அன்னை தெரசா வரலாறு | Annai Therasa history in Tamil

- Advertisement -

அன்னை தெரசா பற்றிய கட்டுரை | Annai Therasa varalaru

“அன்பு தான் உனது பலவீனம் என்றால் உலகில் மிகப்பெரிய பலசாலி நீ தான்” என்கிற வரியை உதிர்த்தவர் “அன்னை தெரேசா”. யாருமே நெருங்கி சென்று சிகிச்சை அளிக்க தயங்கிய தொழு நோயாளிகளிடம் தயங்காமல் சென்று, தன்னால் இயன்ற சேவைகளை செய்து புகழ்பெற்றவர் தான் அன்னை தெரேசா. அடிப்படையில் கிறிஸ்தவ மத அமைப்பின் கன்னியாஸ்திரி சேவையில் ஈடுபட்டாலும் பிற்காலத்தில் அனைத்து வகையான மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து உலகப் புகழ் பெற்ற அன்னை தெரேசா வரலாறு (Annai Therasa history in Tamil) குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

Annai Therasa history in Tamil

அன்னை தெரசா

பெயர்ஆக்னேஸ் கோன்யா போஜோஜியூ
மருவிய பெயர்அன்னை தெரசா
பிறப்புஆகஸ்ட் 26, 1910
பிறந்த இடம்ஸ்கோப்பியே
பெற்றோர்நிக்கோலாய் போஜோஜியூ, ட்ரெனபிள் போஜோஜியூ
துணைஇல்லை
பிள்ளைகள்இல்லை
பணிசமூக சேவை
சமயம்கிறிஸ்தவம்
தேசியம்இந்தியர்
இறப்புசெப்டம்பர் 5, 1997

அன்னை தெரசா பிறப்பு

அன்னை தெரசா அவர்கள் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியில் மாசிடோனியா நாட்டில் இருக்கின்ற “ஸ்கோப்பியே” எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் நிக்கோலாய் போஜோஜியூ என்பதாகும் தாய் பெயர் ட்ரெனபிள் போஜோஜியூ என்பதாகும். இவருக்கு ஒரு மூத்த சகோதரி மற்றும் ஒரு சகோதரர் உடன் பிறந்தனர். அன்னை தெரசா பிறந்த போது அவருக்கே பெற்றோர் இட்ட பெயர் “ஆக்னேஸ் கோன்யா போஜோஜியூ” என்பதாகும். அன்னை தெரசா பிறந்த மறு தினமான ஆகஸ்ட் 27ஆம் தேதி அவருக்கு கிறிஸ்தவ சம்பிரதாயபடி பெயர் சூட்டபட்டது. எனவே அன்னை தெரசா ஆகஸ்ட் 27ஆம் தேதியையே தன்னுடைய பிறந்த நாளாக கருதினார். அன்னை தெரசாவிற்கு 8 வயதாக இருக்கும் பொழுது அவரது தந்தை காலமானார். தனது 18 வயது வரை தாயார் மற்றும் உடன்பிறந்த சகோதர, சகோதரியுடன் வாழ்ந்து ஸ்கொப்பியே நகரில் வந்தார்.

- Advertisement -

அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு (Annai Therasa history in Tamil)

சிறுவயதிலிருந்தே கிறிஸ்தவ மத நம்பிக்கைகளில் தீவிரமான ஈடுபாடு கொண்டு வளர்ந்த அன்னை தெரசா அவர்கள், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகள் செய்த சேவைகள் குறித்து கேள்விப்பட்டு, அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள பெரும் ஆர்வம் கொண்டார். அவருக்கு 12 வயதாக இருக்கும் பொழுது, தனது வாழ்க்கையை கிறிஸ்தவ மதத்திற்காகவும் பிறருக்கு சேவை புரிவதற்காகவும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என விரும்பி தன்னுடைய 18 ஆவது வயதில் அயர்லாந்து நாட்டில் இருந்த “சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ” என்கிற கிறிஸ்தவ மத அமைப்பில் கன்னியாஸ்திரியாக தன்னை இணைத்துக் கொண்டார்.

mother teresa history in Tamil

1929 ஆம் ஆண்டு தான் பணியாற்றிய கிறிஸ்தவ அமைப்பு மூலமாக முதன் முதலில் இந்தியாவிற்கு அன்னை தெரேசா வருகை தந்தார். டார்ஜிலிங் பகுதிக்கு அன்னை தெரசா சென்று தனது கிறிஸ்தவ மத பணிகளில் ஈடுபட்ட அதே நேரத்தில், வங்காள மொழியை நன்கு பேச, எழுத கற்றறிந்தார். பிறகு அதே பகுதியிலிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிந்தார். 1937 ஆம் ஆண்டு கிறிஸ்தவ மத சம்பிரதாயத்தின் படி கன்னியஸ்திரியிலிருந்து அன்னை நிலையை அடைந்த தெரேசா அவர்கள் முதன் முதலாக தனக்கான கிறிஸ்தவ மத பெயராக “தெரசா” என்பதை தேர்ந்தெடுத்து சூட்டிக் கொண்டார்.

