அகத்தியர் அருளிய அனுமந்தன் வசியக்கட்டு

agathiyar1

செய்வினை பில்லி சூனியத்திலிருந்து நம்மை எப்படி காத்துக் காத்துக்கொள்வது மற்றும் தீவினைகள் நம்மை அண்டாமல் இருக்க நாம் எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதையும் இப்பதிவில் காணலாம்.

agathiyar

செய்வினை பில்லி சூனியம் என்பது ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி ஆகும். பொறாமையால் நம் வளர்ச்சியை தடுப்பதற்காகவும், நமக்கு தீமைகள் நடக்க வேண்டும் என்பதற்காகவும், இந்த செய்வினை வைக்கப்படுகிறது. இந்த பில்லி, சூனியம் நமக்கு எப்படி வைக்கிறார்கள் என்பதை பற்றி பார்த்தால், நம் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சிறிய சிறிய பொருட்களை அதாவது, நமது ஆடைகள், தலைமுடி நம் காலடி மண்ணை வைத்து இந்த சூனியம் ஆனது வைக்கப்படுகிறது. இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள அகத்தியர் கூறிய மந்திரங்களை நாம் கூறினால் பில்லி சூனியத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.

அகத்தியர் அருளிய அனுமன் வசியக்கட்டு
பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு
பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு
யாரப்பா அறிவார் இவரின் கூத்து
ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா
கூறப்பா ஓம் ஹரி ஆதி யென்று
குற்றமில்லா நாராயணா மேலும்
சேரப்பா அகிலாண்ட நாயகா வென்று

சொல்லிடுவாய் நமோ நமோ வென்றே
என்றுமே அனுதினமும் ஓதுமனுமந்தா
லெங்காபுரி ராவண சம்மாரா
சென்றுமே சஞ்சீவி ராயா மேலும்
சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
வென்று நீ படித்து படித்து வரும்
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்
கொன்றுமே பிரம ராஷசிகளைப் பிடி பிடி

குலுங்க அடி அடி கட்டுக் கட்டே
கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ
முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்
மேலும் ஆம் மிளைய வனுமந்தா
கட்டி வா வா சுவா ஹா கூறு நீயும்
கட்டிய மந்திரந் தன்னை மைந்தா

மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே
மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு
துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே
பாவி தானாக்கால் யேது மேன்மை
– அகத்தியர்

agathiyar

ஒருவர் பாவியாக இருந்தால் இந்த மந்திரம் பலிக்காது. அதே போல உடல் சுத்தமும் மன சுத்தமும் இன்றி இந்த மந்திரத்தை ஜபித்தாலும் பயன் இல்லை.