டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு | Dr Radhakrishnan history in Tamil

dr radhakrishnan history in tamil
- Advertisement -

டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு

மனிதனாக பிறந்தவர்களுக்கு கல்வி அவசியம். அந்த கல்வியை நமக்கு போதிப்பவர்கள் ஆசிரியர்கள். இறைவனுக்கு நிகரான உயரிய இடத்தை கொண்ட ஆசிரியர்களை போற்றும் ஆசிரியர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் கொண்டாடுகின்றனர். அந்த ஆசிரியர் தினம் யாருடைய பிறந்தநாள் என கேட்டால் அனைவரும் மறைந்த முன்னாள் இந்திய குடியரசு தலைவர் “டாக்டர். சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன்” அவர்களின் பிறந்த தினம் என கூறி விடுவார்கள். அந்த வகையில் டாக்டர். சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு (Dr. Radhakrishnan history in Tamil), அவரின் சாதனைகள் போன்ற பல்வேறு தகவல்களை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

dr radhakrishnan history in tamil

பெயர்டாக்டர். சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன்
பிறப்பு செப்டம்பர் 5, 1888 ஆம் ஆண்டு
பிறந்த இடம்திருத்தணி,தமிழ்நாடு
வாழ்க்கை துணை பெயர்சிவகாமு
பணிபேராசிரியர், இந்திய குடியரசு தலைவர்
எழுதிய நூல்கள்கிழக்கு மதங்கள் மற்றும் மேற்கத்திய சிந்தனை, ஒரு நோக்கத்துடன் வாழ்வது உட்பட 18 நூல்கள்.
இறப்புஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பு

டாக்டர். சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போதைய திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற புகழ்பெற்ற “திருத்தணி” எனும் ஊரில் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பிறந்தார். சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பூர்வீக ஊர் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் இருக்கின்ற நெல்லூர் மாவட்டத்தில் உள்ள “சர்வேபள்ளி” ஆகும். அதை குறிக்கும் விதமாக அவருக்கு சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் என்கிற பெயர் உண்டானது. திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது குழந்தை பருவத்தை திருத்தணி மற்றும் திருப்பதி நகரங்களில் கழித்தார். ராதாகிருஷ்ணனின் தந்தை அக்காலத்திய ஜமீன்தார் நிர்வாகத்தில் உதவி வருவாய் அலுவலராக பணிபுரிந்தார்.

- Advertisement -

திருத்தணி, திருப்பதி மற்றும் வாலாஜாபேட்டை ஆகிய நகரங்களில் பள்ளிக்கல்வியை முடித்த ராதாகிருஷ்ணன் அவர்கள். தனது 16 வது வயதில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து கலை மற்றும் தத்துவ கல்வியில் பட்டம் பெற்றார். பின்பு அதே கல்லூரியில் முதுகலை பற்றமும் பெற்றார்.

Dr Radhakrishnan biography in Tamil

டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் தன்னுடைய 16 வது வயதில் தனது தூரத்து உறவு பெண்ணான “சிவகாமு” என்பவரை மணந்தார். இந்த தம்பதிகளுக்கு ஐந்து மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர். ராதாகிருஷ்ணன் அவர்களின் மகனான திரு. கோபால் அவர்கள் பிற்காலத்தில் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியராக திகழ்ந்தார். இந்த தம்பதிகளின் 53 ஆண்டுகால இல்வாழ்க்கைக்கு பிறகு 1956 ஆம் ஆண்டு சிவகாமு காலமானார்.

- Advertisement -

டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி பணி

1909 ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் துறை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பிறகு 1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ இயல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1921 ஆம் ஆண்டு கல்கத்தா பலகை கழகத்தின் தத்துவவியல் துறையின் பேராசிரியராக டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் கல்வி சேவையை பாராட்டி, அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு இங்கிலாந்து அரசரின் சிறப்பு பட்டம் வழங்கி கவுரவித்தது. எனினும் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இங்கிலாந்து அரசு அவருக்கு அளித்த பட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டார்.

தத்துவவியல் துறையில் பல ஆய்வுகளை செய்து புத்தகங்களை வெளியிட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுவதற்காக 1936 மற்றும் 1937 ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது. 1939 ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவராக பதவி ஏற்று 1948 ஆம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார்.

- Advertisement -

dr radhakrishnan history in tamil

டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசியல் வாழ்க்கை (Dr Radhakrishnan history in Tamil)

1947 ஆம் ஆண்டு இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.நா. சபையின் “யுனெஸ்கோ” எனப்படும் உலக பாரம்பரிய அறிவியல் மற்றும் கலாச்சார பாதுகாப்பு அமைப்பில் இந்திய நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டார். அதே காலகட்டத்தில் ரஷ்ய நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டு, அந்தப் பணியையும் சிறப்பாக செய்தார். அப்பொழுதைய ரஷ்ய நாட்டின் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் அவர்களை சந்தித்து உரையாடிய ஒரே இந்திய தலைவர் என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் புகழப்பட்டார்.

