குட்டி குட்டியா சீக்கிரமா நிறைய முடிகள் உங்களுடைய தலையில் வளர தொடங்கி விடும். ஒரு மாதத்திலேயே முடியை அடர்த்தியாக்க, வாரம் ஒரு முறை இந்த பேக்கை மட்டும் போடுங்க.

hair10
- Advertisement -

என்னுடைய முடி மிகவும் மெல்லிசாக இருக்கிறது. அதை அடர்த்தியாக மாற்ற சூப்பரான ஹேர் பேக் தேவை என்பவர்கள் இந்த ஹேர் பேக்கை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ஒரு குறிப்பு தான் இது. இந்த பொருட்களை எல்லாம் பயன்படுத்தினால் தலைபாரம் வரும். சளி பிடிக்கும் என்ற தொந்தரவும் இருக்காது. எளிமையான முறையில் முடியை அடர்த்தியாக்க இதுவும் ஒரு வழி. வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். பின் சொல்லக்கூடிய பொருட்களை எல்லாம் அதில் ஒவ்வொன்றாக போட வேண்டும். தேங்காய் துருவல் 2 கைப்பிடி, பாதாம் பருப்பு 5 லிருந்து 7, நெல்லிக்காய் – 3, இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். (பாதாம் பருப்பை மட்டும் முந்தைய நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்து தோல் உரித்து விட்டு அந்த பாதாமை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

அரைபட்ட இந்த விழுதை வடிகட்ட வேண்டும். கொஞ்சம் திக்காகவே இந்த பாலை பிழிந்து வடிகட்டி தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வடிகட்டி வைத்திருக்கும் இந்த தேங்காய் பாலுடன் முட்டை – 1, ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன், போட்டு நன்றாக அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். முட்டையில் உங்களுக்கு மஞ்சள் கரு பிடிக்கவில்லை என்றால் வெள்ளை கருவை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். நமக்கு தேவையான ஹர்பாக் தயாராகி விட்டது.

முதலில் உங்களுடைய முடியில் எண்ணெயை தடவி நன்றாக சிக்கு எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் வைத்து 1 மணி நேரம் கழித்து, இந்த ஹேர் பேக்கை தலையில் வைக்க வேண்டும். ஹேர் பேக் கொஞ்சம் லிக்விட் பதத்தில் தான் இருக்கும். ஆகவே சுலபமாக இதை உங்களுடைய ஸ்கேப் பில் வைத்து நன்றாக மசாஜ் செய்துவிடலாம். அதன் பின்பு மறக்காமல் இந்த ஹேர் பேக்கை நுனி மூடி வரை வைக்க வேண்டும்.

- Advertisement -

முடியின் நுனியில் இந்த ஹேர் பேக்கை வைப்பதால் முடியின் வெடிப்பு உடனடியாக சரியாகும். அதுவும் இந்த குளிர்காலத்தில் டிரையாக இருக்க கூடிய முடியை, உடனடியாக சில்க்கி ஆக்கக்கூடிய சத்து இந்த ஹேர் பேக்கில் நிறைந்துள்ளது. வாரத்தில் ஒருமுறை இந்த ஹேர் பேக் போட்டு வர, ஒரே மாதத்தில் குட்டி குட்டி முடி வளர்வதை நிச்சயமாக நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும்.

இந்த பேக் போடுவதோடு சேர்த்து தினமும் நாலு பாதாமை சாப்பிட்டு வாருங்கள். தேங்காய் சேர்த்த உணவு பண்டங்களை சாப்பிட வேண்டும். அதன் பின்பு முட்டையின் வெள்ளைக்கரு, பாசி பயறு, என்று புரதச்சத்து நிறைந்த பொருட்களை சாப்பிடுங்கள். இரும்பு சத்து நிறைந்த பேரிச்சம்பழம், வேர்க்கடலை, இந்த பொருட்களை உணவோடு சேர்த்துக் கொள்ளும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் அதிகரித்து, ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சி இன்னும் இரண்டு மடங்கு அதிகரிக்கும். மேலே சொன்ன குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க உங்களுடைய முடியும் அழகாக மாறும்.

- Advertisement -