நாளை ஆவணி சங்கடஹர சதுர்த்தி – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு

vinayagar

12 மாதங்கள் கொண்ட தமிழ் வருடங்களில் ஐந்தாவதாக வருகின்ற மாதம் ஆவணி மாதம். தெய்வ வழிபாட்டுக்குரிய ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறக்கின்ற போது ஒரு மாத காலம் நடைபெறாத பல சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. காரணம் சூரிய பகவான் அவரது சொந்த வீடான சிம்ம ராசியில் ஆவணி மாதத்தில் பிரவேசிக்கும் காரணத்தினால் பல நன்மையான பலன்களை உண்டாக்கும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட ஆவணி மாதத்தில் வருகின்ற ஒரு தினம் தான் ஆவணி சங்கடஹர சதுர்த்தி. இந்த ஆவணி சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

vinayaga

பொதுவாக சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு தகுதி வாய்ந்த சில மாதங்களில் ஆவணி மாதமும் ஒன்றாக கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் பல தெய்வங்களுக்குரிய பண்டிகை தினங்கள் வருகின்றன. இந்த ஆவணி மாதத்தில் தெய்வங்களுக்குரிய வழிபாடு மற்றும் விரதம் இருப்பதால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிச்சயமான வெற்றியை பெறும் என்பது பெரியோர்களின் அனுபவமாக இருக்கிறது. ஆவணி மாதத்திலேயே வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் இந்த ஆவணி மாதத்தில் தான் விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆவணி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி பூஜையறையில் நைவேத்தியம் வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.

vinayagar

ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமண தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும். புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aavani sankatahara sathurthi in Tamil. It is also called as Aavani matham in Tamil or Aavani theipirai sathurthi in Tamil or Vinayagar valipadu in Tamil or Aavani matha sirappu in Tamil.