ஏகாதசி என்பது பக்தர்களின் வாழ்க்கையில் மிகவும் பவித்திரமான நாளாகக் கருதப்படுகிறது. மாதம் தோறும் இருவேளை வரும் இந்த ஏகாதசி தினம், பெருமாளை தியானித்து வழிபடுவதற்கான அரிய வாய்ப்பை அளிக்கிறது. இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் உடல் சுத்தியும், மன அமைதியும் கிடைக்கிறது. ஆவணி மாதம் புதன்கிழமை வரக்கூடிய ஏகாதசி திதியில் உண்மையான பக்தியுடன் பெருமாளின் நாமத்தை ஜபிப்பதால், வாழ்வில் ஏற்படும் தடைகள் விலகி, ஆனந்தம் பெருகுகிறது. சகல செல்வங்களும் கிடைக்கப் பெற இந்த விரதத்தை எப்படி மேற்கொள்ளலாம்? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
ஏகாதசி நாளில் அதிகாலை முதலே அரிசி உணவைத் தவிர்த்து, எளிய உபவாசத்தை மேற்கொள்வது சிறந்தது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நாளில் காலை, மாலை இரு வேளைகளிலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது பகவத் கீதை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை அளிக்கிறது. “ஓம் நமோ நாராயணாய” என்ற சக்தி வாய்ந்த மந்திரத்தை தியானத்துடன் ஜபிப்பதனால், மனதிற்கு ஒருமைப்பாடு ஏற்பட்டு, ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.
அந்த நாளில் செய்யப்படும் தானங்களுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. பசித்தவர்களுக்கு உணவு அளிப்பதும், தானங்கள் செய்வதும், தேவையுடையவர்களுக்கு துணையாக இருப்பதும், எளியவர்களுக்கு அன்பு கொடுப்பதும் பெருமாளின் அருளைப் பெறச் செய்யும். பக்தியுடன் செய்யப்படும் சிறிய செயலும் அந்நாளில் பல மடங்கு பலன்களைத் தரும் என்று புராணங்கள் வலியுறுத்துகின்றன. ஏகாதசி நாளில் உங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும்.
ஏகாதசி விரதத்தைப் பின்பற்றுவதால் குடும்பத்தில் செல்வ வளம் பெருகும், தொழில், வியாபாரங்களில் முன்னேற்றம் கிடைக்கும், வீட்டில் அமைதி நிலைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் சண்டைகள், சிக்கல்கள் தீர்ந்து மனதிற்கு ஆனந்தம் கிடைக்கும். பசி என்று கேட்டு வருபவர்களுக்கு இந்த நாளில் இல்லை என்று கூறி அனுப்பாதீர்கள். உங்களிடம் இருப்பவற்றை கொடுத்து பசி ஆற்ற வேண்டும்.
மாதந்தோறும் வரக்கூடிய ஏகாதசி நாளில் பெருமாளை காலை மாலை இரண்டு வேளைகளிலும் பூஜையில் நிறுத்தி தீபங்கள் ஏற்றி வைத்து துளசி தீர்த்தம் படைத்து உங்களால் முடிந்த நைவேத்தியம் செய்து அல்லது கற்கண்டு வைத்து மனதார பிரார்த்தனை செய்து வழிபட வேண்டும். அன்றைய நாள் மனதை சாந்தமாக வைத்துக் கொண்டு, மௌனத்தை கடைபிடியுங்கள். தியானமும், அமைதியும் பெருமாளை உணர செய்யும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து அந்த நாளின் புண்ணியத்தை இரட்டிப்பாக சேர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
செப்டம்பர் மாதம் சிறப்பாக அமைய
மாலை அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்துவிட்டு வரலாம். மேலும் அன்றைய நாளில் விரதம் இருப்பதோடு மட்டுமல்லாமல் புராண கதைகளையும், பக்தி கதைகளையும் படித்து விரதத்தை நிறைவு செய்யுங்கள். மனமார ஏகாதசியில் பெருமாளை இப்படி வணங்கி, நம்பிக்கையுடன் இந்த விரதத்தை மேற்கொள்வதால் சகல செல்வங்களும், சுகங்களும் நிரந்தரமாக வாழ்வில் நிலைத்து நிற்கும். அதனால் வரக் கூடிய ஆவணி மாத சிறப்பு ஏகாதசியை தவறாமல் கடைப்பிடித்து, பெருமாளை பிரார்த்தித்து, அவரது அருளால் வாழ்வை சிறப்பாகவும், வளமாகவும் மாற்றிக் கொள்ளுங்கள்.