மங்களம் உண்டாகி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இவற்றை பின்பற்றி பாருங்கள். கை மேல் பலன் இருக்கும்.

aishvaryam
- Advertisement -

குடும்பத்தில் வளமும், நலமும் கிடைக்க மகாலட்சுமி தேவியின் அருள் வீட்டில் நிறைந்து இருக்க வேண்டும். மகாலெட்சுமி வீட்டிற்குள் வருவதற்கும், அவள் உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வதற்கும், சில விஷயங்களை தவறில்லாமல் சரியான முறையில் அன்றாட வாழ்வில் கடைபிடித்து வந்தால் போதும். அப்படியான விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றியும் அவற்றை எவ்வாறு முறைப்படி செய்வது என்பதைப் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

mahalashmi

முதலில் வீட்டினுள் அனைத்து தெய்வங்களும் உள்ளே நுழையும் முன்வாசற்புறதத்தில் எப்பொழுதும் கிழக்கு, மேற்கு, அல்லது வடக்கு திசை நோக்கி கோலமிட்டு, வாசனை மிக்க மலர்கள் வைத்து அழகாக வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக நிலை வாசலில் மஞ்சள், குங்கும பொட்டு வைத்திருக்க வேண்டும். வாசலிலிருந்து உள்ளே நுழையும் பொழுது எதிர்ப்புறத்தில் கண்ணாடி அல்லது விநாயகர் படம் இருக்க வேண்டும். நிலைப்படியின் பின்புறம் மகாலட்சுமி தேவியின் படத்தை வைத்திருக்க வேண்டும். எப்பொழுதும் மகாலட்சுமி தேவியின் படம் வீட்டின் உள்ளே நுழையும் திசையை நோக்கி தான் இருக்க வேண்டும்.

அடுத்ததாக பூஜை அறையில் போடக்கூடிய கோலங்களான இதய கமல கோலம், லக்ஷ்மி கோலம், சக்கர கோலம், நவகிரக கோலம் போன்ற கோலங்களில் ஏதேனும் ஒன்றை போட்டு வைப்பது மிகவும் விசேஷமாகும்.

- Advertisement -

saravanabava-kolam

பூஜை அறையில் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் தீபமேற்றி வழிபடவேண்டும். இதன்மூலம் தீபத்தில் எரியும் தீபச்சுடர் எவ்வாறு ஒளிர் விட்டு எரிகின்றதோ, அதே போன்று உங்கள் மனதில் உள்ள குழப்பங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் குடிகொண்டிருக்கும்.

அடுத்ததாக நெற்றியில் வைக்கும் மஞ்சள், குங்கும பொட்டினை எப்பொழுதும் கிழக்கு திசை நோக்கி தான் வைக்க வேண்டும். ஏனென்றால் எவ்வாறு சூரியன் கிழக்கில் உதித்து ஒளிர்விட்டு பிரகாசமாக இருக்கின்றதோ, அதே போன்று நெற்றியில் வைக்கும் மஞ்சள், குங்குமம் எப்பொழுதுமே நீடூழி நிலைத்திருக்கும்.

- Advertisement -

kungumam

அடுத்ததாக வீட்டில் பயன்படுத்தப்படும் மங்கலப் பொருட்களான மஞ்சள், குங்குமம், உப்பு, பால், தயிர் இவை வீட்டில் எப்பொழுதும் குறைவின்றி பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இவை அனைத்தும் மகாலட்சுமி தேவியின் அம்சம் நிறைந்த பொருட்களாகும்.

அடுத்தது பூஜை அறையில் கடவுளுக்கு நிகராக இறந்தவர்கள் படத்தை வைத்து பூஜை செய்வது என்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது என்பது நன்மை பயக்காது என்று சில குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளன. அவர்களின் படத்தை தனியாக வேறு இடத்தில் வைத்து பூஜை செய்தல் வேண்டும்.

pooja-room1

அதேபோல் வீட்டிற்கு வரும் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். ஏனென்றால் பெண்களுடன் தான் மகாலட்சுமி தேவி வீட்டிற்குள் வருவார்கள். எனவே அவர்களை நன்றாக உபசரித்து, மகிழ்வித்து அனுப்ப வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடன் வரும் மகாலட்சுமி தேவி மகிழ்ந்து நம் வீட்டில் நிலைத்திருப்பாள்.

அதேபோல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உறவினர் வீட்டிற்கு செல்லும் பெண்கள் அங்கேயே தங்கி விடாமல் மறுபடியும் அவர்களது வீட்டிற்கு திரும்பி வந்து விட வேண்டும். திரும்பி வராமல் அங்கேயே தங்கிவிட்டால் உங்களுடன் வரும் மகாலட்சுமி தேவி நீங்கள் செல்லும் அந்த வீட்டிலேயே தங்கி விடுவார்கள்.

vijaya-lakshmi

இறுதியாக வெள்ளிக்கிழமை நாட்களில் கசப்பு நிறைந்த காய்கறிகளான சுண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றை சமைக்கக்கூடாது. ஏதேனும் இனிப்பு வகைகளை சமைக்கலாம். ஏனென்றால் வெள்ளிக்கிழமை என்பது கடவுளுக்கு பூஜை செய்யும் நன்னாள் என்பதால் அன்று கசப்பினை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறான விஷயங்களை கடைபிடிப்பது என்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். ஆனால் தொடர்ந்து செய்து வந்தால் அது உங்களுக்கு சுலபமாக பழகிவிடும். இவற்றை நீங்கள் பழகிக்கொண்டால் உங்கள் குடும்பத்திற்கும், உங்களுக்கும் பல நன்மைகள் வந்தடையும்.

- Advertisement -