பூச்சி தாக்கிய ரோஜா செடிக்கு இத 2 டீஸ்பூன் கொடுத்து பாருங்க! மீண்டும் முளைக்கும் துளிர்கள் செழிப்பாக வளரும்.

rose-plant-onion-potato-peel
- Advertisement -

ரோஜா போன்ற பூச்செடிகளை வைத்து வளர்ப்பது மட்டுமல்ல, அதனை பராமரிப்பது கூட ஒரு கலை தான். எல்லோருக்குமே ரோஜா செடி என்றால் அதீத விருப்பம் தான். அத்தகைய ரோஜா செடி பூச்சி தாக்குதல் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் இருந்தால் நம்மால் அதனை தாங்கிக் கொள்ளவே முடியாது. இலைகள் வதங்கிப் போய், காய்ந்து போயிருக்கும். பச்சையான இலைகள் மஞ்சளாக மாறி சோர்ந்து போயிருக்கும். இது போன்ற பூச்சித் தாக்குதல்கள் ஏற்படும் பொழுது வேர்களுக்கு நாம் பலம் கொடுக்க வேண்டும்.

அப்போது தான் மீண்டும் முளைக்கும் புதிய துளிர்கள் நோய் தாக்குதல்கள் இல்லாமல் செழிப்பாக வளரும். இதற்கு பத்து பைசா செலவில்லாமல் நாம் செய்யக்கூடிய இயற்கை ஃபெர்டிலைசர் தான் இது. அது என்னவென்று? தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம் வாருங்கள்.

- Advertisement -

எந்த வகையான பூச்செடிகள் ஆக இருந்தாலும் நோய் தாக்குதல்கள் இல்லாமல் இருக்க விலை உயர்ந்த உரங்களை வாங்கி போட வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டிலேயே தேவை இல்லை என்று குப்பையில் தூக்கி எறியும் காய்கறி கழிவுகளும், பழ கழிவுகளும், வேக வைத்த தண்ணீரும் நிறையவே சத்துக்களைக் கொடுக்கும். பத்து பைசா செலவில்லாமல் கொடுக்கக் கூடிய இந்த உரம் உங்கள் வீட்டு செடிகளுக்கு எவ்வளவு சக்தியை கொடுக்கும்? என்பது சொல்லில் அடங்காதவை.

potato-peel

எனவே அவற்றையெல்லாம் வீணாகக் குப்பையில் எரியாமல் முறையான வகையில் உங்களுடைய கொஞ்ச நேரத்தை செலவிட்டு உரமாக மாற்றி பயன்படுத்தினால் நிச்சயம் செலவில்லாத இயற்கை உரம் உங்கள் வீட்டு செடிகளை செழிப்பாக வளர செய்துவிடும். குறிப்பாக ரோஜா செடிகளுக்கு இவ்வகையான இயற்கை உரங்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும். நோய் தாக்குதலுக்கு உள்ளான ரோஜா செடிக்கு வேரில் பலம் இல்லாமல் போய்விடும். எனவே முதலில் ரோஜா செடியின் வேருக்கு பலத்தைக் கொடுத்து மீண்டும் ஊட்டத்தை அளிக்க வேண்டும்.

- Advertisement -

இதற்கு நாம் தேர்ந்தெடுக்க இரண்டு பொருட்கள் உண்டு. ஒன்று வெங்காயத்தின் உடைய தோல், சமைக்கும் பொழுது வெங்காய தோலை தூக்கி எறிந்துவிடாமல் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் இரண்டாவதாக நாம் எடுக்க இருப்பது உருளைக்கிழங்கு தோல். உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கூட வீணாக்காமல் செடிகளின் வேர்களுக்கு தெளித்து வரலாம். உருளைக்கிழங்கு சீவிய தோல் பகுதிகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தோல் பகுதி மூழ்கும் அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் ஊற வைத்து பின்னர் மறுநாள் காலையில் அந்த தண்ணீருடன் உருளைக்கிழங்கு தோல் மற்றும் நீங்கள் எடுத்து வைத்த வெங்காய தோல் இவற்றையும் சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

rose-plant

இந்த விழுதை 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் நோய் தாக்குதலுக்கு உள்ளான உங்களுடைய ரோஜா செடியின் வேர் பகுதியை நன்கு கைகளால் கிளறிவிட்டு இந்த தண்ணீரை அப்படியே ஊற்றி விடுங்கள். 10 நாட்களுக்கு ஒரு முறை இதனை செய்து வந்தால் போதும்! ஒரே மாதத்தில் மீண்டும் உங்களுடைய ரோஜா செடி நோய் தாக்குதல் இல்லாமல் புத்தம் புதிய துளிர்களை செழிப்பாக கொடுக்கும். நோய் தாக்குதலுக்கு உள்ளான இலைகளையும், தண்டுகளையும் முதலிலேயே வெட்டி விட்டு விடுங்கள். பிறகு இதனை கொடுத்தால் மீண்டும் முளைக்கும் புதிய தண்டுகள், துளிர்கள் நோய் தாக்குதல் இல்லாமல் நல்ல முறையில் துளிர்க்கும்.

- Advertisement -