கரிகால சோழன் வரலாறு | Karikala cholan history in Tamil

Karikala cholan history in Tamil
- Advertisement -

கரிகால சோழன் வாழ்க்கை வரலாறு

Karikala cholan history in Tamil: சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கற்பாறைகளைக் கொண்டு கல்லணை கட்டி நீர்ப்பாசனத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தார் என்கிற பெருமை கொண்ட ஒரு அரசனாக திகழ்பவர் “கரிகால சோழன்” ஆவார். உலகின் மிகப் பழமையான அணைகளில் ஒன்றாக கருதப்படும் கல்லணையை கட்டிய முற்கால சோழர்களில் ஒருவரான இந்த கரிகால சோழன் என்பவர் தான் தனக்கு பிறகான காலத்தில் சோழ வம்சம் மிகப்பெரும் சக்தி வாய்ந்த அரசாக மாற அடித்தளம் அமைத்தார் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் கரிகால சோழனின் வரலாறு மற்றும் அவர் குறித்த சிறப்பு தகவல்களை குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Karikala cholan history in Tamil

கரிகால சோழன்

பெயர்கரிகால் சோழன்
பிறந்த இடம்உறையூர்
பெற்றோர்இளஞ்சேட்ச்சென்னி - வேளிர் குல பெண்
வேறு பெயர்கள்திருமாவளவன், பெருவளத்தான்
வாழ்ந்த காலம்கி.மு. 270 ஆண்டு முதல் கி.பி. 180 ஆண்டு வரை
பணிசோழ வம்ச அரசர், கல்லணை கட்டியவர், இலங்கையை வென்றவர்
மகன்கள் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி
மகள்ஆதிமந்தி
இறந்த இடம்குராப்பள்ளி

கரிகால சோழன் பிறப்பு

முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்ற சோழ மன்னரான கரிகால சோழன், சோழ நாட்டு தலைநகரமாக விளங்கிய உறையூரில் “இளஞ்சேட்ச்சென்னி” என்கிற அரசனுக்கும் வேளிர் குல இளவரசிக்கும் மகனாக பிறந்தார். கரிகால சோழனின் காலம் என்பது கி.மு. 270 முதல் கி.பி. 180 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

- Advertisement -

கரிகால சோழன் இயற்பெயர்

கரிகால சோழனை கொல்ல, அவரது அரசியல் எதிரிகள் ஏற்படுத்திய தீயல் இருந்து தப்பிய கரிகால சோழன் அந்த தீயில் தனது இரு கால்களும் தீக்காயமடைந்து கருகி, கருத்து போனதால் “கரிகாலன்” என்கிற பெயர் அவருக்கு உண்டாகி காலப்போக்கில் அவரை “கரிகாலன்” என்றும் “கரிகால சோழன்” எனவும் அனைவரும் அழைக்கலாயினர்.

Karikala cholan varalaru in Tamil

கரிகால சோழனுக்கு “திருமாவளவன், பெருவளத்தான்” (karikala cholan real name) என்பன போன்ற வேறு பல பெயர்களும் உண்டு சோழ அரச வம்சத்தை சிற்றரசு நிலையிலிருந்து வடக்கே காஞ்சி முதல் தெற்கே இலங்கை வரை ஆட்சி புரிந்த பேரரசாக மாற்றிய பெருமை கரிகால் சோழனையே சாரும் என வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

கரிகால சோழனின் வரலாறு – Karikala cholan history in Tamil

கரிகால சோழன் குறித்த சரியான ஆதாரப்பூர்வமான வரலாறு இன்றளவும் கிடைக்கவில்லை. எனினும் ஒரு சில சங்க கால இலக்கியங்களின் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்த பொழுது கரிகால சோழனின் தந்தையான சிற்றரசரான இளஞ்செட்ச்சென்னி வட இந்தியாவின் வலிமை வாய்ந்த பேரரசாக திகழ்ந்த மௌரிய பேரரசின் தென்னக விஸ்தீரிப்பை தடுத்து நிறுத்திய பெருமை கொண்டவர் ஆவார் என கூறப்படுகிறது. கரிகால சோழன் தாய் வயிற்றில் கருவுற்றிருந்த சமயத்தில் அவரது தந்தையான இளஞ்சேட்ச்சென்னி போர்க்களத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. அரச வாரிசு இல்லாமல் இளஞ்சேட்ச்சென்னி இறந்ததால், அவரது நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்தது. எனவே கரிகால சோழனின் தாயார் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக அந்த நாட்டை விட்டு வெளியேறி தற்போதைய கரூர் பகுதியில் மறைந்து வாழ்ந்தனர்.

