே இருந்தாலும் சரி கையிலி அணிந்து கொண்டு இறை வழிபாடு செய்யாதீங்க. ஆண்கள் என்ற கர்வத்தோடு எல்லாம் நான்தான் என்ற எண்ணத்தில் மட்டும் ஆண்கள் இருக்கவே கூடாது என்ற இந்த கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -