கார்த்திகை தீபத்திற்கு பயன்படுத்திய பழைய திரிகளை என்ன செய்வது?

agal
- Advertisement -

கார்த்திகை தீபம் மூன்று நாட்களும் நம்முடைய வீட்டில் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி வீடு முழுவதும் பிரகாசமாக விளக்கு ஏற்றி வைத்திருப்போம். அதில் இருக்கும் திரிகள் மட்டும் முழுசாக எரிந்து இருக்காது. நிறைய பழைய திரிகள் எண்ணெயில் ஊறியபடி மிச்சம் இருக்கும்.

அதை எல்லாவற்றையும் அப்படியே எடுத்து குப்பையில் தான் தூக்கி போடுவோம். அப்படி செய்யாதீங்க. இந்த பழைய திரிகளை மீண்டும் எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றிய பயனுள்ள சின்ன வீட்டுக்குறிப்பு இது. படித்து பாருங்கள். குறிப்பு படித்திருந்தால் நீங்களும் இதை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -

பழைய திரிகளை மீண்டும் எப்படி பயன்படுத்துவது?

கார்த்திகை தீப மண் அகல் விளக்கில் இருக்கும் பழைய திரிகளை எல்லாம் எடுத்து ஒரு சின்ன மண் அகல் விளக்கில் சேகரிக்கவும். இதில் எண்ணெய் பசை இருக்கும். பிறகு இன்னொரு மண் அகல் விளக்கை எடுத்து அதில் நான்கைந்து திரிகளை போட்டுக்கோங்க. இதோடு இரண்டு கிராம்பு, இரண்டு பிரியாணி இலைகளை கிழித்து போட்டு ஒரு கற்பூரத்தை நசுக்கி போட்டு பற்ற வையுங்கள்.

கற்பூரமும் எரியும், அந்த திரியில் இருக்கும் நல்லெண்ணையோடு சேர்ந்து எல்லா பொருட்களும் நன்றாக தீப்பற்றி எரிய தொடங்கும். பிறகு தீ அணைத்தவுடன் இதிலிருந்து லேசாக புகை வரும். இந்தப் புகை வீட்டில் இருக்கும் கொசுக்களை எல்லாம் விரட்டும். அதுமட்டுமில்லாமல் இப்போது கொஞ்சம் மழைக்காலம் என்பதால் வீட்டில் ஈர வாடை வீசிக்கொண்டே இருக்கும். அந்த வாடையை போக்கக்கூடிய சக்தியும் இந்த புகைக்கு உண்டு.

- Advertisement -

உங்க வீட்டில் நிறைய விளக்கு திரி இருந்தால் அதை அதை ஒரு சின்ன டப்பாவில் போட்டு சேகரித்து தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போட்டு, மாலை 6 மணிக்கு மேலே வீட்டில் இப்படி புகை போடுங்கள். கொசுத்தொல்லை இருக்காது வீட்டில் ஈர நாற்றமும் அடிக்காது.

பழைய மன்னர்கள் விளக்குகளை சுத்தம் செய்ய சூப்பர் ஐடியா

சரி, இந்த பழைய விளக்கை எல்லாம் எண்ணெய் போக சுத்தம் செய்வது இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய டாஸ்க். இந்த அகல் விளக்கில் இருக்கும் எண்ணெயை முழுமையாக எப்படித் தான் சுத்தம் செய்வது. இதற்கும் ஒரு ஐடியா இருக்குதே. ஒரு பழைய தோசை கல்லை கேஸ் ஸ்டவ்வில் வைத்து நன்றாக சூடு செய்யுங்கள். அந்த சூடு செய்த தோசை கல்லுக்கு மேலே கார்த்திகை தீபத்திற்கு பயன்படுத்திய அகல்விளக்குகளை எல்லாம் கவிழ்த்து வையுங்கள்.

- Advertisement -

தோசை கல்லும் இந்த மண் அகல் விளக்கும் நன்றாக சூடானதும், அடுப்பை அணைத்து விடுங்கள். அந்த தோசை கல்லில் இருக்கும் சூட்டிலேயே இந்த மண் அகல் விளக்கில் இருக்கும் எண்ணெய் எல்லாம் கக்கி வெளியே தள்ளிவிடும். பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து நன்றாக இந்த அகல் விளக்குகளை துடைத்து எடுக்கவும், அல்லது ஒரு பஞ்சை வைத்து துடைத்து எடுத்தால், அந்த எண்ணெய் பசை நிறைந்த பஞ்ஜை மேலே சொன்னபடி கொசு விரட்டியாக ஏற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் கரைய சங்கடஹர சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய வழிபாடு

இப்போது எண்ணெய் நீங்கிய மண் அகல் விளக்குகள் உங்களுக்கு கிடைத்திருக்கும். ஒரு பெரிய தோசை கல்லாக இருந்தால் 10 அல்லது 15 மண் அகல் விளக்கை கூட மொத்தமாக வைத்து இதே போல சுத்தம் செய்து கொள்ளலாம். பிறகு வழக்கம் போல சுடுதண்ணியில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஊற்றி இந்த மண் அகல் விளக்குகளை போட்டு ஊறவைத்து கழுவி எடுத்து பின்பு, நல்ல தண்ணீரில் கழுவி எடுத்து, சுத்தமாக துடைத்து வெயிலில் காய வைத்து ஸ்டொர் செய்தால் மண் அகல் விளக்கு அடுத்த வருடம் வரை பாதுகாப்பாக பத்திரமாக இருக்கும்.

- Advertisement -