7 கிலோவில் ஒரே ருத்ராட்சம், முற் பிறவி பற்றி சொல்லும் சித்தர் பீடம் – வீடியோ

Lord Murugan Ruthratcham

நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் சில சூழ்நிலைகளின் போது நாம் இப்போது தான் இத்தகைய வாழ்க்கையை வாழுகிறோமா அல்லது முற்பிறவி என ஒன்று இருந்து அதன் காரணமாகவே நாம் இப்போது வாழும் இந்த வாழ்க்கை ஏற்பட்டதா? என்ற கேள்வி நமக்குள் எழும். ஆனால் நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் தங்களுடைய யோகம் மற்றும் தவத்தால் தங்களுடைய முற்பிறவி மட்டுமில்லாமல், பெரும்பாலான மனிதர்களின் முற்பிறவியின் ரகசியங்களையும் அறிந்து, அதற்கான பலன்களை ஓலை சுவடிகளில் எழுதி “நாடி ஜோதிடக்” கலையாக உலகிற்கு அளித்தனர். அப்படி அந்த நாடி ஜோதிடம் படிக்கும் ஒரு துறவியை பற்றிய இக்காணொளியை காண்போம்.

தன்னிடம் வரும் மக்களுக்கு அகத்தியர் சித்தரின் அருளினால் அவர்களின் முன் ஜென்மத்தை பற்றி “ஜீவ நாடி” படித்து பலன் கூறுகிறார் இந்த துறவி. இவருடைய பெண் சீடர் அகத்திய சித்தரைப் பற்றி கூறும் போது நாம் நினைப்பது பார்ப்பது போல் அகத்திய சித்தர் குள்ளமான, உருவமும் பெருத்த வயிறும் கொண்டவரில்லை என்றும் மாறாக நெடிய உருவமும், சராசரியான தேகமும் கொண்டவர் எனவும் கூறுகிறார். அதுபோல சித்தர்களுகெல்லாம் குருவான முனிவர் எனும் “குருமுனி” என்ற வார்த்தை மருவி “குறுமுனி” என்று தவறாக அகத்தியர் அழைக்கப்பட்டதாக கூறுகிறார்.

இங்கு வருபவர்களுக்கு நாடி ஜோதிடம் படிக்கும் இந்த துறவி தன் இளமை காலத்தில் தன் கண்பார்வையை இழந்ததால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்த போது, ஒரு நாள் இவர் உறங்கும் போது இவர் கனவில் தோன்றிய அகத்திய சித்தர், இவரின் முன்வினை கர்மாவினாலே இவரது கண்பார்வை பாதிக்கப்பட்டதாகவும், அது கூடிய விரைவில் சரியாகும் என்று அகத்தியர் கூறிய படியே தனது கண்பார்வை மீண்டும் கிடைத்ததாக கூட்டுகிறார்.

இதன் பிறகு தீவிர ஆன்மிக வாழ்வில் தாம் ஈடுபட்டு பல சித்தர்கள் வாழ்ந்த மலைகுகைகளிலும், காடுகளிலும் இவர் தவம் செய்த போது சித்தர்களின் அருளினால் தமக்கு நாடி ஜோதிடம் படிக்கும் ஆற்றல் கிடைத்ததாக கூறுகிறார். மேலும் அச்சித்தர்கள் தமக்கும், தம்மிடம் வரும் மக்களும் வழிபட்டு நலம் பெற “7 கிலோ எடைகொண்ட மிகப்பெரிய “ருத்திராட்சத்தை” தந்ததாகவும் அதை “அகத்தியலிங்கமாக” கருதி தாங்களும், தங்களை நாடி வரும் மக்களும் வழிபட்டு நலம் பெறுவதாக கூறுகிறார் அவரின் பெண் சீடர்.