அடமான நகையை மீட்டெடுக்க பரிகாரம்

mahalashmi6
- Advertisement -

புதுசாக நம்மால் காசு கொடுத்து தங்கம் வாங்க முடியவில்லை என்றாலும், நம்முடைய வீட்டில் இருக்கும் நகைகளை அடமானத்தில் வைத்து மூழ்கடிக்காமல் இருக்க வேண்டும். அவசர தேவைக்கு நகைகளை அடமானம் வைத்து விட்டோம். அதை மீட்பதற்கான வழியை முதலில் பாருங்கள்.

இன்றைய சூழ்நிலையில் ஒரு குண்டுமணி தங்கத்தை கூட நம்மால் வாங்க முடியுமா என்று சிந்தித்தால், கொஞ்சம் கஷ்டம் தான். தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. சரி, உங்களுடைய தங்க நகைகள் அடமானத்தில் இருக்கிறதா. அதை திரும்பவும் மீட்டெடுக்க ஆன்மீக ரீதியாக என்ன செய்யலாம். உங்களுக்கான தங்கம் உங்கள் கையை வந்து சேர இந்த நேரத்தை பயன்படுத்திக்கோங்க.

- Advertisement -

அடமான நகையை மீட்க பரிகாரம்

அடமான நகையை மீட்பதற்கு உண்டான பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு இனிமேல் நீங்கள் தங்க நகையை அடமானம் வைப்பதாக இருந்தால், சனி ஹோரையில் தங்க நகையை அடமானம் வைக்கக்கூடாது. சனிஹோரையில் ஒருமுறை தங்கத்தை நீங்கள் அடமானம் வைத்து விட்டால், அந்த தங்க நகை மீண்டும் உங்கள் வீடு திரும்பாது. எழுதி வச்சுக்கோங்க.

எவ்வளவோ பணம் உங்கள் கைக்கு வந்தாலும், அந்த நகையை மீட்க முடியாத சூழ்நிலை வந்துவிடும். இந்த சனி ஹோரையை மட்டும் கவனமாக பாருங்கள். ஹோரை தெரியாது என்றாலும், ஹோரை தெரிந்தவர்களிடமோ அல்லது புரோகிதர்களிடமோ கேட்டு இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். காலண்டரில் ஹோரை அட்டவணை இருக்கும்.

- Advertisement -

இருந்தாலும் ஒவ்வொரு நாள் சூரிய உதயத்தை வைத்து இந்த ஹோரை கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அது பஞ்சாங்கத்தை பார்த்து, ஜோதிடம் சொல்லும் ஜோதிடர்களுக்கு சரியாக தெரியும். குரு ஹோரை, சுக்கிர ஹோரையில் தங்க நகைகளை அடமானம் வைக்கலாம்.

நகை அடமானத்தில் இருக்கிறது மொத்தமாக பணத்தைக் கட்டி உங்களால் மீட்க முடியவில்லை எனும் பட்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நகைக்கான தொகையை நாம் திருப்பி செலுத்தக்கூடிய வாய்ப்புகள் வங்கிகளில் இருக்கும். செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் பணத்தை திருப்பிக் கொடுக்கலாம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் வரும் அந்த நேரத்தை கணக்கில் கொண்டு பணத்தை கட்டும்போது, உங்களுடைய அடமான நகையை சீக்கிரம் மீட்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். செவ்வாய்க்கிழமை மதியம் 1:15 மணிக்கு மேல் மதியம் 2:00 மணிக்குள் அடமானத்தில் இருக்கும் தங்க நகைக்கு ஒரு சிறு தொகையை கட்டி வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: வியாபாரம் சிறப்பாக நடக்க மந்திரம்

சீக்கிரத்தில் அந்த நகையை மீட்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்துவிடும். பண வரவும் அதிகரிக்கும். கடன் சுமையும் குறையும். எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த ஹோரை ரகசியத்தை புரிந்து கொள்பவர்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -