தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் வரலாறு

siva

தாராசுரம் ஈஸ்வரர் கோயில்:

இந்தக் கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சோழ மன்னன் இராசராசனால் கட்டப்பட்டது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் ராஜராஜன் அங்கிருந்து இடம்பெயர்ந்து தாரசுரத்திற்கு வந்து இந்த கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்கள் இங்குள்ள கல்வெட்டுக்களில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

rajarajan

தல வரலாறு:

இரண்டாம் இராசராசன் ஆண்டகாலத்தில் இந்த கோவில் ராஜராஜேஸ்வரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் அது காலப்போக்கில் தாராசுரம் என்ற பெயரில் மாறிவிட்டது. ஐராவதேசிவரரின் துணைவி தெய்வநாயகி அம்பாளாக திகழ்கின்றாள்.

மகாலட்சுமி ஒரு முறை துர்வாச முனிவருக்கு ஒரு மாலையை பரிசாக அளித்தார். அதனை முனிவர் இந்திரனுக்கு கொடுத்தார். இந்திரனும் அந்த மாலையை வாங்கி தன் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது வைத்தார். அந்த யானை மாலையைத் தரையில் போட்டு தன் காலால் மிதித்து விட்டது. இதை கண்ட துர்வாச முனிவருக்குக் கோபம் வந்தது. அந்த யானையை கோபத்தோடு பார்த்தார். “நான் கொடுத்த மாலையை அவமதித்த நீ, தேவலோகத்தில் இருக்க தகுதி இல்லை. காட்டு யானையாக பூலோகத்தில் சுற்றித் திரிய வேண்டும்.” என்று சாபம் அளித்தார். வெள்ளை உருவம் கொண்ட யானை கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தப்பட்ட யானையானது இத்தலத்திற்கு வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கியதால் அதன் சாபம் நீக்கப்பட்டது. இதனால் தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை இதற்கு சான்றாக உள்ளது.

- Advertisement -

Samayapuram elephant

இந்தக் கோவிலுக்கு மற்றொரு புராணக் கதையும் உண்டு. தேவர்களை எல்லாம் அழித்து, அசுரர்கள் இந்த உலகை ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக, மரணமற்ற வாழ்வினை பெற, தாரகாசுரன் என்ற அரக்கன் இந்த கோவிலில் இறைவனை பூஜித்து, தவம் இருந்து, தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இந்த இடம் தாராசுரம் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

எமதர்மன் சாபம் பெற்றதால் உண்டான உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால் இங்கு உள்ள குளம் “எமதீர்த்தம்” என அழைக்கப்படுகிறது.

பலன்கள்:

இந்தக் கோவிலில் உள்ள துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் நான்கு வாரங்கள் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட பெண்களுக்கு திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு உள்ள ஐராவதேசுவரரை வழிபடுவதன் மூலம் கோப குணம் குறைந்து, மனதில் நிதானமும், பொறுமையும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

செல்லும் வழி:

தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்திருக்கின்றது.

தரிசன நேரம்:

காலை 8AM-12 மணி வரை
மாலை 4PM- 8 மணி வரை.

முகவரி:

குருநாதன் பிள்ளை காலனி,
தாராசுரம்,
கும்பகோணம்,
தமிழ்நாடு 612702.
தொலைபேசி எண் 0435 241 7157.

இதையும் படிக்கலாமே:
செய்யக்கூடாத பாவங்கள் எவை தெரியுமா வள்ளலார் கூறியது

English Overview:
Here we have Airavatesvara temple history in Tamil. Airavatesvara kovil varalaru. Airavatesvara kovil details.