நாளைய தினம் ஆனி உத்திரத்திற்கு சிவ பெருமானுக்கு உகந்த இந்தப் பொருட்களை ஆலயத்திற்கு வாங்கி கொடுத்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் நோய் நொடி இன்றி செல்வ செழிப்புடன் வாழலாம்.

Aani thirumanjanam
- Advertisement -

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. ஒரு சில மாதங்கள் தெய்வ வழிபாட்டிற்கான மாதங்களாகவும், சில மாதங்கள் முன்னோர்களின் கடமைகளை செய்வதற்கான மாதங்களாகவும் சாஸ்திரங்கள் நமக்கு வகுத்து கொடுத்திருக்கிறது. அந்தந்த மாதத்திற்கான வழிபாட்டினை முறைப்படி செய்யும் போது நம்முடைய வாழ்க்கையில் உள்ள கர்ம வினைகள் நீங்கி நோய் நொடி இன்றி வளமான வாழ்க்கை வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் தேவர்களுக்கும் ஒவ்வொரு மாதங்களில் ஒவ்வொரு காலங்கள் வழிபாட்டு காலங்களாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. தேவர்களின் காலை வழிபாட்டிற்கான காலமாக மார்கழி மாதத்தையும், மாலை வழிபாட்டிற்கான காலமாக ஆனி மாதத்தையும் மட்டுமே நம்முடைய வழிபாட்டிற்குரிய காலங்களாக எடுத்துக் கொள்கிறோம். அந்த வகையில் மாலை வழிபாட்டு காலமான இந்த ஆனி மாதத்தில் உள்ள ஆனி உத்திரம் குறித்த தகவலை தான் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் ஆனி மாதத்தில் வெப்பத்தின் தாக்கமானது அதிகமாகவே இருக்கும். இந்த காலத்தில் நடராஜர் பெருமானை குளிர்விப்பதற்காக சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சன அபிஷேகம் வெகு விமர்சையாக நடக்கும். திருமஞ்சனம் என்பது மகா அபிஷேகம் என்பது பொருள். இதுபோன்று பல்வேறு இடங்களில் உள்ள புகழ் பெற்ற அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு இன்றைய தினத்தில் அபிஷேக அர்ச்சனை ஆராதனைகள் போன்றவை விசேஷமாக நடைபெறும்.

இந்த காலங்களில் சிதம்பரம் சென்று நடராஜர் பெருமானை வழிபட முடிந்தால் சிறப்பு. அதை செய்ய முடியாதவர்கள் அருகில் உள்ள சிவாலயத்திற்கு காலையிலே குளித்து முடித்த பிறகு சொல்ல வேண்டும். அதன் பிறகு அன்றைய தினம் அங்கு நடக்கும் பூஜை அபிஷேகம் எல்லாவற்றிலும் கலந்து கொண்டு அங்கு நடக்கும் இந்த திருமஞ்சனத்தை தவறாது தரிசிக்க வேண்டும்.

- Advertisement -

அந்த நேரத்தில் திருமஞ்சனத்திற்கு தேவைப்படும் சிவனுக்கு உகந்த அபிஷேகப் பொருள்களில் உங்களால் முடிந்ததை வாங்கி கொடுக்கலாம். சந்தனம் பால், புனுகு பன்னீர் விபூதி, வில்வம், என உங்களால் இயன்றதை வாங்கி கொடுக்கலாம். இந்த அபிஷேகத்தினால் குளிர்விக்கப்படும் சிவபெருமானை தரிசிப்பதால் நம்முடைய கடுமையான வினைகள் எல்லாம் குறைவதோடு பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி யோகம், கணவன் மனைவி ஒற்றுமை, குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் என அனைத்து நலன்களையும் அருளையும் ஒன்றாக பெறலாம்.

அதே போல் உத்திரம் நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரியது. ஆனி உத்திரம் திருமஞ்சனத்தில் கலந்து கொள்ளும் போது சூரிய கிரகத்தினால் நமக்கு ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் நீங்கி, சூரிய பகவானுடைய அனுக்கிரகத்தையும் நம்மால் முழுமையாக பெற முடியும். வேலை வாய்ப்பு வருமானம் போன்றவற்றிற்கெல்லாம் அதிபதியான சூரிய பகவானின் அனுகிரகமும் கிடைக்கும் போது நம்முடைய தொழிலிலும் வருமானத்திலும் நல்ல முன்னேற்றமும் லாபமும் இதன் மூலம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் சம்பாதிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாய் அமையவும், வீட்டில் இருக்கும் தீய சக்தியை விரட்டவும் இந்த தூபத்தை போட்டால் போதும்.

ஆகையால் நாளைய தினத்தை தவற விடாமல் இந்த திருமஞ்சன அபிஷேகத்தில் கலந்து கொண்டு சிவபெருமான், சூரிய பகவான் இருவரின் அனுக்கிரகத்தையும், ஆசீர்வாதத்தையும் முதன்மையாக பெற்று நல்ல முறையில் வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -