ஒரு குகையை சுற்றினால் வாழ்நாளில் சனியே பிடிக்காது – சொல்கிறார் அகோரி பாபா

Agori baba

வாரத்தின் ஏழு நாட்களில் 6 நாட்கள் முழுவது ஒரு மலையில் குகையில் தியானம் இருக்கிறார் லால் பாபிஜி என்னும் சித்தர். மீதமுள்ள ஒரு நாளில் அதாவது வெள்ளிக்கிழமை அன்று மட்டும் குகையை விட்டு வெளியில் வந்து மக்களின் குறைகளை தீர்க்கும் வழிகளை கூறுகிறார் இவர். அதோடு இவர் தங்கி உள்ள குகை பற்றியும் இவர் கூறியுள்ளார். இதோ அதன் வீடியோ.

இவரின் குடில் ஒன்று மலையின் அடிவாரத்தில் உள்ளது அங்கு தான் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள் வாக்கு கூறுகிறார் பாபாஜி. இவர் இதற்க்கு முன்பு ஐந்து ஜெனின்மகள் எடுத்ததாகவும், இது தன்னுடைய ஆறாவது ஜென்மம் என்றும் அவர் கூறுகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு ஜீவ சமாதி அடைய திட்டமிட்டிருந்தாராம் ஆனால் தன்னுடைய மூதாதையரின் சக்தி தான் தற்சமயம் ஜீவ சமாதி அடைவதை விரும்பவில்லை என்றும் அவரகளது சக்தி தான் ஜீவ சமாதி அடைவதை தடுப்பதாகவும் அதானால் இன்னும் சிறிது காலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இதற்கு முன்பு பல ஜென்மங்கள் அதே இடத்தில் அவர் வாழ்ந்துள்ளதால் அந்த இடம் அவருக்கு மிகவும் பரிச்சயமானது என்று அவர் கூறுகிறார். மிக பெரிய பிரச்சனைகள் முதல் சிறிய பிரச்சனை வரை அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இவர் தீர்வு கூறுகிறார். இவர் தங்கியுள்ள குகையை எவர் ஒருவர் மூன்று முறை சுற்றி வருகிறாரரோ அவருக்கு வாழ்நாளில் சனியே பிடிக்காது என்றும் இவர் கூறியுள்ளார்.