- Advertisement -

அன்னை தெரேசாவின் சமூக சேவை

ஆசிரியராக பணிபுரிந்து வந்தாலும் அன்னை தெரசா (Mother Teresa history in Tamil) தான் வாழ்ந்த மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா நகரை சுற்றி இருந்த சேரி பகுதிகளில் நிலவிய வறுமையை கண்டு வருந்தினார். எனவே 1944 ஆம் ஆண்டு தான் செய்து வந்த ஆசிரியர் பணியில் இருந்து விலகிய அன்னை தெரேசா, ஏழை மக்களுக்கு சேவை செய்வதற்காக 1946 ஆம் ஆண்டு செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து, செவிலியர் பணியை கற்றுத்தேர்ந்தார்.

Annai therasa history in Tamil

1949 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள மோதிஜில் என்கிற பகுதிக்கு சென்று அங்கிருக்கும் குழந்தைகளின் கல்வி தேவைக்காக பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தலானார். 1950 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரில் இருக்கின்ற ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைமை பேரவை அன்னை தெரேசாவிற்கு நிதி உதவி பெற்று சேவை செய்யும் கிறிஸ்தவ மத அமைப்பை தொடங்க அனுமதி வழங்கியது. பிறகு அதே ஆண்டு கொல்கத்தாவின் காளிகட் பகுதியில் “நிர்மல் ஹ்ரிதை” என்கிற கிறிஸ்தவ அமைப்பை தொடங்கி கதைகள் ஏழைகள் நோயற்றவர்களுக்கு சேவைகளை செய்ய தொடங்கினார்.

- Advertisement -

கொல்கத்தாவின் சாந்தி நகர் என்கிற பகுதியில் தொழு நோயாளிகளுக்கான ஒரு மருத்துவ சேவை மையத்தை தொடங்கினார். தொழு நோயாளிகளுக்கு என இயங்கிய இந்த மருத்துவ சேவை மையம் பிற்காலத்தில் வெனிசுலா, தான்சானியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலும் அன்னை தெரசாவின் கிறிஸ்தவ சேவை அமைப்பால் துவங்கப்பட்டது.

mother Teresa varalaru in Tamil

1982 ஆம் ஆண்டு பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரை முற்றுகையிட்டு கடுமையாக தாக்கியது இஸ்ரேலிய இராணுவம். அந்த முற்றுகையில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பாலஸ்தீனிய படைகளிடம் அன்னை தெரேசா அவர்கள் தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி, நகருக்குள் மாட்டிக்கொண்டு தவித்த 37 குழந்தைகளை காயம் இன்றி பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தார். 1988 ஆம் ஆண்டு அர்மேனியா நாட்டில் நிகழ்ந்த பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தானே சென்று தன்னாலான உதவிகளை செய்தார்.

இப்படி உலகெங்கிலும் வறுமை, போர், பஞ்சம், பூகம்பம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்ட பொழுது பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக சென்று, தன்னுடைய சேவை அமைப்பின் மூலம் பல உதவிகளை செய்தார். 2007 ஆம் ஆண்டின் கணக்குப்படி அன்னை தெரசா உருவாக்கிய “மிஷனரி ஆப் சாரிட்டிஸ்” என்கிற அமைப்பு உலகில் 120 நாடுகளில் செயல்பட்டு கொண்டிருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.

mother Teresa biography in Tamil

அன்னை தெரசா மனிதநேயம்

நோய் வறுமை போன்ற காரணங்களினால் துன்பப்படுகின்ற சிறு வயது குழந்தைகள், முதியோர்கள் போன்றவர்களின் துயரங்களை போக்க அன்னை தெரசா அவர்கள் தான் தொடங்கிய அமைப்பிற்கு தேவையான நிதியைப் பெற தினந்தோறும் வெளியில் சென்று காலை முதல் மாலை வரை பொதுமக்களிடம் நிதி வசூல் செய்ய செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தார்.

ஒருமுறை அன்னை தெரேசா அவர்கள் நிதி வசூலிக்க சென்று, ஒரு நபரிடம் நிதிக்காக கையேந்திய பொழுது அவர் கோபத்தில் அன்னை தெரசா அவர்களின் கைகளில் எச்சிலை காரி உமிழ்ந்தார். இதைக் கண்டு சுற்றிலும் நிறைந்தவர்கள் திகைத்தாலும், அன்னை தெரேசா அவர்கள் சிறிதும் கோபப்படாமல் அந்த எச்சில் துப்பிய நபரிடம் “நீங்கள் உமிழ்ந்த எச்சிலையை எனக்காக நான் வைத்துக் கொள்கிறேன். துயரப்படுகின்ற ஏழைக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்” என கேட்க அந்த நபர் மிகவும் கூனிக் குறுகி, அன்னை தெரேசாவிடம் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு தன்னால் இயன்ற நிதி உதவியை அளித்தார்.

