ஆவணி மாத ராசிபலன் 12 ராசிகளுக்குமான துல்லியமான கணிப்பு

aavani-matham
- Advertisement -

சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் இருந்து 17 ஆகஸ்டு 2021 அன்று சஞ்சரிக்கக்கூடிய ஒரு அற்புத மாதம் தான் ஆவணி மாதம். ஒரு வருடத்திற்கு பிறகு சூரியன் தனது சொந்த வீட்டிற்கு சஞ்சரிக்க உள்ளதால் பல ராசிகளுக்கும் பலவித நன்மைகள் உண்டாகும். இதனால் கிரகங்களில் ராஜாவான சூரியன் மிகவும் வலுப்பெற்று இருப்பார். அதுமட்டுமில்லாமல் சூரியனும் வியாழனும் எதிர் கொண்டு, சூரியனை சாதகமாக கொண்ட ராசிகள் மிகவும் பயன் பெறுவார்கள். அவ்வாறு ஆவணி மாதத்திற்கான 12 ராசிகளுக்கான பலன்கள்.

மேஷம்
உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் நிகழ்வதால் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். குடும்ப வாழ்க்கையில் நல்ல முடிவுகளை எடுக்கலாம். பிள்ளைகள் வழியில் இருந்து நல்ல செய்திகள் வரவிருக்கும். இருப்பினும் இந்த மாதத்தில் நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் காதல் விஷயங்களில் சில கருத்து வேறுபாடுகளையும் சில பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

- Advertisement -

ரிஷபம்:
உங்களுக்கு ஆவணி மாதம் அதிகம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். நன்மைகள் பல உண்டாகும். நல்ல வருமானம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். புத்திர யோகம் உண்டாகும். நன்மைகள் பல தானாகவே உங்களைத்தேடி வரும். பணவரவில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல்-வாங்கல் பணங்கள் உங்களை வந்தடையும். காதல் திருமணம் கைகூடும்.

மிதுனம்:
உங்கள் ராசிக்கு தைரியம் மற்றும் வலிமைக்கான மூன்றாம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் மிதுன ராசிக்கு இந்த மாதம் மிகவும் உகந்ததாக இருக்கும். உங்களின் வலிமை மற்றும் தைரியம் அதிகமாகும். வியாபாரம் மற்றும் தொழிலில் நீங்கள் நல்ல முடிவுகளை எடுக்கலாம். உங்களின் சகோதர, சகோதரிகளுக்கு உதவ முன் வரலாம். பொதுப் பணிகளைச் செய்வதில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். உங்கள் அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். மேலதிகாரியுடன் இனிமையான உறவு ஏற்படும்.

- Advertisement -

கடகம்:
உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டிற்க்கு சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் வாக்கிற்கு நிறைய பலன்கள் கிடைக்கும். மன நிம்மதியும், சந்தோஷமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும். பயணங்களின் மூலம் நன்மைகள் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும், தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் கிடைக்கும். கைக்கு வரும் பணத்தினை வீணாக்காமல் சேர்த்து வைக்க வேண்டும். உறவினர்களுக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள் தீர்ந்து வீட்டில் நல்ல விசேஷங்கள் நடைபெறும்.

சிம்மம்:
சூரியன் தனது வீடான சிம்மத்தில் இருப்பதால் உங்களின் தைரியம் அதிகரிக்கும். உங்களின் ஆளுமை செழித்து சமூகத்திலும் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் ஏதேனும் முக்கியமான முடிவுகளை எடுக்க குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஏதேனும் முதலீடு செய்வதில் திட்டமிட்டிருந்தால் அதுவும் நல்ல பலனையே கொடுக்கும். யோகா மற்றும் தியானம் செய்து வந்தால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மையாக அமையும்.

- Advertisement -

கன்னி:
இந்த மாதம் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். அரசாங்க வேலைகள் இழுபறியாக இருக்கும். தாய்வழி உறவினர்களால் பிரச்சனைகள் உண்டாகும். உங்களின் வாழ்க்கைத் துணையினால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். கையில் இருந்த பணமும் கரைய ஆரம்பிக்கும். கடன் வாங்கும் நிலைமையும் கூட வரலாம். நீண்டநாள் உங்களது நண்பர்களை திடீரென சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்:
சூரியன் உங்கள் ராசிக்கு பதினோராம் வீட்டில் சஞ்சரிப்பதால் அரசு தொடர்பான வேலைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. அரசியலில் உள்ளவர்களுக்கும் நல்ல பலனை கொடுக்கும். வெளி நாடுகளுக்கு வணிகம் தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கும் அவர்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்:
தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகப் பணியில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைக்கு மாற நினைத்தாலோ அல்லது புதிய தொழில் தொடங்க நினைத்தாலோ இந்த ஆவணி மாதம் உங்களுக்கு சாதகமாக அமையும்.

தனுசு:
இந்த மாதம் உங்களுக்கு மிகவும் மன அமைதி கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். கல்வி சம்பந்தமான வேலைகள் செய்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த மாதம் மிகவும் சாதகமான பலன்களைக் கொடுக்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை.

மகரம்:
உங்களுக்கு பண வரவு கணிசமாக உயரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களின் பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் சற்று பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கும்பம்:
செவ்வாய் மற்றும் சூரியன் இரு கிரகங்களும் 7-ஆம் வீட்டில் இருப்பதால் உடல் நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சிகிச்சைக்காக பணம் செலவிடும் சூழ்நிலை உண்டாகும். காதல் கைக்கூடி வரும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவினை கொடுக்கும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை உண்டாகும் சூழ்நிலையும் ஏற்படும். தொழில் மற்றும் அலுவலகத்தில் சற்று முன் யோசனையுடன் செயல்பட வேண்டியிருக்கும்.

மீனம்:
வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த அரசாங்க காரியங்கள் விரைவில் முடியும். தாய் மாமன் வழியில் நல்ல காரியங்கள் நடக்கும். மனைவியின் மூலம் பொருள் வரவு உண்டாகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

- Advertisement -