கரிகாலன் பிறந்த நாட்டில் நீடித்த அரசியல் குழப்பங்கள் தீர்ந்த பிறகு, தங்கள் நாட்டை ஆள ஒரு வாரிசை தேர்ந்தெடுக்க ஒரு யானையிடம் மாலை கொடுத்து, அந்த மாலையை அந்த யானை யார் கழுத்தில் போடுகின்ற போது அவரே தங்கள் நாட்டு அரசனாக தேர்ந்தெடுக்க எண்ணி யானையை அனுப்பியதாகவும், அப்பொழுது அந்த யானை நீண்ட தூரம் பயணம் செய்து கரூர் பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பலம் கொண்ட சிறுவனின் கழுத்தில் அந்த மாலையை யானை போட்டதாகவும் அந்த சிறுவன் தான் கரிகால சோழன் என ஒரு வகை கருத்து கூறப்படுகின்றது.

- Advertisement -

தனக்கு அரசாட்சி உரிமை கொண்ட நாட்டிற்கு கரிகாலன் திரும்பிய பொழுது அவரது அரசியல் எதிரிகள் கரிகால சோழனை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், எனினும் மக்களிடத்தில் கரிகால சோழனுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு உயர்ந்த கண்டே செல்வதை எண்ணி பயந்த அவரது எதிரிகள் கரிகால சோழனை கொல்ல முடிவு செய்து,, அவர் இருந்த சிறைக்கு தீ வைத்ததாகவும், எனினும் தனது சாதுரியத்தால் சிறையில் இருந்து கரிகாலன் தப்பி சென்றதாகவும், அப்படி தப்பி செல்லும் பொழுது தீயில் அவரது கால்கள் கருகி விட்டதாகவும், இதன் காரணமாகவே அவருக்கு “கரிகாலன்” என்கிற பெயர் உண்டானது எனவும் கூறப்படுகின்றது.

Karikala cholan history in Tamil

கரிகால சோழன் குடும்பம்

கரிகால சோழன் வேளிர் குலப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு நன்முறையில் வாழ்ந்ததாகவும். அவருக்கு “நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி” என்கிற இரண்டு மகன்களும், “ஆதிமந்தி” என்கிற ஒரு மகள் பிறந்ததாகவும் வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெண்ணிப்போர்

கரிகால சோழனின் வாழ்வில் திருப்புமுனை நிகழ்வாக அமைந்தது வெண்ணி போர் ஆகும். தற்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்ற கோயில்வெண்ணி எனப்படுகின்ற வெண்ணி எனும் இந்த பகுதியில் கரிகால சோழனை எதிர்த்து பாண்டிய மன்னன், சேர மன்னனான உதயன் சேரலாதன் மற்றும் 11 சிற்றரசர்கள் ஒன்று திரண்டு கரிகால சோழனுக்கு எதிராக போர் புரிய படை திரட்டி வந்தனர். எனினும் ஈடு இணையற்ற பராக்கிரமத்தாலும், போர் தந்திரங்களும் கொண்டு போர் புரிந்த கரிகால சோழனிடம் அத்தனை பேரும் தோல்வியுற்றனர்.

இந்த வெண்ணிப்போரில் கரிகால சோழனிடம் தோற்ற சேர மன்னனான உதயன் சேரலாதன் தனது முதுகில் காயம் ஏற்பட்டதால் வெட்கி, உயிர் வாழ விரும்பாமல் வடக்கிருந்து தனது உயிரை போக்கிக் கொண்டதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. கரிகால சோழனின் இந்த வெண்ணி போர் வெற்றி என்பது பிற்காலத்தில் மிகப்பெரிய சோழ சாம்ராஜ்யம் உருவாக ஒரு அடித்தளமாக இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வெண்ணி போருக்குப் பிறகு தீவிரமான பல போர்கள் புரிந்த கரிகால சோழன் சேர நாட்டுப் பகுதிகளான பாலக்காடு, திருவாங்கூர், கொச்சி, தென்/ வட மலையாளம் என்கிற ஒட்டுமொத்த சேர நாட்டுப் பகுதிகளை தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தார். இதன்பிறகு வடக்கே தொண்டை வளநாட்டையும், அதற்கு மேலாக இருக்கின்ற “வடவேங்கடம்” எனப்படும் திருப்பதி பகுதியையும் கரிகால சோழன் கைப்பற்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Karikala cholan varalaru in Tamil

மேற்கண்ட பகுதியை கைப்பற்றிய பிறகு மிகப்பெரிய படைத்திரட்டி கொண்டு வடக்கே இமயம் வரை சென்று தனது புலிக்கொடியை கரிகால சோழன் நாட்டியதாக சிலப்பதிகாரம் மற்றும் பெரிய புராணம் பாடல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திற்கு தெற்கே இருக்கின்ற தீவு நாடான இலங்கையை ஒட்டுமொத்தமாக வென்ற ஒரு சில தமிழ் மன்னர்களில் கரிகால சோழன் ஒருவர் எனவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

கரிகால சோழனின் சாதனைகள்

“சோழநாடு சோறுடைத்து’ என்கிற பழமொழிக்கேற்ப அக்காலம் முதலே சோழ நாடு என்பது மக்களுக்கு உணவை தருகின்ற பயிர் தொழிலை முதன்மையாக கொண்ட ஒரு நாடாக விளங்கியது. இதனைக் கருத்தில் கொண்டு கரிகால சோழன் பலவகையான நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தி உழவுத் தொழில் சிறந்து விளங்க வழிவகை செய்தார்.

