இந்த பறவைகள் எல்லாம் உங்கள் வீட்டில் வந்தால் நிம்மதி பறி போய்விடுமா? கெட்டது வரக்கூடிய அறிகுறிகளாக பட்சி சாஸ்திரம் கூறுவது என்ன? இது தெரிஞ்சவங்ககிட்ட பகச்சிக்காதீங்க!

patchi-astro
- Advertisement -

சாஸ்திரங்களில் பல்வேறு சாஸ்திரங்கள் உண்டு. அந்த வகையில் பட்சி சாஸ்திரமும் ஒன்றாக இருக்கிறது. அது என்னங்க பட்சி சாஸ்திரம்? என்பவர்களுக்கு, ‘பட்சி’ என்றால் ‘பறவை’ என்பது பொருளாகும். பறவைகளை வைத்து கூறப்படும் இந்த சாஸ்திரம் அறிந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதற்கு ஒரு பழமொழியும் கூறப்படுவது உண்டு. ‘பட்சி தெரிந்தவர்களிடம் பகைத்துக் கொள்ளாதே’ என்று கூறுவார்கள். இந்த பழமொழி ஏன் கூறப்பட்டது? பட்சி சாஸ்திரம் கெட்டதை எப்படி நமக்கு அறிகுறிகளாக காட்டுகிறது? என்பது போன்ற பட்சி சாஸ்திர விசித்திர தகவல் குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பட்சி சாஸ்திரம் தெரிந்தவர்கள் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும்? என்கிற ஞானத்தோடு இருப்பவர்கள். அதனால் அவர்களிடம் பகைத்துக் கொண்டால் நம்மை எளிதாக வென்று விடுவார்கள். எதிரிகளை சரியான நேரம் பார்த்து வீழ்த்தக் கூடிய ரகசியம் இவர்களுக்கு தெரியும். பட்சி சாஸ்திரம் அறிந்தவர்கள் மனதில் இருப்பதை நிறைவேற்றுவதற்கு இந்த சாஸ்திரத்தை பயன்படுத்துகின்றனர்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் கிரகங்களால் பீடிக்கப்பட்டவர்களை அதிலிருந்து பரிகாரங்கள் செய்து விடுவித்தலும் இவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கும். மேலும் எந்த நேரத்தில்? எந்த சுப காரியங்களை மேற்கொண்டால், நடக்கின்ற காரியத்தில் பிரச்சனைகள் இல்லாமல் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் இவர்கள் போட்டிகளில் வெற்றி அடைவதற்கான நேரங்களையும் ஆழமாக தெரிந்து வைத்திருப்பார்கள்.

எவ்வளவு பேர் எதிர்த்தாலும் அந்த எதிர்ப்புகளை முறியடித்து தாமே ஜெயிப்பவர்களாக இருப்பார்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளையும் இதை வைத்தே அவர்கள் மேற்கொள்ளலாம். மேலும் பட்சி சாஸ்திரம் முறையில் ஆருடம் பார்த்தும் பலன் கூறுவார்கள். இவ்வளவு பலன்களை நமக்கு கொடுக்கக் கூடிய அற்புத கொடையாக இருக்கும் இந்த பட்சி சாத்திரம், ஒரு சில பறவைகள் நம் வீட்டில் வருவதால் கெடுபலன்கள் வரும் என்றும் கூறுகிறது.

- Advertisement -

அந்த வகையில் முதல் பறவையாக வவ்வால் இருக்கிறது. எந்த காரணத்தை கொண்டும் வவ்வால் நம் வீட்டில் அல்லது வீட்டின் பின்புறத்தில் கூடு கட்டி வசிக்க கூடாது. வவ்வால் நம் வீட்டிற்கு வருவது, நம் வீட்டில் இருக்கும் தலைவனுக்கு குறி வைப்பதாக அர்த்தம் ஆகும். பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்படலாம் அல்லது இவர்களுக்கு ஏதோ ஒரு கெட்ட விஷயம் நடக்கப் போகிறது என்பதன் அறிகுறியாக வவ்வால் வீட்டிற்குள் வருகிறது என்று இந்த சாஸ்திரங்கள் கூறுகிறது.

திடீரென வீட்டில் கரு நாகமோ அல்லது கருவண்டோ, கருங்காகமோ வந்தாலும் நல்லதல்ல என்பார்கள். அண்டங்காக்கை தலையில் வந்து கொத்துவது அல்லது உங்களை துரத்துவது போன்றவை கெட்டது நடக்க போவதின் அறிகுறிகளாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் கருநாகம் நுழைவது, கருவண்டு வருவது, கருப்பு நிறத்தில் இருக்கும் பறவைகள் அமானுஷ்யமான வகையில் நம்மிடம் நடந்து கொள்வது, கெட்ட சகுனங்களாக பட்சி சாஸ்திரம் கூறுகிறது.

எனவே ஒருவரின் கெட்ட நேரத்தையும், வெற்றி வாய்ப்புகளை அடையக்கூடிய நல்ல நேரத்தையும் துல்லியமாக கூறக்கூடிய இந்த பட்சி சாஸ்திரம் ஒரு குருவை வைத்து கற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த சாஸ்திரத்தை பற்றி கூறியதாகவும், முருகன் போர் புரிய செல்லும் பொழுது பார்வதி தேவி முருகனுக்கு கற்றுக் கொடுத்ததாகவும் புராணங்கள் கூறுகிறது. இத்தகு அரும்பெரும் கொடைகளை நாம் அழித்து விடாமல், இதைப் பற்றிய மேலான தகவல்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்வது நல்லது.

- Advertisement -