- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅக்னி நட்சத்திரம் ஆரம்பம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

- Advertisement -

அக்னி நட்சத்திர காலம் என்பது சூரியன் தன் கதிர்களை பரப்பி அதிகமான வெப்பத்தை வெளியிடும் ஒரு இயற்கையான நிகழ்வாகும். அக்னி நட்சத்திரம் நாளை மே 4 ஆம் தேதி ஆரம்பித்து, மே 28 ஆம் தேதி முடிகிறது. இந்த அக்னி நட்சத்திரத்தில் உடல் நலனையும், ஆன்மீக வழிமுறைகளையும் பின்பற்றுவது நன்மைகளை தரக்கூடியது ஆகும். அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிய இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து இந்த இப்பதிவில் பகிர்ந்து கொள்வோம்.

அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் பொழுது செய்ய வேண்டியவை:
அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் தண்ணீரை பரிசுத்தமாகவும், அதிகப்படியாகவும் பருகுவதை வாடிக்கையாக மாற்ற வேண்டும். உடல் வெப்பத்தின் காரணமாக நீர் இழப்பு அதிகரிக்கும், இதனால் உஷ்ணம் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும். நிறைய தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். உங்கள் ரொட்டீன் உணவு முறைகளை மாற்றி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, குளிர்ச்சி பொருந்திய உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

- Advertisement -

நீர் மோர், எலுமிச்சை, நெல்லிக்காய், பூசணி, பானகம், துளசி தீர்த்தம், வெந்தய கஞ்சி போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். குளிர்ச்சி தரக்கூடிய பழ வகைகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். உஷ்ணம் உண்டாக்கக்கூடிய காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகாய், கொழுப்புள்ள உணவையும், செரிமானம் ஆகாத கடினமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இது உடல் உஷ்ணத்தை அதிகரித்து விடும். எளிதாக செரிமானம் ஆகக்கூடிய எளிமையான உணவுகளை சாப்பிடுவது நல்லது. பழைய கஞ்சி காலையில் குடித்தால் இன்னும் ரொம்பவே நல்லது.

இயற்கை மாற்றத்தின் பொழுது நாமும் சற்று நம் பழக்கவழக்கங்களை லேசாக மாற்றினால் தான் உடல் நலனில் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம், மேலும் மன நலன் மற்றும் பக்தியுடன் பார்த்தோமேயானால் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் தர்ம செயல்களில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும் என்கிறது சாஸ்திரங்கள். அதாவது மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் இந்நேரத்தில் தண்ணீர் வைத்து புண்ணியம் தேட வேண்டும்.

- Advertisement -

கடுமையான வேலைகளில் ஈடுபடக்கூடாது, புதிய முயற்சிகள், வீடு கட்டுதல், வீட்டை மாற்றுதல் போன்ற செயல்களை செய்யக்கூடாது. திருமண வைபவங்களை கூட, சிலர் இந்த நேரத்தில் நடத்த மாட்டார்கள். அது அவரவரின் வழக்கப்படி செய்வது ஆகும். அக்னி பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில், நற்காரியங்களை செய்ய வேண்டும். தண்ணீர் பந்தல் அமைப்பது, செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வாட விடாமல் பாதுகாப்பது, ஜீவராசிகளுக்கு தண்ணீர் வைப்பது, கோவில்களில் நீர்மோர் தானம் செய்வது பக்தர்களுக்கு மற்றும் மக்களுக்கு நீர் தானம் செய்பவர்களுக்கு அக்னி பகவானுடைய ஆசீர்வாதம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
பணம் தரும் மயில் இறகு பரிகாரம்

காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்வது, ஆதித்ய ஹிருதயம் படிப்பது போன்ற விஷயங்களையும் நீங்கள் செய்து அக்னி பகவானுடைய அருளை பெற்றுக் கொள்ளலாம். அக்னி பகவான் அருள் இருந்தால், இக்காலத்தில் நோய்கள் வராமல் இருக்கும் என்பது நம்பிக்கை. துளசி செடியை பூஜை செய்வது, அக்னி பகவானுக்கு கோவிலில் விளக்கு ஏற்றுவது மற்றும் கோதுமை தானம் செய்வது போன்றவற்றை செய்யலாம். சுற்றுலா போன்ற நீண்ட பிரயானங்களை தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. உடலுக்கும், மனதிற்கும் அசௌகரியம் தரும் செயல்களை செய்யாதீர்கள். மனதை ஜபம் செய்து சாந்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த அக்னி நட்சத்திரம் இனிமையாக அமைய இவற்றை கடைபிடியுங்கள்.

சற்று முன்