ஆறுமுகனை நினைத்து, 6 வாரங்கள் இந்த மந்திரத்தை சொல்லி, இந்த தீபத்தை வீட்டிலிருந்தபடியே ஏற்றினால் போதும். சொந்த வீடு கட்டும் யோகம், உங்கள் வீடு தேடி வரும்.

aarumugan-deepam

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தாலும் சரி, அல்லது உங்களுடைய சொந்த வீட்டில், சொந்த நிலத்தில், சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். நிலத்தை வாங்கவும், நிலத்தை விற்கவும் இந்த பரிகாரம் துணைநிற்கும். எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், அது ஏறுமுகத்தில் அமைய, ஆறுமுகனின் வழிபாடு கைகொடுக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். அந்த ஆறு முகத்தானை வேண்டி தான் இந்த பரிகாரமும் சொல்லப்பட்டுள்ளது.

aarumugan

இந்த பரிகாரத்தை செய்ய நிச்சயமாக உங்களுடைய வீட்டில் ஆறுமுகம் கொண்ட, ஆறுமுகனின் திருவுருவப்படம் கட்டாயம் இருக்க வேண்டும். தினம்தோறும் அதிகாலை வேளையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் ஆறுமுகனுக்கு அரளிப்பூவை சூட்ட வேண்டும்.

இந்த பரிகாரத்தை தொடங்கும் கிழமை செவ்வாய் கிழமையாக இருக்க வேண்டும். கிழக்கு பார்த்தவாறு 6 மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு 6 தீபங்கள் ஏற்ற வேண்டும். அதன் பின்பு நீங்களும் கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு, பின் செல்லப்பட்டுள்ள மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் மட்டும் போதும். ‘ஆறுமுகம் அனுதினம் தரும் ஏறு முகம்’. அதன் பின்பு உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டம் தீர வேண்டும் என்றும், இல்லையென்றால் உங்களது வீடு கட்டும் ஆசை நிறைவேற வேண்டும் என்றும், முருகப் பெருமானை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தவரை காலை 8 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிடலாம். காலை செய்யவே முடியாது என்பவர்கள் மட்டும், மாலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் இந்த வழிபாட்டினை செய்து கொள்ளலாம்.

poojai arai

இந்த பூஜையை தொடங்கிய நாள் அன்று, முருகனுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வைப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும். அதன் பின்பு தொடர்ந்து வரும் நாட்களுக்கு உங்களால் முடிந்த சர்க்கரை சேர்த்த பால், வாழைப்பழம், பேரிச்சம்பழம் ஏதாவது ஒரு பிரசாதத்தை நிவேதனமாக வைக்கலாம்.

- Advertisement -

பரிகாரத்தை முடிக்கும் ஆறாவது நாளும் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வைக்கவேண்டும். இந்த 6 நாட்களும், முருகனுக்கு கட்டாயம் 6 தீபங்கள் ஏற்ற வேண்டும். அதன் பின்பு உங்களது கோரிக்கை நிறைவேறும் வரை, வாரம்தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளிலும், மாதம்தோறும் வரும் ஷஷ்டி திதியிலும் இதேபோல் பூஜையை முருகப் பெருமானுக்கு உங்களுடைய வீட்டிலேயே செய்து, மேலே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை உச்சரித்தால் போதும்.

neideepam

தொடர்ந்து 6 நாட்கள் ஆறு தீபத்தை ஏற்றி வைத்து, அதன் பின்பு செய்யக்கூடிய பூஜையில் 1 நெய் தீபம் மட்டும் முருகப்பெருமானுக்கு ஏற்றினால் போதும். குறிப்பிட்ட சில வாரங்கள் கணக்கு வைத்துக் கொண்டு, இந்த பூஜையை செய்து முடித்தாலும் சரி, அல்லது உங்களது கோரிக்கை நிறைவேறும் வரை இந்த பூஜையை செய்தாலும் சரி, நிச்சயமாக உங்களுக்கான பலனை அந்த முருகப் பெருமான் காட்டுவார் என்பதில் மட்டும் துளியளவும் சந்தேகம் கிடையாது. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு 6 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்தபோதே நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நாளை தை அமாவாசை! நீங்கள் செய்யும் பூஜையில் இந்த 1 பொருள் இருந்தாலே போதும். முன்னோர்கள் முழுமனதோடு நீங்கள் செய்கின்ற பூஜையை ஏற்றுக் கொள்வார்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.