Bharti Airtel : ஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்களா நீங்கள் ? உங்களுக்கு ரூ 200 கேஷ் பேக் – விவரம் இதோ

Airtel
- Advertisement -

தற்போது ஏற்பட்டுள்ள கேபிள் கட்டண சுமை காரணமாகவும் மற்றும் நகரமயமாதலாலும் கேபிள் நெட்ஒர்க்கிலிருந்து வாடிக்கையாளர்கள் மாறி டி.டி.எச் சேவைக்கு மாறிவருகின்றனர்.இந்த மாற்றம் காரணமாகவும் மற்றும் விற்பனையை அதிகரிக்க அனைத்து டி.டி.எச் நிறுவனங்களும் அதிரடி சலுகைகளையும் , விலை குறைப்பு மற்றும் தள்ளுபடி ஆகியவற்றையம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.

Dth 1

அதன்படி தற்போது ஏர்டெல் டிஜிட்டல் டிவி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கேஷ்பேக் ஆஃபர் ஒன்றினை அறிவித்துள்ளது. அந்த சலுகை என்னவென்றால் நீங்கள் ஏற்கனவே ஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளராக இருந்து உங்கள் நண்பர் ஒருவருக்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி டி.டி.எச் வாங்க ரெபர் செய்தால் உங்களின் ஏர்டெல் டிவி அக்கவுண்ட்க்கு ரூபாய் 200 கேஷ்பேக் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

இந்த கேஷ்பேக் ஆஃபர் கிடைக்க நீங்கள் ரெபர் செய்யும் நண்பரின் மொபைல் எண்ணுடன் REFER என்று டைப் செய்து 54325 என்ற நம்பருக்கு மெசேஜ் செய்யவேண்டும். பிறகு, அந்த நண்பர் இணைப்பினை வாங்கி உறுதி செய்யும்போது உங்களுக்கு அந்த கேஷ்பேக் 7 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.மேலும், ஒரு மாதத்திற்கு 5 நண்பர்கள் வரை நீங்கள் ரெபர் செய்யமுடியும்.

Dth (2)

இதுபோன்ற ஆஃபர் அறிவிப்பினை ஏர்டெல் அறிவிப்பது முதல் முறையல்ல. ஏற்கனவே, ஏர்டெல் இதுபோன்ற கேஷ்பேக் அறிவிப்பினை வெளியிட்டது அப்போது 150 ரூபாய் வரை ஆஃபர் அறிவித்தது. அதனையடுத்து தற்போது 200 வரை ஆஃபர் அறிவித்துள்ளது.

- Advertisement -