அடகு வைத்த நகையை திருப்ப தாந்திரீக பரிகாரம்.

jewel loan
- Advertisement -

ஆண்களை விட பெண்களுக்கே நகைகளின் மீது ஆசை அதிகமாக இருக்கும். காரணம் நகையில்லாமல் வெளியில் செல்லும் பொழுது சிலர் ஏளனமாக பார்த்து சிரிப்பார்கள். அந்த ஏளன சிரிப்பிற்கு அஞ்சி நகைகளை சேர்க்க வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுவார்கள். கஷ்டப்பட்டு நகைகளை சேர்த்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் குடும்பத்தில் கஷ்டம் ஏற்படும் பொழுது முதலில் வாங்கிய நகைகளை தான் அடமான வைப்பதற்காக கொடுக்கவும் செய்வார்கள்.

கொடுத்த நகையை திரும்ப பெறுவதற்கு பல வழிகளில் முயற்சி செய்வார்கள். செய்தும் சிலருக்கு அது வெற்றியடையாமல் போய்விடும். இன்னும் சிலருக்கு திருப்பி வந்த சில நாட்களிலேயே மறுபடியும் அடகு கடைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். இந்த சூழ்நிலைகள் அனைத்தையும் சரி செய்து அடகு வைத்த நகையை திருப்பிப் பெறவும் அதேசமயம் நகை திரும்பவும் அடகு போகாமல் இருப்பதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு கஜலட்சுமி விளக்கு தேவைப்படும். யாருடைய நகை அடகு வைக்கப்பட்டு இருக்கிறதோ அவர்களுடைய நட்சத்திரம் வரும் நாளில் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பேப்பரில் பச்சை நிற மையைப் பயன்படுத்தி நாம் எந்த கடையில் நகையை அடகு வைத்து இருக்கிறோமோ அந்த கடையின் பெயரை எழுத வேண்டும்,

அடுத்ததாக நகை அடகு வைத்த ரசீது எண்ணை எழுத வேண்டும். அடுத்ததாக எந்த நகையை அடகு வைத்து இருக்கிறோமோ அந்த நகையை எழுத வேண்டும். பிறகு இந்த பேப்பரை நான்காக மடித்து கஜலட்சுமி விளக்கிற்கு அடியில் வைத்து கஜலட்சுமி விளக்கை ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றிய பிறகு ஒரு மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

அந்த மந்திரம் நாம் அடகு வைத்த நகைக்கு ஏற்றவாறு மாறுப்படும். ஒரு பவுன் செயின் என்றால் *ஓம் ஒரு பவுன் செயின் ஆகர்ஷாய ஆகர்ஷாய ஸ்வாஹா” என்று சொல்ல வேண்டும். ஒரு பவுன் மோதிரம் என்றால் “ஓம் ஒரு பவுன் மோதிரம் ஆகர்ஷாய ஆகர்ஷாய ஸ்வாஹா என்று சொல்ல வேண்டும். இப்படி நாம் அடகு வைத்த நகை நமக்கு திரும்பி வரவேண்டும் என்று இந்த மந்திரத்தை 108 முறை தினமும கூறி வழிபட்டு வர வேண்டும்.

அடகு கடையில் இருந்து நகையை திருப்பிய பிறகு மஞ்சள் மற்றும் கல்லுப்பு கலந்த நீரில் அதை சுத்தம் செய்து ஒரு நாள் முழுவதும் பூஜை அறையில் வைத்து விட்டு பிறகு உபயோகப்படுத்த நகை தோஷம் நீங்கி நகை என்றும் நம்முடன் நிலைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: நியாயமான கோரிக்கை நிறைவேற தீப வழிபாடு.

இவ்வாறு நம்பிக்கையுடன் நாம் செய்வதன் மூலம் அடகு வைத்த பொருட்கள் அனைத்தும் வீடு திரும்பும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -