இந்தப் பூச்செடியை உங்க வீட்ல வச்சிட்டீங்களா? யாருக்கும் கிடைக்காத, இந்த 5 அதிர்ஷ்டமும் கட்டாயம் உங்களை தேடி வர போகுது.

sangu-poo-lingam

நம்முடைய வீட்டில் வைத்து வளர்க்க வேண்டிய முக்கியமான செடிகளில் இந்த சங்கு செடியும் ஒன்று. இந்த செடியை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்து வந்தால், குறிப்பிட்ட என்ன நன்மைகள் உங்களை தேடி வரப்போகிறது என்பதை பற்றியும், உங்களது ஆரோக்கியம் எந்த வகையில் முன்னேற்றம் அடையும் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

blue sangu poo

பொதுவாகவே இந்த சங்குப்பூ செடியானது, கொடியாக படரக் கூடிய தன்மை உடையது. உங்களது வீட்டின் முன்பகுதியில் இதை கொடியாக வளர விட்டால், மிக விரைவிலேயே படர்ந்து விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. குறிப்பிட்டுச் சொல்லப் போனால் நீல நிற சங்கு பூவிற்கு அதிகமான மகத்துவம் உண்டு. ஏனென்றால், இந்த நீல நிறம் என்பது அமைதியை வெளிப்படுத்தக் கூடியது. மன நிம்மதியை தரக்கூடியது. இதை பார்க்கும்போது நம்முடைய மனம் இயல்பாகவே சாந்தமாக மாறிவிடும். உங்களுடைய கோபமானது குறைய கூட வாய்ப்பு அதிகம் உள்ளது. தினமும் எழுந்தவுடன் இந்த செடியில் பூக்கும் பூவை 5 நிமிடம் உற்றுப் பாருங்கள் உங்களுடைய மனதில் மாற்றம் ஏற்படுவதை நீங்களே உணரலாம். அதாவது மனம் சாந்தி அடையும்.

இந்தக் கொடியின் மூலம் கிடைக்கப்படும் நிழலில் இருந்து, வெப்பம் குறைக்கப்படுகிறது. அதாவது வெப்பத்தின் சூட்டை தணித்து, அந்த இடத்தினை குளிரவைக்கும் தன்மை இந்த கொடியில் உள்ள இலைகளுக்கும், பூக்களும் இயற்கையாகவே இருக்கிறது. உங்கள் வீட்டு வாசலில் முன்பு இந்த செடியை வளர விடுவதன் மூலம் உங்களது வீடு வெயில் காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் என்பதும் ஒரு நன்மை.

sangu-poo

குறிப்பாக தாய்லாந்து நாட்டில் இந்தப் பூவினை அஞ்சான் மலர் என்று சொல்கிறார்கள். இதற்கு காரணம் இந்தப் பூவினை கையில் எடுத்துக் கொண்டு சென்றாலோ, அல்லது இந்தப் பூவினை பார்த்து விட்டு சென்றாலும் அவர்கள் சென்ற காரியம் கட்டாயம் வெற்றி அடையும் என்ற ஒரு நம்பிக்கையும், அவர்கள் இடத்தில் உள்ளது என்று சொல்லபோனால் அது கட்டாயம் பொய்யாகாது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை தரக்கூடியதுதான் இந்த நீல வண்ண சங்கு பூ.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் இந்த செடியை நம் வீட்டின் முன்பு வைத்து வளர்த்து வந்தால், இதில் வரும் வாசத்திற்கு கொசுக்களும், சின்னச்சின்ன பூச்சிகளும் நம் வீட்டிற்குள் வராது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
sangu-poo1

இந்த சங்கு பூச்செடிக்கு மருத்துவ குணம் ஏராளமாக உண்டு. இதில் பட்டு வரும், காற்றை நாம் சுவாசித்தால், மூச்சுத் திணறல் சுவாசக் கோளாறு, இருதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தீரும் என்று மருத்துவ குறிப்புகளிலும் சொல்லப்பட்டுள்ளது. இதில் பட்டு வரும் காற்றை சுவாசிக்கும்போது இத்தனை நன்மைகளா? உடலும் ஆரோக்கியம் பெறும்.

sivan-temple

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா? சிவனுக்கு பிடிச்ச பக்தனாக மாற வேண்டுமா? உங்கள் வீட்டில் இருக்கும் இந்த சங்கு பூவைப் பறித்து, தினம்தோறும் உங்கள் வீட்டிலுள்ள சிவபெருமானுக்கு வைத்து வழிபட்டாலும் சரி, கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வந்தாலும் சரி. நீங்கள் கேட்ட வரம் உடனே கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்ப சொல்லுங்க! இந்த பூ செடி உங்கள் வீட்டில் இருந்தால் கட்டாயம் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தானே!

இதையும் படிக்கலாமே
பெண்கள் புதன்கிழமை அன்று கட்டாயம் செய்ய வேண்டிய சில கடமைகள். உங்கள் வீட்டின் நன்மையும் இதில் அடங்கியுள்ளது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Blue sangu poo uses in Tamil. Sangu poo in Tamil. Sangu poo uses in Tamil. Sangu poo benefits in Tamil. Sangu flower in Tamil.