மேலும் அவர் ஆட்சி காலத்தில் சோழநாட்டில் இருந்த காவேரிபூம்பட்டினம் என்கிற நகரம் துறைமுக நகரமாக விளங்கிற்று. இதனால் அந்நிய நாடுகளுடன் ஏற்றுமதி, இறக்குமதி வாணிபம் சிறப்புர நடைபெற்று, அதன் மூலம் சோழ நாட்டிற்கு செல்வ வளங்கள் பெருக வழிவகை செய்தோர். மேலும் சிறு தொழில்களை செய்து வந்த தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்படவும் பல திட்டங்களை செயல்படுத்தியதாகவும் கூறுகின்றனர். கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொன்ற கரிகால சோழன் நடன கலை மற்றும் ஓவிய சிற்பக் கலைகளையும் ஊக்குவித்தார் எனவும் வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்லணை

தற்காலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உறையூர் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்ட கரிகால சோழனின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதப்படுவது அவர் கட்டிய “கல்லணை” எனப்படும் நீர்ப்பாசன அணையாகும். இந்த கல்லணை என்பது தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசன்குடி என்கிற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. கல்லணையின் நீளம் என்பது 1080 அடியாகும், அகலம் 66 அடி, உயரம் 18 அடியாகும்.

அக்காலம் முதலே காவிரி ஆற்றில் மிகப்பெரும் வெள்ளம் ஏற்பட்டு, அதனால் மக்களின் உயிர் உடைமைகளுக்கும், அவர்கள் செய்து வந்த உழவுத் தொழில் இழக்கும் பாதிப்புகள் ஏற்படுவதை கண்டு வருந்திய கரிகால சோழன், காவிரி ஆற்றின் குறுக்காக ஒரு அணைக்கட்ட முடிவு செய்து எழுப்பிய அணை தான் கல்லணை என்பதாகும். தனது மிகப் பெரும் படை பலத்தால் இலங்கையை வென்ற கரிகால சோழன் அங்கு பிடிக்கப்பட்ட சிங்கள படை கைதிகளை பணியாட்களாக கொண்டு இந்த கல்லணையை கட்டியதாகவும் கூறப்படுகிறது.

Karikala cholan kallanai history in Tamil

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இப்பகுதி நீர்ப்பாசன துறை அதிகாரியாக இருந்த ஆர்தர் காட்டன் என்பவர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆய்வு செய்து, தமிழர்களின் கட்டிட திறனை கண்ட வியந்தார். காவிரியின் குறுக்காக மிகப்பெரிய கற்பாறைகளை கொண்டு வந்து அக்காலத்தில் போடப்பட்டதாகவும், பிறகு ஆற்றின் நீரோட்டத்தால் ஏற்படும் நீர் அரிப்பின் காரணமாக அப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மணலில் புதைந்து, ஒரு கட்டத்தில் அம்மணலில் உறுதியாக நின்ற பிறகு, அதன் மீது வேறு ஒரு பாறையை வைத்து தண்ணீரில் கரையாத ஒருவித களிமண்ணை கொண்டு அந்தப் பாறைகளின் மீது பூசி, அந்தப் பாறைகள் நன்கு உறுதியாக ஒட்டிக் கொள்ளும்படி செய்து இந்த கல்லணை கட்டப்பட்டதாக ஆர்தர் காட்டன் தனது ஆய்வில் கூறியுள்ளார்.

2000 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் பயன்பாட்டில் இருக்கின்ற இந்த கல்லணை மீது 1839ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ஒரு பாலம் கட்டப்பட்டது. தற்போது வரை மக்கள் பயன்பாட்டில் இருக்கின்ற கல்லணை மற்றும் கல்லணை பாலம் இந்திய நாட்டின் பாரம்பரிய கட்டடவியல் தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த சான்றாக திகழ்கிறது. தற்காலத்தில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் நீர் பாசன துறையின் கீழ் இருக்கின்ற கல்லணை நீர்ப்பாசனை அணையை காண உலகெங்கிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

கரிகால சோழன் மரணம்

மிகச் சிறப்பான முறையில் ஆட்சி புரிந்த கரிகால சோழ மன்னன் தன்னுடைய இறுதி நாட்களில் “குராப்பள்ளி” என்கிற இடத்திற்கு வந்து தனது உலக வாழ்க்கை நீத்தார் என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

கரிகால சோழன் மணிமண்டபம்

கல்லணை எனும் நீர்ப்பாசன அணையைக் கட்டி, அதன் மூலம் எண்ணற்ற உழவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய கரிகால சோழ மன்னனை போற்றும் விதமாக அவர் கட்டிய கல்லணை பகுதிக்கு சற்று அருகிலேயே கரிகால சோழன் மணி மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக அரசால் பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

English Overview: Here we have Karikala Cholan history in Tamil. We can also say Karikala Cholan varalaru in Tamil or Karikala Cholan biography in Tamil. We also have karikala Cholan real name and details about Kallanai in Tamil.

- Advertisement -