இந்தோநேஷியாவில் வழிபடப்படும் தமிழ் சித்தர் பற்றி தெரியுமா ?

agathiyar-1-1

நமது நாடே ஒரு “ரிஷிகளின் பூமி” அல்லது “சித்தர்களின் பூமி” என்று சொல்வது முற்றிலும் பொருத்தமானது ஆகும். இந்த நாட்டில் சித்தர்களும், முனிவர்களும், பிற எண்ணற்ற ஆன்மிகப் பெரியோர்களும் தோன்றி இந்த நாட்டின் மக்கள் மேன்மையடைய உழைத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்நாட்டிற்கும், இம்மக்களுக்கும் மிகுந்த நன்மைகளைக்கக்கூடிய செயல்களை இயற்றிய சித்தர்களின் தலைமை குருவான “ஸ்ரீ அகத்திய சித்தரின்”சில மகத்தான செயல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

agathiyar

“ஸ்ரீ அகத்திய முனிவரின்” தோற்றம் குறித்து பலவித கருத்துக்கள் உள்ளது. உலகின் மூத்த மொழியான “தமிழ் மொழிக்கு” எழுத்து வடிவம் கொடுத்தவராக கருதப்படுகிறார் அகத்தியர். இத்தமிழ் மொழியில் பல ஆன்மிகம், மருத்துவம், ஜோதிடம் சம்பந்தமான பாடல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சிவபெருமான் மனிதர்கள் பயன்படுத்தி நலம் பெற அன்னை பராசக்தியிடம் “வர்மக்கலையை” பற்றி கூற, அதை பராசக்தி அகத்தியருக்கு கூற, அவர் தனது ஓலைச் சுவடியின் மூலம் பாடலாக எழுதி இவ்வுலகிற்கு தெரிவித்தார்.

முற்காலத்தில் தென்னகத்திலிருந்து வடஇந்திய பகுதிக்கு செல்ல வங்க கடலில் கப்பலின் மூலம் பயணித்து, வங்காளத்திற்கு சென்று அங்கிருந்து தரைவழிப்பயணமாக இமயமலை யாத்திரை சென்றனர். அதே போல் மேற்குத்திசையில் அரபிக்கடலில் கப்பலில் பயணித்து குஜராத் பகுதிக்கு சென்று, அங்கிருந்து தரைவழிப்பயணமாக வடநாட்டிற்கு பயணம் மேற்கொண்டனர். இக்காலகட்டத்தில் அகத்திய மாமுனிவர் மத்திய இந்தியாவில் இருக்கும் “விந்திய மலைகளைக்” கடந்து தென்னிந்தியாவிற்கு தரை மார்கமாக செல்லும் வழியைக் கண்டுபிடித்தார்.

Agathiyar

அதே போல் அகத்திய முனிவர் வங்கக் கடலையே தீர்த்தமாக குடித்து, அதிலிருந்த அரக்கர்களை வெளியே துப்பியதாக ஒரு பாடல் உள்ளது. உண்மையில் இது ஒரு உருவகப் பாடல் ஆகும். வங்கக் கடலில் பயணிக்கும் “சோழ” மற்றும் “பாண்டிய” மன்னர்களின் கப்பலைகளைக் கொள்ளையடிக்கும் “தென்கிழக்காசிய” கடற்கொள்ளையர்களை, தனது அறிவாற்றல் மற்றும் தவசக்தியால் அகத்திய சித்தர் ஒழித்ததையே அப்பாடலில் அவ்வாறு உருவகமாக கூறியுள்ளனர். மேலும் அம்மன்னர்களின் ராஜ்ஜியம் அந்த தென்கிழக்காசிய நாடுகளான “இந்தோநேஷியா, மலேஷியா, வியட்னாம்” மற்றும் பல நாடுகளில் பரவுவதற்கும் அகத்தியர் உதவி புரிந்துள்ளார். இன்றும் அகத்தியர் அந்த நாடுகளில் ஒரு மகானாக வழிபடப்படுவதைக் காண முடியும்.

இதையும் படிக்கலாமே:
பாவம் போக்கும் அகத்தியர் மூல மந்திரம்

English overview:
Here we have some interesting facts about Agathiyar siddhar in Tamil. He is called as guru for all the siddhar in Tamil.