ஆனி மாத ராசி பலன் – 2019

aani-month
- Advertisement -

மேஷம்

மேஷ ராசியினருக்கு பண வரவுக்குக் தடையேதும் இல்லை. சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நண்பர்கள் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை. கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். மாணவ மாணவியருக்கு படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அதிக செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

- Advertisement -

ரிஷபம்
Rishabam Rasi

ரிஷப ராசியினருக்கு பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனுக்குடன் சரியாகும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சற்று குறைவாகத்தான் இருக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது. கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.

மிதுனம்
Mithunam Rasi

மிதுன ராசி அன்பர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். பண வரவுகள் சராசரியாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். உடல் அசதியும், மனதில் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். கலைத்துறையினர் தங்கள் தொழிலில் உற்சாகத்துடன் செயல்படுவர். மாணவ மாணவியர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் கொடுக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் மன நிம்மதி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசியினருக்கு உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உடனுக்குடன் சரியாகும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் நிம்மதியாக இருப்பீர்கள். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லாபமும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். இந்த மாதம் பணம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொண்டு படிப்பார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்
simmam

சிம்ம ராசியினருக்கு சராசரியான அளவில் வருமானம் இருக்கும். சிலர் சுப காரிய முயற்சிகள் தொடர்பாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். தம்பதிகளிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான நிலை ஏற்படும். பிறருக்கு கொடுத்த கடன் இந்த மாதம் திரும்பக் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்க கூடும். ஒரு சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகக் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால் இந்த மாதம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்கும். வருமானமும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கிடைக்கும். மாணவ மாணவியர்க்கு மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைப்பதால் சந்தோஷம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி
Kanni Rasi

கன்னி ராசியினருக்கு சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் சற்று நிம்மதி இல்லாத நிலை காணப்படும். வழக்குகளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும். சகோதரர்கள் வகையில் அனுகூலம் இருக்காது. அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சக பணியாளர்கள் உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கலைத்துறையினர் வாய்ப்புகளாய் பெற பொறுமையுடன் அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறையும் என்பதால் பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் முழுகவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

துலாம்

Thulam Rasi

துலாம் ராசியினருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். கலைத்துறையினருக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமையுடன் இருப்பது அவசியம். மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

Virichigam Rasi

விருச்சிக ராசியினருக்கு பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சராசரியான வருமானம் தான் இருக்கும். மாணவ மாணவியர் உடல் நலன் சற்று பாதிக்கப்படும் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசியினருக்கு கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படிப்பார்கள். அதனால் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.

மகரம்

Magaram rasi

மகர ராசியினருக்கு பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். கண்களில் சிறுசிறு உபாதைகள் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

கும்பம்

Kumbam Rasi

கும்ப ராசியினருக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.

மீனம்

Meenam Rasi

மீன ராசியினருக்கு பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது. கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மகிழ்ச்சியான மாதம். தேவையான பணம் கிடைக்கும். விரும்பிய உயர் படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

மாத ராசி பலன், வார பலன், குழந்தைகளுக்கான சிறு கதைகள் உள்ளிட்ட பல தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -