உங்கள் வேண்டுதல் நிறைவேற கோவிலில் அடிப் பிரதட்சணம் செய்யும் பொழுது இவ்வாறான தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள். உங்கள் வேண்டுதலுக்கு எந்த பலனும் இருக்காது.

adipradhatchanam
- Advertisement -

நமது முன்னோர்கள் காலம் முதல் இன்றுவரை நம் மனதில் நினைத்த விஷயம் நிறைவேற வேண்டுமென்றால் இறைவனிடம் நாம் உரிமையாக கேட்கின்றோம். எனக்கு இந்த காரியம் நிறைவேறி விட்டால் நான் இந்த வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் என்று வேண்டிக் கொள்கிறோம். அவ்வாறு கோவிலில் பொங்கல் வைப்பது, மொட்டை அடிப்பது, அடிப்பிரதட்சணம் செய்வது, அங்கப்பிரதட்சணம் செய்வது இது போன்ற பல வேண்டுதல்களை வைத்திருக்கிறோம். இவ்வாறு வேண்டிக் கொள்வதன் மூலம் நாம் நினைக்கின்ற காரியம் விரைவில் நிறைவேறும், இறைவன் நமக்குத் துணையாக இருக்கிறார் என்ற நம்பிக்கையும் நம் மனதில் ஆணித்தனமாக இருந்து, நம் முயற்சியை, தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இவ்வாறு நாம் செய்த வேண்டுதலை நிறைவேற்றும் பொழுது அதனை முறையாக செய்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். அவ்வாறு அடிப்பிரதட்சணம் செய்யும் பொழுது அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கோவில்களுக்கு செல்லும் பொழுது அங்கு நமது மனதிற்கு முழு நிம்மதி கிடைத்து விடும். நம் மனதிற்குள் இருக்கும் எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் கோவிலுக்கு சென்று வந்தவுடன் அனைத்தும் சரியாகிவிடும், என்ற தன்னம்பிக்கை கிடைத்துவிடும். அவ்வாறு கோவிலில் நமக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நேர்மறை அதிர்வுகள் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

பண்டைய காலத்தில் எல்லாம் கோவில்களை கட்டும் பொழுது அங்கு அழைப்பதற்கு அளவீட்டு கருவிகள் பயன்படுத்தி எதையும் செய்யவில்லை. அடி என்பது நமது பாதத்தை வைத்து தான் அளக்கப்பட்டது. அவ்வாறு கோவிலை கட்டும் பொழுது அதனை யார் கட்டுகிறாரோ, அந்த ராஜாவோ மன்னரோ தங்கள் பாதங்களின் மூலம் நடந்து சென்று, அளவீடு செய்து, அதன் பிறகுதான் கோவிலை கட்ட துவங்குவார்கள்.

இவ்வாறு அந்த கோவிலை முழுவதுமாக வடிவமைத்த பெருமை அந்த மண்ணறையை சேரும். அதுபோலத்தான் அடிப் பிரதட்சணம் செய்யும் பொழுது அந்த கோவிலை உருவாக்கியதற்கான பலன் நம்மையும் வந்து சேரும் என்று நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் கிடைக்கும் பலன் நமது வேண்டுதல்கள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றிக் கொடுக்கும்.

- Advertisement -

இவ்வாறு வேண்டிக் கொள்ளும் பெண்களுக்கு அடிப் பிரதட்சணம் செய்யும் பொழுது அதில் பல சந்தேகங்கள் தோன்றுகிறது. முதலில் எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க வேண்டும், எந்த திசையில் இருந்து துவங்க வேண்டும் என்றெல்லாம் பல சந்தேகங்கள் இருக்கிறது. ஒரு சிலர் கருவறையைச் சுற்றி மட்டும் அடிப்பிரதட்சணம் செய்வார்கள். இவ்வாறு செய்வதிலும் எந்த பலனும் கிடையாது. முதலில் கோவிலில் நுழையும் பொழுதே அதன் வாசலில் இருந்து கோவிலின் காம்பவுண்டின் பக்கத்தில் நடந்து செல்லுமாறு அடிப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

அது மட்டுமல்லாமல் நீங்கள் கோவிலில் நுழையும் பொழுது உங்கள் இடது புறமிருந்து துவங்க வேண்டும். இடது புறம் துவங்கி கோவிலை முழுவதுமாக சுற்றி வந்து, கொடி மரத்திற்கு அருகே வந்து இறைவனை வேண்டிக்கொண்டு விழுந்து வணங்க வேண்டும். ஒவ்வொரு முறை சுற்றி வரும் பொழுதும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது மட்டுமே உங்கள் வேண்டுதலுக்காக பலன் கிடைக்கும்.

- Advertisement -