- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஐஸ்வர்ய ஈஸ்வரர் பூஜை முறை

ஐஸ்வர்ய ஈஸ்வரர் பூஜை முறை

- Advertisement -

ஐப்பசி மாதம் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று தான் நாம் தீபாவளி கொண்டாடுவோம். அதே சமயம் ஐப்பசி மாதம் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று தான் லட்சுமி பூஜையையும் மேற்கொள்வோம். லஷ்மி பூஜையை செய்வதற்கு பதிலாக அந்த லட்சுமிக்கு அனைத்து விதமான செல்வங்களையும் வாரி வழங்கிய ஈஸ்வரனை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஐஸ்வர்ய ஈஸ்வரர் பூஜை முறை

ஐப்பசி மாதம் என்பது மிகவும் விசேஷகரமான மாதம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய திரியோதசியை தன திரியோதசி என்று கூறுவோம். அதே போல் ஐப்பசி மாதம் வரக்கூடிய அமாவாசையை தீபாவளியாக நாம் கொண்டாடுவோம். இந்த தீபாவளி நன்னாளில் பலரும் மாலை நேரத்தில் தங்கள் வீட்டில் மகாலட்சுமி பூஜையை மேற்கொள்வார்கள். ஒரு சிலர் குபேர லட்சுமி பூஜையை மேற்கொள்வார்கள். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் குபேரர் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மகாலட்சுமிக்கு அஷ்ட ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கியவராக திகழ்ந்தவர் தான் ஐஸ்வரேஸ்வரர். அவரை பூஜை செய்யும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையும் சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாளில் ஐஸ்வர்ய ஈஸ்வரர் பூஜையை நாம் செய்ய வேண்டும். இதற்கு காரணம் என்னவென்றால் ஐப்பசி மாதத்தில் அமாவாசை திதியில் சுவாதி நட்சத்திரம் வரும் நாள் அன்று தான் மகாலட்சுமிக்கும் குபேரருக்கும் ஈஸ்வரன் செல்வங்களையும் தன தானியங்களையும் தந்தார் என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் நாமும் சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் அவர்களுக்கு தருகின்ற செல்வத்தைப் போலவே நமக்கும் செல்வத்தை வாரி வழங்குவார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த அமாவாசை திதி மற்றும் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் தான் காசியில் இருக்கக்கூடிய அன்னபூரணியை நம்மால் தரிசனம் செய்ய முடியும். அன்றைய நாளில் தான் சிவபெருமானுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக அன்னபூரணி அவதாரம் எடுத்தார் என்று கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு மிகுந்த நாளில் நாம் எந்த முறையில் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை காலை 5:00 மணியில் இருந்து 7:00 மணிக்குள் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். இதற்கு ஐஸ்வரேஸ்வரர் படம் வேண்டும். அந்த படத்தில் ஒரு புறம் மகாலட்சுமியும் மற்றொருபுறம் குபேரரும் இருப்பார்கள். இவர்கள் இருவருக்கும் செல்வத்தை தருவது போல சிவபெருமான் இருப்பார். இந்த படத்தை வாங்கி சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். ஐஸ்வரேஸ்வரருக்கு ஏலக்காய் மாலை, மல்லிகை பூ மாலை போன்றவற்றை சாற்ற வேண்டும். நம்மால் எந்த பொருளை நெய்வேத்தியமாக வைக்க முடியுமோ அந்த பொருட்களை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளலாம்.

அந்த படத்தில் மகாலட்சுமி எந்தப் பக்கம் இருக்கிறார்களோ அந்த பக்கம் நம் வீட்டில் இருக்கக்கூடிய தங்கம், வெள்ளி போன்றவற்றை ஒரு சிறிய கிண்ணத்தில் நிரம்ப நிரம்ப வைக்க வேண்டும். அதேபோல் மற்றொரு பக்கம் வீட்டில் இருக்கக் கூடிய அரிசி பருப்பு போன்ற தானியங்களையும் சிறுசிறு கிண்ணங்களில் நிரம்ப நிரம்ப வைக்க வேண்டும். பிறகு ஐஸ்வர்ய ஈஸ்வரரின் 108 போற்றிகளையும், மகாலட்சுமி தாயாரின் 108 போற்றிகளையும், குபேரரின் 108 போற்றிகளையும் கூறி வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.

வழிபாடு நிறைவு செய்த பிறகு தங்கம் வெள்ளி போன்றவற்றை அது இருக்கும் இடத்திலேயே வைத்து விட வேண்டும். தானியங்களை எடுத்து நாம் சமைப்பதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த ஐஸ்வர்ய ஈஸ்வரர் படத்தை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மறுபடியும் அடுத்த வருடம் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் சுவாதி நட்சத்திரம் சேர்ந்து வரக்கூடிய நாளில் தான் திரும்பவும் எடுத்து பூஜை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:கேதார கௌரி வழிபாடு
மகாலட்சுமிக்கும் குபேரருக்கும் செல்வத்தை வாரி வழங்கியவராக திகழக்கூடிய ஐஸ்வர்ய ஈஸ்வரரை நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி காலையில் இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு குபேரர் மற்றும் மகாலட்சுமிக்கு கிடைத்த அளவிற்கு தனம் தானியம் கிடைத்து சிறப்புடன் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்