Annai Therasa history in Tamil

 

அன்னை தெரேசா சாதனைகள்

உலகிலேயே மனித குலத்திற்கு சேவைகள் செய்ததற்காக அதிக அளவு விருது பெற்ற நபராக அன்னை தெரேசா விளங்குகிறார். 1962 ஆம் ஆண்டு அன்னை தெரசாவின் சேவைகளை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. அதே ஆண்டு அவரின் சேவைகளை பாராட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமோன் மக்சேசே அமைப்பு அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. 1969 ஆம் ஆண்டு சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்டது.

1971 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவின் தலைமை குருவான போப் பன்னிரண்டாம் ஜான்பால் அமைதி விருது பெற்றார் அன்னை தெரசா. 1973 ஆம் ஆண்டு “டெம்பிள் ரன்” பரிசு அன்னை தெரசா பெற்றார். 1975 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஸ்வய்ட்டர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு டெரிஸ் அவார்ட் விருது வழங்கப்பட்டது.

Annai therasa history in Tamil

1978 ஆம் ஆண்டு மனித நேயம் மற்றும் சகோதரத்துவத்திற்கான பால்சன் அமைதி விருது அன்னை தெரேசாவிற்கு வழங்கினர். 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் “பேட்ரோனல் மெடல்” என்கிற விருது மற்றும் அதே ஆண்டு மனித குல சேவைக்கான பிரிவில் விருதுகளில் மிக உயர்வாக கருதப்படுகின்ற நோபல் பரிசு அன்னை தெரேசாவிற்கு வழங்கி கௌரவித்தது ஸ்வீடன் அரசு.

1980 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அன்னை தெரேசாவுக்கு வழங்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு காமன்வெல்த் நாடுகளின் மிக உயரிய விருதான “ஆர்டர் ஆப் மெரிட்” விருது. 1985 ஆம் ஆண்டு அமெரிக்காவின் “பிரசிடென்சியல் ஆப் மெரிட்” விருதும் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது.

1994 ஆம் ஆண்டு அன்னை தெரசா அவர்கள் பிறந்த நாடான அல்பேனியா “கோல்டன் ஹானர் ஆஃப் த நேஷன்” எனப்படும் அல்பேனிய நாட்டின் உயரிய விருதை அன்னை தெரேசாவுக்கு வழங்கி அவரை கௌரவித்தது. 1995ஆம் ஆண்டு அன்னை தெரேசா அவர்கள் குரோஷியா நாட்டின் ராணி ஹெலினா விருது பெற்றார்.

அன்னை தெரேசா இறப்பு

தன் வாழ்நாள் முழுவதும் உலகெங்கிலும் இருந்த ஏழைகள், நோயாளிகளுக்கு ஓடோடி சென்று சேவை செய்த அன்னை தெரேசாவின் உடல் நிலை அடிக்கடி பாதிப்பிற்குள்ளானது. எனினும் தனது முதுமையின் காரணமாக 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் ஏற்படுத்திய கிறிஸ்தவ சேவை அமைப்பின் தலைமை பதவியில் இருந்து விலகினார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்னை தெரேசா அவர்கள் தனது 87 வது வயதில் மேற்குவங்க மாநிலம் தலைநகரான கொல்கத்தாவில் காலமானார்.

அன்னை தெரசா புனிதர் பட்டம்

கிறிஸ்தவ மத நம்பிக்கைகளின் அடிப்படையில் கிறிஸ்தவ மதத்தின் பேராயர்கள் அல்லது கன்னியஸ்திரிகள் புனிதர் பட்டம் பெற, அவர்கள் இறந்த பிறகு அவர்களை வழிபடும் கிறிஸ்தவ பக்தர்களின் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்த வேண்டும் என்பது விதி. அதனடிப்படையில் பல கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களின் வாழ்வில் அன்னை தெரேசா அவர்களின் அருட்கடாசத்தால் அற்புதங்கள் நிகழ்ந்ததை குறித்து இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரத்தில் இருக்கின்ற ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை பேரவைக்கு கிறிஸ்தவ மத தலைவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.

அதனடிப்படையில் அன்னை தெரேசா அவர்கள் இறந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி ரோம் நகரில் உள்ள வாட்டிகன் சதுக்கத்தில், பல லட்சக்கணக்கான கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் முன்னிலையில் அன்னை தெரேசாவிற்கு அப்போதைய போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார்.

English overview: Here we have Annai Therasa history in Tamil. We can also say Annai Therasa varalaru in Tamil or Mother Teresa history in Tamil or Annai Theresa biography in Tamil.

- Advertisement -