நாளை 20/10/2021 அற்புத சக்தி வாய்ந்த ஐப்பசி பவுர்ணமி! உங்க வீட்ல அரிசி ஆழாக்கு இருந்தா இப்படி செய்யுங்க, 7 தலைமுறைக்கு வறுமையே வராது.

aippasi-pournami
- Advertisement -

ஒவ்வொரு பௌர்ணமியும் இந்த பிரபஞ்சத்தில் சிறப்பான சக்திகளை பரவ செய்கிறது. அந்த வகையில் ஐப்பசி பவுர்ணமி இன்னும் கூடுதல் சக்தியை வெளியிடும். ஐப்பசி மாதத்தில் வரும் இந்த பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். எனவே இந்த நாளில் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகவும் விசேஷமானது. மேலும் ஐப்பசி பவுர்ணமியில் வீட்டில் செய்ய வேண்டிய விஷயம் என்ன? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

bramma-5th-head

ஒரு முறை பிரம்மனுக்கு தனக்கு ஐந்து தலைகள் இருக்கிறது என்கிற ஆணவம் ஏற்பட்டது. தலைக்கனம் பிடித்து தன்னை உயர்வாக நினைத்த காரணத்தினால் சிவபெருமான் அவருக்கு பாடம் புகட்ட நினைத்தார். தானும் சிவபெருமானுக்கு நிகர் என்கிற இந்த ஆணவத்திற்கு முடிவு கட்ட சிவபெருமான் பிரம்மதேவர் தலையில் இருந்து ஒரு தலையை வெட்டி எடுத்து கையில் வைத்துக் கொண்டார். கையில் ஒட்டிக் கொண்ட அந்த ஒரு தலையால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

- Advertisement -

கையில் இருக்கும் தலையானது திருவோடு ஆக மாறி போனது. பிரம்மஹத்தி தோஷம் விலக இந்த திருவோடு அன்னத்தால் நிரம்ப வேண்டும் என்பது பரிகாரமாக கூறப்பட்டது. ஒரு தலையைக் கொய்ததால் பிரம்மனுக்கு தலைகனம் அகன்றது. அன்னத்தால் திருவோடு நிரம்ப வேண்டும் என்று சிவபெருமான் அன்னபூரணியை காண காசிக்கு சென்றாராம். காசியில் இருக்கும் அன்னபூரணி அள்ள அள்ள குறையாத அன்னத்தை மக்களுக்கு வாரி வழங்குபவள்.

Annapoorani

அன்னபூரணியின் அருள் இருந்தால் தான் ஒருவர் வறுமை இல்லாமல் என்றென்றும் நிம்மதியான உணவை சாப்பிட முடியும். அன்ன தோஷம் இருந்தால் எவ்வளவு பணம் உங்களிடம் இருந்தாலும் நிம்மதியாக ஒரு வாய் உணவை உங்களால் சாப்பிட முடியாமல் போய்விடும். அன்னபூரணியை அடைந்து அவர்களுடைய கைகளால் அன்னத்தை பெற்றதும் சிவபெருமானுடைய பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அவர் கையிலிருந்த திருவோடும் மறைந்தது. இந்நிகழ்வு ஐப்பசி பௌர்ணமியில் தான் நடைபெற்றது. ஐப்பசி பவுர்ணமியில் நிலவின் ஒளி பூமிக்கு அருகில் வீசுவதால் அதிகமான ஆற்றல் இருக்கும்.

- Advertisement -

சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்ற பின்பு இறுதியாக அன்னத்தால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்வார்கள். இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இன்மையிலும் சுகபோக வாழ்வு அமையும். நாமும் சிவ பெருமான் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள நந்தி பகவானை வழிபட்டு பின் அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வது சிறப்பு, மேலும் வீட்டில் அரிசி படி எனப்படும் அரிசி அளக்கும் ஆழாக்கு எடுத்து அதில் முழுதுமாக பச்சரிசியை நிரப்பிக் கொள்ள வேண்டும். இதனை அப்படியே கொண்டு போய் பூஜை அறையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். முருகனுடைய வேல் வைத்திருப்பவர்கள் அந்த வேலை இதனில் சொருகிக் கொள்ளலாம்.

arisi-alavai

அன்னபூரணி மந்திரம்:
ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம் க்ளீம் அன்னபூர்ணாய நமஹ

ration-rice

அன்னபூரணியின் மூல மந்திரத்தை உச்சரித்தபடி அதற்கு தூப, தீப ஆராதனைகள் காண்பிக்க வேண்டும். பின்னர் பூஜைகள் நிறைவடைந்த பின்பு இந்த அரிசியில் இருந்து ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து நீங்கள் தினமும் சமைக்க பயன்படுத்தும் அரிசி பெட்டியில் போட்டு விட வேண்டும். மீதமிருக்கும் அரிசியை கொண்டு அதனுடன் கூடுதலாக தேவைப்படும் அரிசியையும் சேர்த்து நைவேத்யம் தயார் செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது கலவை சாதம் தயார் செய்து குடும்பத்தில் இருக்கும் அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். பின்பு நாய், பூனை, காகம் போன்ற வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு படைக்கலாம் அல்லது ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இப்படி செய்வதால் ஏழு தலைமுறைக்கு வரக்கூடிய வறுமை நீங்கி அன்ன தோஷம் விலகி நிம்மதியான உணவைத் உங்களால் சாப்பிட முடியும்.

- Advertisement -