அடகு நகையை மீட்க ஏற்ற வேண்டிய தீபம்

sivan gold jewel
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் குண்டுமணி தங்கத்தை வாங்குவதே பெரும்பாடு. அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஒவ்வொரு நகையையும் வாங்கும் போது நாம் எத்தனை சிரமப்பட்டு ஆசைப்பட்டு வாங்கி இருப்போம். அந்த நகைகளை ஏதோ ஒரு காரணத்திற்காக அடகு வைத்து விட்டு அதை மீட்க முடியாமல் துன்பப்படுபவர்கள் ஏராளம்.

அப்படி நகைகளை வாங்கி அடகு வைத்த பிறகு மீட்க முடியாமல் இருப்பவர்கள் அவர்கள் செய்யும் முயற்சியோடு இந்த ஒரு பரிகார தீபத்தை ஏற்றி வரும் போது நிச்சயம் நகை வீடு திரும்பும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்போது ஏற்ற வேண்டும். எப்படி ஏற்ற வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

அடகு நகையை மீட்க பரிகாரம்

நகை அடகு போவதற்கு பலவிதமான காரணங்கள் உண்ட. சில நேரங்களில் தொழில் முன்னேற்றத்திற்காகவும், விருத்திக்காகவும் நகையை முதலீடாக பயன்படுத்துவார்கள். அது போன்ற சமயங்களில் ஓரளவிற்கு நகை திருப்பிக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆனால் அவசர தேவைக்காகவும் பண நெருக்கடிக்காகவும் நகையை வைப்பவர்கள் அந்த நகையை திருப்புவதற்கு பெரிதும் திண்டாடுகிறார்கள்.

முதலில் நகையை அடகு வைக்கும் போது நேரம் காலம் பார்த்து வைக்க வேண்டும். அவசர தேவைக்கு வைக்கிறோம் அப்போது இதெல்லாம் பார்க்க முடியுமா என்றால், வேறு வழி இல்லை முடிந்த அளவு அன்றைய தினத்தில் எந்த நேரத்தில் வைக்க வேண்டும் என்பதை யாவது கவனத்தில் கொள்ள வேண்டும். நகை அடகு போவதற்கு வேறு ஒரு காரணங்களும் உண்டு சில நேரங்களில் நகைக்கு திருஷ்டிகள் ஏற்படும்.

- Advertisement -

அது போன்ற சமயங்களில் நகை நம் கையில் தாங்காமல் அடகுக்கு சென்று கொண்டே இருக்கும். அதற்கு நாம் எங்கு நகைகளை அணிந்து சென்று வந்தாலும் அதை கழற்றி வைக்கும் முன்பு உப்பு கலந்த தண்ணீரில் நகையை சுத்தப்படுத்தி அதன் பிறகு பத்திரப்படுத்த வேண்டும். சரி இப்போது அடகு நகையை மீட்பதற்கான பரிகாரத்தை பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை நாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் வீட்டு நிலை வாசலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை காலை மாலை என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். அதற்கு இரண்டு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இப்படி தீபம் எரியும் போது இரண்டு சொட்டு விளக்கெண்ணெயை ஒவ்வொரு விளக்கிலும் ஊற்ற வேண்டும். இது போல பதினோரு ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து இந்த தீப பரிகாரத்தை செய்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நகைகள் மீது இருக்கும் தோஷம், சொர்ண தோஷம் அல்லது நகை நம்மிடம் சேராமல் போவதற்கு வேறு எந்த காரணம் இருப்பினும் அது நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
இத்துடன் பூஜை அறையில் சிவன் பார்வதி திருமண கோலத்தில் உள்ள படத்தை வைத்து தினந்தோறும் தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும். இதன் மூலம் அடகு நகைகள் திரும்ப வருவதோடு, புதிதாக நகைகள் வாங்கக் கூடிய யோகத்தையும் உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக தமிழ் புத்தாண்டு கனி காணுதல் முறை

இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நீங்கள் ஆசைப்பட்ட நகையை திரும்ப மீட்டுக் கொண்டு வாருங்கள்.

- Advertisement -