நாளை ஆடி மாதம் வெள்ளிக்கிழமை துர்கை அம்மனை இந்த மந்திரத்தை சொல்லி இப்படி வழிபட்டால் நீங்கள் நினைத்த காரியம் யாவும் நினைத்த வண்ணம் நிச்சயம் நிறைவேறும்.

durga dheepam
- Advertisement -

ஆடி மாதம் என்றாலே அம்பிகைகளுக்குரிய வழிபாடு காலம். இந்த மாதத்தில் பெண் தெய்வங்கள் அனைவரையும் போற்றி வழிபடும் காலமாக அமைந்திருக்கிறது அந்த வகையில் துர்க்கை அம்மனை காளியாக பாவித்து வழிபடும் ஒரு முறையும் இந்த மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. நாம் நினைத்த யாவும் நினைத்தபடியே நிறைவேற இந்த வழிபாடு பெரிதும் துணை நிற்கும். இந்த வழிபாடு எப்படி செய்வது என்பதை குறித்த தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவும் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் துர்க்கை வழிபாடு
பொதுவாகவே வெள்ளி செவ்வாய் துர்க்கை வழிபாட்டிற்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது. இது எல்லா மாதத்திலும் செய்யலாம். ஆனால் இந்த ஆடி மாதத்தில் விசேஷமாக காளியை வழிபட வேண்டும். காளி என்பவள் துர்க்கையின் மறு உருவமாக பார்க்கப்படுகிறது அந்த காளி தேவியை இந்த நாளில் நினைத்து வழிபடுவது மேலும் சிறப்பை தரும். காளி தேவி என்றதும் உக்கிரமான தெய்வம் இவர்களை எப்படி நாம் வழிபடுவது என்று அச்சம் வேண்டாம். உக்கிரமான தெய்வங்களும் மனிதர்களை காக்கவே உத்திர அவதாரங்களை எடுத்து இருப்பதால் இவர்களை வழிபடும் போது நம்முடைய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பதை மறந்து விடக் கூடாது.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஆடி மாத வெள்ளிக்கிழமையில் தொடங்குவது சிறப்பு. வெள்ளிக்கிழமை ராகு கால காலமான 10.30 முதல் 12 மணி வரை இந்த வழிபாட்டிற்கு உகந்த நேரம். வேலைக்கு செல்பவர்கள் காலையில் செய்ய முடிந்தால் செய்யலாம் அல்லது மாலை 7 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை செய்யலாம். இப்போது இந்த வழிபாடு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இந்த வழிபாடு செய்வதற்கு காளிதேவியின் படம் அல்லது துர்க்கை அம்மன் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மனைப்பலகையில் பச்சரிசி மாவில் கோலம் போட்ட பிறகு அம்மனின் படத்தில் வைத்து அவர்களுக்கு மலர்களை சாற்ற வேண்டும். இவருக்கு சிகப்பு நிறத்திலான மலர்கள் எதுவாயினும் சாற்றலாம். அது இல்லாத பட்சத்தில் வாசனை மிக்க மலர்களை சாற்றுங்கள்.

- Advertisement -

நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல், கல்கண்டு பொங்கல் போன்றவற்றை செய்யலாம் முடியாதவர்கள். பாலில் தேன் நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை கலந்து வைக்கலாம். வெற்றிலை பாக்கு தேங்காய் பதம் போன்றவற்றை வைத்த பிறகு இவர்களுக்கு தூபம் காட்ட வேண்டும். அதில் குறிப்பாக வெண்குங்களிலும் சேர்த்து போட வேண்டும். வெண் குங்கிலியம் துர்க்கை அம்மனுக்கு உகந்த பொருளாக பார்க்கப்படுகிறது. எனவே கட்டாயமாக வெண் குங்கிலியம் போட வேண்டும்.

இவையெல்லாம் செய்து முடித்த பிறகு அம்மன் முன்பு விளக்கேற்றி விட்டு அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை 54 முறை சொல்ல வேண்டும் ஓம் கீரிம் காளி காய நமஹ என்ற இந்த மந்திரத்தை சத்தமாக சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை மந்திரத்தை சொல்லும் போதும் குங்குமம் அல்லது பூக்களால் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். இந்த பூஜை முடிந்த பிறகு தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு பூஜையில் படைத்த நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்கள் பிரசாதமாக கொடுங்கள். குங்குமம் மலர் இவைகளை நீங்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு இந்த நேரத்திற்குள் சென்றால், பண கஷ்டம் எல்லாம் தீரும், குடும்ப கஷ்டம் எல்லாம் தீரும் சந்தோஷம் பல மடங்கு பெருகும்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வரும் பொழுது நீங்கள் எதை நினைத்து இந்த பூஜையை தொடங்கினீர்களோ அது நிச்சயம் நிறைவேறும். குழந்தை பேறு, உடல் ஆரோக்கியம், திருமண தடை, வீட்டின் பிரச்சினை என உங்களுடைய வேண்டுதல் பிரச்சனை அனைத்தும் தீர்க்க சர்வ வல்லமை படைத்த வழிபாடாக இது பார்க்கப்படுகிறது. வாய்ப்பு உள்ளவர்கள் இந்த ஆடி மாதத்தில் இந்த வழிபாடு செய்து பலன் அடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -