ஆண்களுக்கு ஏற்படும் எதிர்பாராத தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் தான்! இந்த தோல்வியை உடனடியாக சரி செய்ய என்ன செய்யலாம்?

men

பொதுவாகவே ஒரு வீட்டில் எதிர்பாராத பிரச்சனைகள் வருகிறது என்றால், அது ஆண்களுக்கு நேரம் சரியில்லாத சமயத்தில்தான். பெண்கள் குழந்தைகள் என்று வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் நேரம் சரியில்லாமல் போனால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் குடும்பத் தலைவனுக்கு, அந்த ஆண்மகனுக்கு நேரம் சரியில்லை என்றால், அந்த குடும்பமே படாதபாடு படும் என்பதும் ஒரு உண்மையான விஷயம். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, நேரம் சரியில்லாமல் போவதற்கு ஜாதக ரீதியாக ஒரு காரணம் இருக்கும். இரண்டாவதாக யார் கண்ணுக்கும் தெரியாத கண்திருஷ்டியும் ஒரு காரணம். ஆண்களுக்கு ஏற்படும் இந்த கண் திருஷ்டியை விரட்ட ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றி இந்த பதிவின் மூலம் நாம் கொள்ளப் போகின்றோம்.

sad

ஆண்களுக்கு இந்த கண் திருஷ்டி ஏற்படும்போது அந்த குடும்பத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கூட கஷ்டம் வரும். ஒரு வீட்டினுடைய ஆண் சோர்வடைந்தால், ஆண் மனம் தளர்ந்தால், ஆண்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் தானாகவே மனச்சோர்வு ஏற்பட்டுவிடும்.

நிறைய பேர் வீடுகளில் ஆண்களுக்கு திருஷ்டி கழிக்க வேண்டுமென்பதில் முன்னுரிமை கொடுக்கவே மாட்டார்கள். அதே பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில், திருஷ்டிக் கழிப்பதில் முதலில் முன்னுரிமை கொடுக்கப்படும். அழகாக அலங்காரம் செய்யும் பெண்களுக்கு மட்டும்தான் திருஷ்டி படும் என்பது இல்லை. உழைக்கும் ஆண்களுக்கும் அலங்காரம், செய்து கொள்ளாத ஆண்களுக்கும் கூட கண் திருஷ்டி விழும்.

sad-crying4

நன்றாக சாப்பிட்டுக்கொண்டு ஆரோக்கியமாக இருக்கக்கூடிய ஆண்களுக்கு திடீரென்று சாப்பிடவே பிடிக்காமல் போய்விடும். வாய் குமட்டல், தலைச்சுற்றல் இப்படிப்பட்ட தொந்தரவுகள் வரும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. கண் திருஷ்டி பட்ட அந்த ஆண், இல்லற வாழ்க்கையை சரியாக வாழவும் மாட்டார்கள். தேவையற்ற நட்பு வட்டாரம் சூழும். கெட்ட பழக்கங்கள் வரும். நல்ல பெயர் கெட்டுப் போகும்.

- Advertisement -

சரி, முன்னேற்றத்தை ஆரோக்கியத்தை தடைப்படுத்தக்கூடிய இந்த கண் திருஷ்டியை ஆண்களுக்கு எப்படி கழிப்பது. ஆண்களுக்கும் கல் உப்பு கொண்டு திருஷ்டி கழிக்கலாம். வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை கல் உப்பை எடுத்து ஆண்களுக்கும் சுற்றிப் போடுங்கள்.

santhanam

அதன் பின்பு ஆண்களுக்கு தினமும் நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம், செந்தூரம் இப்படி ஏதாவது ஒன்றை இட்டுக் கொள்ளும் பழக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். இது எதிர்மறை ஆற்றலை ஆண்களின் உடம்புக்குள் ஊடுருவ விடாமல் தடுக்கும் இதோடு சேர்த்து நெற்றியில் விபூதி குங்குமத்தை இட்டுக்கொள்வதற்கு முன்பு கட்டாயம் இந்த ஒரு பொருளையும் இட்டுக் கொண்டால் மிக மிக நல்லது.

thilagam

அரகஜா, கோரோசனை, ஜவ்வாது, இந்த 3 பொருட்களையும் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு, கலவையாக கலந்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தொட்டு கண்ணுக்கே தெரியாமல் உச்சந்தலையில் லேசாக தடவிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு நெற்றியிலும் லேசாக இட்டுக்கொண்டு, அதன் மேல் விபூதி சந்தனம் போன்ற பொருட்களை நெற்றியில் வைத்துக்கொண்டு, வெளியே சென்றாலே போதுமானது.

vasanai

ஆண்களும் இதை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். பெண்களும் இதை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கே தெரியாத பெரிய கவசமாக இந்த வாசனை திரவியங்கள் நம்மை பாதுகாக்கும். நல்லதே நடக்கும். முயற்சி செய்து பாருங்கள்.