அடகு நகையை திருப்ப நட்சத்திர வழிபாடு

jewel lakshmi money
- Advertisement -

தங்க நகைகள் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகவே இருக்கும். அதை போட்டு அழகு பார்க்கிறார்களோ இல்லையோ ஆத்திரம் அவசரம் என்று வரும்போது அந்த நகைகளை அடமானம் வைத்து பணம் வாங்கி செலவு செய்வார்கள். இப்படி அடமானம் வைத்த நகையை மறுபடியும் திருப்ப வேண்டும் என்ற முயற்சியை மேற்கொள்ளும் பொழுது ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த முயற்சிகள் தடைப்பட்டு நிற்பதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையும் உண்டாகும். இந்த சூழ்நிலையில் இருந்து வெளியில் வருவதற்கும் அடகு வைத்த நகையை திருப்பவும் நகை திரும்பவும் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும் மகாலட்சுமி தாயாரை எந்த நட்சத்திர நாளில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதைகள் இருக்கிறார்கள். அந்த தேவதைகளை நாம் வழிபடும் பொழுது அவர்களுக்குரிய நட்சத்திரத்தை வைத்து வழிபட்டால் அது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். இதேபோல் நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று நட்சத்திரங்கள் இருக்கும். பணம், நகை போன்றவற்றிற்கு அதிபதியாக திகழக்கூடிய சுக்கிர பகவானுக்குரிய நட்சத்திர நாட்களை தேர்வு செய்து சுக்கிர பகவானின் அதிதேவதையான மகாலட்சுமியை நாம் வழிபடும் பொழுது நமக்கு நல்ல பல மாற்றங்கள் கிடைக்கும்.

- Advertisement -

அந்த வகையில் அடகு நகையை திருப்புவதற்கு நாம் வழிபட வேண்டிய நட்சத்திர நாள் என்பது ரேவதி நட்சத்திரம். பொதுவாக நகைகளை திருப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் ரேவதி நட்சத்திர நாளில் திருப்பினால் மறுபடியும் அந்த நகை அடகிற்கு செல்லாது என்று கூறப்படுகிறது. சரி நகையை திருப்புவதற்கு தேவையான பணம் சேர வேண்டும் அல்லவா? முதலில் அதற்கு ரேவதி நட்சத்திர நாள் அன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு முறையை பார்ப்போம்.

இந்த வழிபாட்டிற்கு நின்ற கோலத்தில் இருக்கும் மகாலட்சுமி தாயாரின் படம் வேண்டும். அதே சமயம் சத்ய நாராயணரின் படமும் வேண்டும். இந்த இரண்டு படங்களையும் வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். ரேவதி நட்சத்திர நாள் அன்று மாலை எப்பொழுதும் போல் வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு மகாலட்சுமி 108 போற்றிகளை கூற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு போற்றிகளை கூறும் பொழுது மருதாணி பூக்களை வைத்து மகாலட்சுமி தாயாருக்கும், சத்யநாராயனருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். மருதாணி பூக்கள் கிடைக்காத பட்சத்தில் மாதுளம் பூக்களை வைத்து அர்ச்சனை செய்யலாம். மாதுளை பூக்களும் கிடைக்கவில்லை என்றால் மாம்பூக்களை வைத்தும் அர்ச்சனை செய்யலாம். இந்த மூன்று பூக்களை தவிர்த்து வேறு எந்த பூக்களையும் உபயோகப்படுத்தக் கூடாது.

இவ்வாறு வீட்டில் 108 முறை மகாலட்சுமி போற்றிகளை கூறி அர்ச்சனை செய்த பிறகு அருகில் இருக்கும் கடைக்கு சென்று வெற்றிலை பாக்கு, விரலி மஞ்சள், வாழைப்பழம் மற்றும் கல் உப்பு இவற்றை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு ரேவதி நட்சத்திர நாளிலும் நாம் வழிபாடு செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளும், சுக்கிர பகவானின் அருளும், சத்திய நாராயணரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைத்து பண வரவு என்பது அதிகரித்து அடகு நகையை திருப்புவதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படும். கண்டிப்பான முறையில் அடகு நகையை திருப்புவதற்குரிய நாளாக நாம் தேர்வு செய்யும் நாள் ரேவதி நட்சத்திரமாக இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: >படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்க முருகன் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை தொடர்ந்து மூன்று மாதங்கள் முழு நம்பிக்கையுடன் செய்தாலே கண்டிப்பான முறையில் அடகில் வைத்த நகையை திருப்புவதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.

- Advertisement -