1952 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 1962 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் இரண்டாவது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 முதல் 1967 வரை ஐந்தாண்டு காலம் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் செயல்பட்டார்.

Dr Radhakrishnan katturai in Tamil

ஆசிரியர் தினம் வரலாறு

இந்திய நாட்டில் ஆசிரியர் தினம் என்பது பேராசிரியரும், இந்திய நாட்டின் குடியரசு தலைவருமான டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் 5 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற ராதாகிருஷ்ணன் அவர்களின் மாணவர்கள் மற்றும் நண்பர்கள், அவரின் பிறந்த நாளை சிறப்பான முறையில் கொண்டாட தங்களை அனுமதிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதை கேட்ட ராதாகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை தனக்கான தனிப்பட்ட கொண்டாட்டமாக இல்லாமல், தான் செய்த புனிதமான ஆசிரியர் தொழிலுக்கு சிறப்பு செய்யும் வகையில் அன்றைய தினத்தை அவர்கள் தங்களின் ஆசிரியர்களை கௌரவிக்கும் தினமாக கொண்டாடுங்கள் என அறிவுறுத்தினார். அதன்படியே டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக இன்று வரை கொண்டாடப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை கௌரவிக்கும் விதமாக 1967ஆம் ஆண்டு அவரின் உருவம் பொறித்த தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டது.

dr radhakrishnan history in tamil

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியர்களுக்குரிய தினமாக டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்கள் பிறந்த செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுவதை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு முதல் “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உறுதுணை புரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் தனது கரங்களால் இந்த விருதுக்கு தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாதனைகள்

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்கு 16 முறை சிபாரிசு செய்யப்பட்டார். மேலும் 11 முறை அமைதிக்கான நோபல் பரிசு பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார். இங்கிலாந்து, மெக்ஸிகோ ஜெர்மனி, அமெரிக்கா நாடுகளின் கௌரவ விருதுகளை டாக்டர். ராதாகிருஷ்ணன் பெற்றிருக்கிறார். குடியரசு தலைவர் ஆன பிறகு பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த ராதாகிருஷ்ணன் அந்த நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உறவுகள் பலப்படும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

Dr Radhakrishnan varalaru in Tamil

சிறந்த இலக்கியங்களுக்காக வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது 1968 ஆம் ஏற்படுத்தப்பட்டது. இந்த விருதை முதன் முதலில் பெற்றவர் என்கிற பெருமைக்குரியவர் டாக்டர். ராதாகிருஷ்ணன். இந்து மத தத்துவங்கள், வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டு கொண்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், மேற் சொன்ன தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு 18 நூல்களை எழுதி உள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் பொன்மொழிகள்

  1. கலாச்சாரங்களுக்கிடையே பாலம் கட்டுபவை புத்தகங்கள்.
  2. மதம் என்பது நடத்தையே தவிர வெறும் நம்பிக்கை அல்ல
  3. ஒரு புத்தகத்தை வாசிப்பது நமக்கு தனிமையில் பிரதிபலிப்பும், மகிழ்ச்சியும் தரும்.
  4. நம்மிடம் இருக்கின்ற மனித வாழ்க்கை, மனித வாழ்க்கைக்கான மூலப் பொருள் மட்டுமே.
  5. வாழ்க்கையை ஒரு தீமையாக பார்ப்பதும், உலகை ஒரு மாயையாக பார்ப்பதும் உனது நன்றியின்மையாகும்.
  6. மனிதன் ஒரு முரண்பாடான உயிரினம்.
  7. அறிவு நமக்கு சக்தியை தருகிறது. அன்பு நமக்கு முழுமையை தருகிறது.
  8. அறிவியலின் எல்லை எங்கு முடிகிறதோ, அங்கு தான் ஆன்மீகத்தின் எல்லை தொடங்குகிறது.
  9. நமக்கு எல்லாம் தெரியும் என நாம் நினைக்கும் பொழுது கற்றுக் கொள்வதை நிறுத்தி விடுகிறோம்.
  10. நல்ல பழக்கங்களையும் நாகரிகமான நடத்தையும் கொண்டுள்ள பண்பான மக்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாகும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவு தினம்

இந்திய நாட்டின் குடியரசு தலைவர், பேராசிரியர், எழுத்தாளர், தத்துவ அறிஞர் போன்ற பன்முக தன்மைகள் கொண்ட டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் வசித்து வந்த நிலையில் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி தனது 86 ஆவது வயதில் காலமானார். ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு தினம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கடைபிடிக்கப்படுகிறது. 1989 ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்திய அரசு அவரின் உருவம் பொதிந்த மற்றொரு தபால் தலையை வெளியிட்டது.

English Overview: Here we have Dr Radhakrishnan history in Tamil, We can also say Dr Radhakrishnan varalaru in Tamil or Dr Radhakrishnan biography in Tamil or Dr Radhakrishnan katturai in Tamil.

- Advertisement -