மூதேவிக்கு ரொம்ப பிடித்த இடம் எது? உங்கள் வீட்டில் பிடித்திருக்கும் தரித்திரம் நீங்க இதை செய்யுங்கள்!

moodevi-vilakku
- Advertisement -

ஸ்ரீதேவிக்கு மூத்தவள் தான் இந்த மூதேவி. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். ஒருவரது வீட்டில் மூதேவிக்கு மிகவும் பிடித்த இடம் எது? என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட இடம் நம் வீட்டில் கட்டாயமாக இருக்கக்கூடாது. மூதேவி ஒரு இடத்தில் குடிகொண்டு இருக்கும்போது, தரித்திரத்தை விரட்டியடிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

moodevi

எவரொருவர் அடுத்தவரை பார்த்து பொறாமை கொள்கிறாரோ அவர்கள் மனதில் மூதேவி குடிகொண்டு விடுவாள். அடுத்தவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து, ‘இப்படிப்பட்ட ஒரு முன்னேற்றம் எப்படித்தான் இவர்களுக்கு வருகிறது என்பது தெரியவில்லை’. ‘நானும் தான் இத்தனை நாட்களாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றேன் எனக்கு மட்டும் பணம் சேரவே இல்லையே’ என்று மனதிற்குள் புலம்பினாலும் சரி. வாய்விட்டு புலம்பினாலும் சரி. அவர் மனதில் மூதேவி குடிகொண்டு விடுவாள். குறிப்பாக இந்த தவறை பெண்கள் செய்யவே கூடாது. தயவுசெய்து வீட்டில் புலம்புவதை நிறுத்தி விடுங்கள்.

- Advertisement -

அதிலும், குறிப்பாக சில பெண்கள், ‘நான் எத்தனை தெய்வங்களை வழிபடுகின்றேன்? எனக்கு மட்டும் விடிவு காலம் பிறக்க மாட்டேங்குது! என்று சொல்லி விளக்கு வைத்த சமயத்தில், சாமியை திட்டிக்கொண்டே பூஜை செய்வார்கள். இப்படி செய்யும் பூஜையானது, கட்டாயம் நிறைவடையாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். இந்த புலம்பல் கேட்கும் இடத்தில் தரித்திரம் கட்டாயம் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ainthu-muga-vilakku

எந்த வீட்டில் கெட்ட வாடை, வீசிக்கொண்டே இருக்கிறதோ அந்த வீட்டில் மூதேவி குடிகொண்டு விடுவாள். வஞ்சகம் நிறைந்த குணம் உள்ளவர்கள், பொறாமை குணம் உள்ளவர்கள், கெட்டவார்த்தை பேசுபவர்கள், தலைவிரி கோலத்தோடு இருப்பவர்கள், கிழிந்த ஆடையை அணிந்து கொள்பவர்கள் இவர்களிடத்திலெல்லாம், மூதேவி குடி கொண்டு இருப்பாள்.

- Advertisement -

குறிப்பாக எந்த வீட்டில், கதவின் மேல் துணி போடும் பழக்கம் உள்ளதோ, அந்த வீட்டில் தரித்திரம் பிடிக்கும். கொடிகளில், அழுக்குத் துணியை போட்டு விட்டு அந்த துணியாது எல்லோரது தலையின் மேலும் பட்டுக்கொண்டே இருந்தால், அந்த வீட்டில் தரித்திரம் பிடிக்கும். இந்த காலகட்டத்தில் எல்லாம் கிழிந்த ஆடையை அணிவது, ஃபேஷனாகிவிட்டது.  ஃபேஷனாக இருந்தாலும் இதுவும் தவறுதான். ஒருவரது வீட்டில் குளியலறையும், கழிவறையும் சுத்தமாக இல்லை என்றாலும் தரித்திரம் குடியேறும்.

free-hair1

வீட்டை சுத்தமாக தான் வைத்திருக்கின்றோம். கெட்ட எண்ணம் கிடையவே கிடையாது. கெட்டவார்த்தை பேசுவதே கிடையாது. புலம்புவதும் கிடையாது. ஆனாலும், எங்கள் வீட்டில் தரித்திரம் இருப்பதுபோல் உணர்வு உண்டு. இதற்கு என்ன காரணம்? சிலருக்கு தான் செய்த கர்மவினையின் மூலமாகக் கூட, வீடு எப்போதுமே தரித்திரம் பிடித்தது போல் இருக்கும். கஷ்டப்பட்டு உழைத்த காசு கூட கையில் தங்காது. இப்படிப்பட்ட பிரச்சனையை நீக்குவதற்கு என்ன செய்யலாம்? இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சுலபமான பரிகாரம் உண்டு அதையும் பார்த்து விடுவோமா?

- Advertisement -

எவர் ஒருவர் வீட்டில் தரித்திரம் பிடித்திருக்கிறதோ, பஞ்சமி திதியன்று, அதாவது நாள்காட்டியில் என்று பஞ்சமி திதி வருகிறது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தின் படி, நம் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபங்களை ஏற்றி, பஞ்சமி தேவியை வழிபடவேண்டும். உங்களால் முடிந்தால் 5 அகல் விளக்குகளும் நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். முடியாதவர்கள், நல்லெண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றலாம். மாதம் ஒருமுறை வரும் பஞ்சமி திதி அன்று, எவர் ஒருவர் வீட்டில் பஞ்சமி தேவியை நினைத்து வழிபாடு செய்கிறாரோ, அவருடைய வீட்டில் தரித்திரம் தங்காது என்று சொல்கிறது சாஸ்திரம்.

panjami-devi

இதோடு சேர்த்து உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு விளக்குமாறு(ஒரு விளக்கமாறு அல்ல. 5 விளக்கமாறு வாங்கி கொடுக்க வேண்டும்.) வாங்கி தானமாகக் கொடுங்கள். அந்த விளக்குமாறை பயன்படுத்தி, அந்த கோயிலை சுத்தம் படுத்துவதன் மூலம், நம் வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

thudaippam

உங்களது வீட்டில் பின் வாசல் இருப்பதாக இருந்தால், முன் வாசலில், வாசல் தெளித்துக் கோலம் போட்ட பின்பு, பின் வாசலிலும் வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். ஏனென்றால், பின்வாசல் வழியே தான் மூதேவி உள்ளேன் வருவாள் என்பது ஐதீகம். பின் வாசல் வழியில் கோலம் இருந்தால் கட்டாயம் தரித்திரம் உள்ளே வராது. பின்வாசல் இல்லை என்றால் பரவாயில்லை. முன் வாசலில், வாசல் தெளித்து கோலம் போட்டால் மட்டுமே போதுமானது. அடுத்தவருக்கு நாம் உதவி செய்கின்றோம் இல்லையோ, நல்லது செய்கின்றோமோ இல்லையோ, முடிந்தவரை உபத்திரம் ஆக இருக்கக் கூடாது. கெட்டது செய்யக்கூடாது. என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கட்டாயம் உங்கள் பக்கம் தரித்திரம் வரவே வராது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்தப் பூச்செடியை உங்க வீட்ல வச்சிட்டீங்களா? யாருக்கும் கிடைக்காத, இந்த 5 அதிர்ஷ்டமும் கட்டாயம் உங்களை தேடி வர போகுது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tharithiram vilaga pariharam Tamil. Tharithiram meaning in Tamil. Tharithiram neenga. Tharithiram vilaga. Panjami devi.

- Advertisement -