இந்த ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியவை லட்சுமியின் அம்சம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள்

girl-baby-astro
- Advertisement -

பெண்கள் என்றாலே பொதுவாக லட்சுமியின் அம்சமாக தான் பார்க்கப்படுகிறார்கள். ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் மகாலட்சுமியே வந்துவிட்டாள் என்று சொல்கிறார்கள். இவை அனைத்தும் பெண்களுக்கான சிறப்புகளாகும். அதில் ஒருசில ஜாதகம் மற்றும் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு இயற்கையாகவே அதிர்ஷ்டமும், ஐஸ்வர்யமும் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் இருக்கும் வீட்டில் என்றென்றும் பணத்திற்கு பஞ்சமிருக்காது. இவர்களின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் இவர்களின் வாழ்க்கையை மேல் நோக்கிக் கொண்டுசெல்லும். இவ்வாறான பெண்களை மனைவியாக அடைபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக தான் இருப்பார்கள். அப்படி பட்ட பெண்கள் யார் என்பதையும், அவர்கள் எந்த ராசி, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

women1

ரிஷப ராசி:
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் அதே ராசியில் பிறந்த ஆண்களை விட அறிவிலும், ஆற்றலிலும் மிகவும் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் தொழில் மற்றும் வேலையை எப்பொழுதும் இவர்களுக்கு வெற்றி தான் கிடைக்கும். இவர்களின் குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள். பிறந்த வீடு மட்டுமல்லாமல் திருமணமாகிப் போகும் இடத்திலும், அந்த குடும்பத்தையும் செல்வ செழிப்புடன் தழைக்க வைக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

கன்னி ராசி:
கன்னிராசி ஒரு பெண் ராசியாகும். இந்த ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். இவர் கல்வி மற்றும் கலைகளுக்கும் அதிபதியாவார். புதன் பகவான் கன்னி ராசியில் தான் உச்சம் அடைகிறார். எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் கல்வி மற்றும் கலையில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அதில் வெற்றி காணாமல் பின்வாங்க மாட்டார்கள்.

kumbam-rasi

கும்ப ராசி:
இந்த ராசி ஆண் ராசியாக இருக்கும் பட்சத்திலும் இது ஒரு காற்று ராசி ஆகும். இதன் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசியின் 12ஆம் வீட்டிற்கு அதிபதியாக சனி பகவான் இருக்கிறார். எனவே புகுந்த வீட்டிற்கு திருமணமாகி செல்லும் இந்த பெண்கள் மூலம் சொத்து பாக்கியம் கிடைக்கிறது. அதாவது இவர்கள் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதில் சகலகலாவல்லியாக இருப்பார்கள். இவ்வாறு புகுந்த வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டு சேர்க்கும் அம்சம் கொண்ட பெண்கள் கும்ப ராசியில் பிறந்த பெண்களாவர்.

- Advertisement -

சுக்கிரன் நட்சத்திரம்:
சுக்கிர நட்சத்திரமான பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சொத்து சேர்ப்பதிலும், சேமித்து வைப்பதிலும், தொட்ட காரியம் எல்லாம் வெற்றி பெறுவதிலும் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள். துவங்கும் ஒவ்வொரு காரியத்தையும் போராடி வெற்றி பெற வைப்பதில் வீரலட்சுமி மற்றும் விஜயலட்சுமியாக இருக்கிறார்கள்.

ragu-rahu-dasa

ராகு நட்சத்திரம்:
திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற இராகு நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பல போராட்டங்கள் நிகழ்ந்த போதிலும் அதில் வெற்றிபெற்று, வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருபவர்களாக இருக்கிறார்கள். நினைத்ததைச் செய்து முடிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும் படி அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

- Advertisement -