காலத்திற்கும் அழியாத செல்வத்தை பெற, ஐப்பசி மாதம் நாம் செய்யவேண்டிய 3 தானங்களும் அதன் பலன்களும்.

murugan

செல்வம் என்று சொன்னதும் வெறும் பணம் காசை மட்டும் நாம் நினைத்துக் கொள்ளக் கூடாது. அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வாழ்த்தும் போது, பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று சொல்லி தான் வாழ்த்தை தெரிவிப்பார்கள். அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களையும் பெற்று வாழ வேண்டுமென்றால் ஐப்பசியில் முருகப் பெருமானை நினைத்து எந்த தானங்களை நாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மற்ற சமயங்களில் நாம் செய்யும் தானத்தை விட, இந்த ஐப்பசி மாதம் செய்யக்கூடிய தானத்திற்கு இரட்டிப்பு பலன் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

murugan

அனைத்து ஐஸ்வர்யங்களையும் நமக்கு தரக்கூடிய அழகன் முருகனுக்கு, உகந்த மாதம் இந்த ஐப்பசி மாதம். முருகனை வேண்டி இருக்கக்கூடிய சஷ்டி விரதமும் இந்த ஐப்பசியில் தான் தொடங்குகின்றது. குறிப்பாக இந்த ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினம், மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதும் நம்மில் பல பேருக்கு தெரியும். இந்த அமாவாசையில் அவரவர் வீட்டு வழக்கப்படி நோன்பு வழிபாட்டு முறைகளை செய்வதோடு சேர்த்து,  குலதெய்வ வழிபாட்டை கட்டாயம் செய்ய வேண்டும். முதலில் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து, குலதெய்வத்தை நினைவுகூர்ந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக ஐப்பசி அமாவாசை தினத்தன்று, மகாலட்சுமியையும், குபேரரையும் மனதார நினைத்து வேண்டிக்கொண்டு வீட்டில் பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு மஞ்சள் நிறப் புஷ்பம், மஞ்சள் கிழங்கு, தாலிக்கயிறு போன்ற மங்களகரமான பொருட்களை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து தானமாக கொடுக்கலாம். முடியாதவர்கள் கோவிலுக்கு சென்று அங்கு வருகை தரும் ஒரு சுமங்கலி பெண்ணுக்கு இந்த தானத்தை கொடுத்தாலும் மிகவும் நல்லது. இப்படிப்பட்ட பொருட்களை தானமாக வழங்கினால் வீட்டில் சுபிட்சம் நிலைத்திருக்கும்.

selvangal

உங்கள் வீட்டில் பிறந்த பெண்கள் கன்னிப் பெண்களாக இருந்தாலும் சரி, சுமங்கலிப் பெண்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு வெற்றிலை பாக்கு குங்குமம் மஞ்சள் போன்ற பொருட்களை, தாய் தந்தையர்கள் கட்டாயம் தரவேண்டும். உங்கள் வீட்டிலிருந்து திருமணமாகி சென்ற பெண்ணாகளுக்கு, இந்த நல்ல நாளில் மங்களகரமான பொருட்களை கொடுப்பது, பிறந்த வீட்டிற்கு அதிகப்படியான நன்மையை சேர்க்கும் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்பவர்கள் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அடுத்தபடியாக வீட்டில் உள்ள ஆண் பெண் யாருக்காவது திருமணம் நடக்காமல் இருந்தாலும் சரி, குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருந்தாலும் சரி, இந்த ஐப்பசி மாதம் முடிவதற்குள் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்துவிட்டு, உங்களுடைய பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு, கணவன் மனைவி இருவரும் தம்பதி சரீரமாக ஒரு ஏழை சுமங்கலி பெண்களுக்கு பின்வரும் பொருட்களை தானமாக கொடுப்பது மிகவும் நல்லது.

thambulam

ஒரு தாம்பூலத்தட்டு, மஞ்சள் புடவை, மஞ்சள் ரவிக்கைத்துணி, மஞ்சள் நிற பழ வகைகள், மஞ்சள் நிறப் பூக்கள், மஞ்சள் நிற வலையல், வெற்றிலை பாக்கில் 11 ரூபாய் தட்சணையாக வைத்தால் கூட போதும், குறிப்பாக அந்த வெற்றிலை பாக்கு என் மேல் இரண்டு விரலி மஞ்சளை வைத்துக் கொடுங்கள். இப்படியாக உங்களுடைய சக்திக்கு ஏற்றவாறு மஞ்சள் நிற பொருட்களை, மஞ்சள் நிற மங்களகரமான பொருட்களை வைத்து அந்த தாம்பூலத்தட்டோடு தானமாக கொடுத்தால் ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களின் மூலம் வரும் பிரச்சனைகளும் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் தானம் கொடுக்கப்போகும் அந்தப்பெண் உங்களுடைய வயதில் மூத்தவராக இருந்தால், அவர்களது காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவது மேலும் சிறப்பு.

virali-manjal

முருகப்பெருமானை வேண்டிக்கொண்ட கஷ்டங்கள் தீர வேண்டும் என்று ஐப்பசி மாதம் முடிவதற்குள் முருகப் பெருமான் சன்னிதியில் நின்று அங்கு வருகை தரும் பக்தர்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு மஞ்சள் நிற வாழைப்பழத்தை தானம் கொடுப்பது மிகவும் நல்லது. உங்களுடைய குழந்தைகள் கல்வியில் சிறப்பாக வளர கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் போன்றவற்றையும் தானமாக கொடுக்கலாம்.

thambulam

இதுதவிர திருக்கோயில்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், கோவிலுக்கு தேவையான விபூதி, சந்தனம், தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணெய், போன்ற பொருட்களை உங்களால் இயன்ற அளவு வாங்கி தானம் கொடுப்பதும் நல்ல பலனைக் கொடுக்கும். நம்முடைய வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் குழந்தை செல்வம், கல்வி செல்வம், வெற்றி செல்வம், பொன் பொருள் சேர்க்கை இவைகளை பெறுவதற்கு நம்மால் முடிந்த தானங்களை செய்வதில் தவறு ஒன்றும் கிடையாது.

praying-god

நம்முடைய கஷ்டங்கள் தீருவதற்கு நாம் செய்யக்கூடிய பரிகாரங்களை விட, நம் அடுத்தவர்களுக்கு தானமாகக் கொடுக்க கூடிய பொருட்களுக்கு சக்தி அதிகம் என்பதையும், நாம் நினைவில் கொண்டு உண்மையான பக்தியோடு இறைவனை நம்பியவர்களை, எம்பெருமான் என்றைக்குமே கைவிட்டதில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
லட்சுமி தேவி மற்றும் குபேர பகவானின் சாபத்தை பெற்றுத் தரக்கூடிய மிகப்பெரிய தவறு. இந்த தவறுகளை நீங்கள் செய்தால், வறுமையிலிருந்து உங்களை காப்பாற்ற யாராலும் முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.