நீங்கள் இந்த தவறை மட்டும், தவறியும் செய்து விடாதீர்கள், உங்களிடம் தங்கம் சேரும் யோகம் இல்லாமலே போய் விடும்.

- Advertisement -

தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் யாருமே இருக்க முடியாது. வீட்டில் ஒரு குண்டுமணி தங்கமாவது வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த காலத்தில் நாம் செய்யும் சில தவறுகளால் தான் அந்த தங்கமானது நம்மிடம் தங்காமல் சென்று விடுகிறது என்பதை யாரும் உணர்வதில்லை. நம்மை அறியாமலே நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அது தான் இந்த தங்கம் விஷயத்திலும் நம்மில் பலருக்கும் நடந்து கொண்டிருக்கிறது. எந்த மாதிரியான தவறுகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். இனி எதை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதை பற்றி எல்லாம் தெளிவாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

தங்கத்தை நாம் எந்த அளவுக்கு போற்றுகிறோமோ, மதிப்பளிக்கிறறோமோ அந்த அளவிற்கு தான் தங்கமும் நமக்கு முக்கியத்துவத்தை தந்து நம்மிடம் தங்கும். அந்த தங்கத்தை நாம் அலட்சியமாக பாவிக்கும்போது அதுவும் நம்மை அலட்சியப்படுத்தி சென்று விடும். இது ஒரு அடிப்படையான எல்லோருக்கும் பொருந்தக்கூடிய பொதுவான ஒரு தகவல்.

- Advertisement -

நாம் அணிந்திருக்கும் தங்க நகைகளை பொழுது சாய்ந்த பின் அதாவது வீட்டில் விளக்கு வைத்த பிறகு கழட்டவே கூடாது என்கிற ஒரு ஐதீகம் உண்டு. ஏதாவது விசேஷங்களுக்கு நாம் அப்போது தான் அணிந்து சென்று வந்து உடனே கழட்டி விடுவோம். அதுபோன்ற சமயங்களில் தவறில்லை. நம் உடலில் நிரந்தரமாக அணிந்திருக்கும் நகைகள் அதாவது கம்மல், மூக்குத்தி, கழுத்தில் அணியக்கூடிய செயின் இது போன்ற நகைகளை விளக்கு வைத்த பிறகு கழற்றி வைக்கக்கூடாது. அதே போல் வெள்ளி, செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் நகைகளை கழற்றவே கூடாது. அது பகலானாலும் சரி, இரவானாலும் சரி இந்த நாட்களில் நாம் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி வைக்க கூடாது.

நாம் அணிந்திருக்கும் நகையை பல்லால் கடிக்க கூடாது. அதாவது தங்கம் என்பது மகாலட்சுமியின் அம்சம் அந்த தங்கத்தை நாம் வாயில் வைத்து எச்சில் படுத்தும் போது அந்த தெய்வத்தையே எச்சில் படுத்துவது போல. சில நேரங்களில் கழுத்தில் மாட்டி இருக்கும் அந்த செயின் கொக்கி மோதிரம் வளைவு போன்றவைகளை இறுக்க சிலர் அதை பல்லால் கடிப்பதை பார்த்திருப்போம் அது போல செய்யக்கூடாது.

- Advertisement -

இதில் முக்கியமான ஒன்று தங்க நகைகளை யாரிடம் இருந்தும் இரவல் வாங்கவும் கூடாது நம் நகைகளை இரவல் கொடுக்கவும் கூடாது. நாம் அணிந்து கொண்ட நகையை இன்னொருத்தருக்கு இரவலாக தரும் போது நம்முடைய ஐஸ்வர்யங்களும் சேர்ந்து அவரிடம் சென்று விடும் என்பது ஐதிகம். ஏதோ நெருக்கடியில் வேறு வழி இல்லாமல் தருகிறீர்கள் அல்லது வாங்குகிறீர்கள் என்றால் அந்த நகைகளை உடனே அணியாமல் அல்லது நீங்கள் அணிந்த நகைகளை அப்படியே தராமல் ஒரு மஞ்சள் தண்ணீரில் அதை நனைத்த பிறகு துடைத்து தரலாம் முடிந்த அளவுக்கு தராமலும் வாங்காமலும் இருப்பதே நல்லது.

இதுவும் கொஞ்சம் நாம் இதுவரை அறிந்திராத ஒன்று தான். ஆனால் இது உண்மையான விஷயமும் கூட, நாம் நகைக்கென்று ஏதாவது கடைகளிலோ அல்லது தெரிந்தவர்களுடைய சீட்டு கட்டும் போது தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் கட்டி இருந்தால் நிச்சயமாக அதற்கு தங்கம் தான் வாங்க வேண்டும். அதை கட்டி முடித்த பிறகு மனது மாறி தங்கத்திற்கு பதிலாக வேறு ஏதோ மாற்றி வாங்க கூடாது. தங்கம் வாங்க கட்டிய பணத்தில் தங்கம் தான் வாங்க வேண்டும். ஏன்யென்றால் நீங்கள் தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்து இதை கட்ட தொடங்கிய உடனே தங்கமானது உங்களிடம் வர ஆர்வமாக இருக்கும். நீங்கள் அதை வேண்டாம் என்று சொல்லும் போது உங்களிடம் அது திரும்பவும் வராமலே போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டு.

இதையும் படிக்கலாமே: ஆயுத பூஜை செய்வதற்கு தேவையான பொருட்கள்

இந்தப் பதிவை படித்த பிறகு தங்கம் வாங்க முடியவில்லை என்று யோசித்துக் கொண்டே இல்லாமல், நாம் என்ன தவறு செய்ததால் தங்கம் நம்மிடம் சேரவில்லை என்றும் கொஞ்சம் சிந்தித்து, அந்த பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள். இதில் கூறியிருக்கும் தவறை நீங்கள் சரி செய்து கொண்டாலே போதும் உங்களுக்கு தங்கம் வாங்கும் யோகம் வரும் என்பதை உணர்ந்து செயல்பட்டு நல்ல முறையில் வாழ்க்கையில் வாழ்ந்து உயருங்கள்.

- Advertisement -