விளக்கு ஏற்றும் பொழுது இப்படி நடந்து விட்டால் அபசகுணமா என்ன? விளக்கு ஏற்றும் பொழுது தெரியாமல் கூட செய்யக்கூடாத இந்த தவறு என்ன?

mahalakshmi-vilakku
- Advertisement -

ஹிந்து சாஸ்திரத்தில் விளக்கு ஏற்றுவது என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. காலை, மாலை இரு வேளையும் எவரொருவர் இல்லத்தில் விளக்கு எரிகின்றதோ, அவர்களுடைய இல்லத்தில் வறுமையே அண்டாது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. செல்வ செழிப்பிற்கும், கடினமான பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கும் இறை வழிபாடு ரொம்பவே முக்கியம். இப்படி வழிபடும் பொழுது விளக்கு ஏற்றுவதில் உண்டாகக் கூடிய இந்த ஒரு விஷயம் அபசகுனமாக கருதப்படுகிறது. அது என்ன விஷயம்? அப்படி நடந்தால் நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் ஆன்மீக தகவலாக தெரிந்து கொள்ளப் போகிறோம்.

நீங்கள் பூஜை செய்யும் பொழுது விளக்கானது சுத்தம் செய்யப்பட்டு மஞ்சள் பொட்டுடன் அழகாக இருக்கும். ஒரு சிலர் பூஜை விளக்குகளை அடிக்கடி தேய்க்க கூடாது, குறிப்பாக காமாட்சி அம்மன் விளக்கை தேய்க்க கூடாது என்றெல்லாம் கூறுவர். பூஜை விளக்கை அடிக்கடி தேய்த்தால் குடும்ப பொருளாதாரமும் தேய்ந்து போய்விடும் என்று கூறப்படுவதும் உண்டு. இதனாலேயே மாதம் ஒருமுறை அவர்கள் பூஜை விளக்குகளை சுத்தம் செய்வார்கள், ஆனால் இது முறையல்ல!

- Advertisement -

வாரம் ஒரு முறையாவது பூஜை விளக்குகளை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமத்தை புதிதாக வைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதனால் உண்டாகக் கூடிய ஜோதி வெளிச்சத்தில் இறைவன் ஐக்கியம் ஆகிறார். அப்படி அல்லாமல் பூஜை விளக்கு சுத்தம் செய்யப்படாமல் தொடர்ந்து ஏற்றி வந்தால், குடும்பத்தில் வறுமை உண்டாகும், துரதிர்ஷ்டங்கள் துரத்தும். மேலும் பூஜை பொருட்களில் தூசுகள் இருந்தாலும் துரதிருஷ்டம் உண்டாகும் எனவே வாரம் ஒரு முறையாவது உங்களால் முடிந்த வரை பூஜை செய்ய போகும் பொருட்களை சுத்தம் செய்து புதிதாக மஞ்சள், குங்குமம் வைத்து பின்னர் வழிபட வேண்டும்.

இப்படி வழிபடும் பொழுது சில சமயங்களில் விளக்கில் இருக்கும் எண்ணெயில் கொசுக்கள், பூச்சிகள், எறும்பு போன்றவை மடிந்து இறந்து போய் இருக்கக்கூடும். இது போல இருக்கும் பொழுது அந்த எண்ணெயில் கண்டிப்பாக விளக்கு ஏற்றி வழிபடக் கூடாது என்று எச்சரிக்கிறது சாஸ்திரங்கள். விளக்கு ஏற்றும் எண்ணெயில் ஒரு உயிர் பலியாவது என்பது அபசகுனமான செயலாக கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரும் இறைவனால் படைக்கப்பட்டவை. அது மிகச் சிறிய எறும்பாக இருந்தாலும் சரி, வேறு எந்த உயிரினமாக இருந்தாலும் சரி. விளக்கில் இது போல உயிர் பலி ஏற்படுவது அபசகுனமாக முடிய கூடும். நீங்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேறாமல் போவதற்கும் வாய்ப்புகள் உண்டு எனவே முழு மனதோடு பூஜை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், பூஜையில் ஏற்றப்படும் விளக்கில் இருக்கும் எண்ணெயில் கவனம் செலுத்த வேண்டும்.

சிலர் எண்ணெயை பச்சை பசேலென பாசி பிடிக்கும் வரை வைத்து ஏற்றுவார்கள். இது போல கண்டிப்பாக செய்யவே கூடாது. எண்ணெய் எப்பொழுதும் அதன் நிறத்தில் இருந்து மாறக் கூடாது. நிறம் மாறினால் புதிதாக எண்ணெய் ஊற்றி தான் வழிபட வேண்டும். மிகுதியாக இருக்கும் எண்ணெயை சேகரித்து மீண்டும் அதே விளக்கில் ஊற்றி ஏற்றக் கூடாது. சேகரித்து வைத்த எண்ணெயை அகல் விளக்கில் ஊற்றி தனியாக ஏற்றலாம்.

- Advertisement -