அக்குள் கருமை நீங்க எதையும் தேட வேண்டாம், உங்க கிச்சனில் இருக்கும் இந்த சில பொருட்கள் போதுமே!

akkul-karumai-kadalai-maavu-potato
- Advertisement -

நாம் முக அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மற்ற பிற இடங்களுக்கு கொடுப்பது கிடையாது. வெளிப்புற பார்வைக்கு நம் மீது இருக்கும் கவனத்திற்குரிய பகுதிகளை மட்டுமே நாம் பராமரிப்பது உண்டு. இது போல தெரியாத அக்குள் பகுதிகளை அப்படியே விட்டுவிடுகிறோம். இதனால் நாளடைவில் அக்குள் பகுதிகளில் கருமை படர்ந்து விடாப்பிடியாக தங்கி விடுகிறது. எப்படிப்பட்ட அக்குள் கருமையும் சுலபமாக நீக்குவதற்கு பெரிதாக நாம் எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை. நம் கிச்சனிலேயே சில பொருட்கள் உண்டு. அந்த பொருட்கள் என்னென்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது போன்ற அழகு குறிப்பு ரகசியங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமையை நீக்குவதற்கு முதலில் கிச்சனில் இருக்கும் தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், நான்கைந்து சொட்டுக்கள் எலுமிச்சை சாறு, அரை ஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமையான இடத்திற்கு மீது நன்கு தடவி உலர விட்டு விட வேண்டும். கைகளை மேலே நீட்டியபடி படுத்துக் கொள்ளுங்கள். பேன் காற்றில் 20 நிமிடத்தில் நன்கு உலர விட்டு விட்டால் போதும், பிறகு கழுவிக் கொள்ளலாம். இதனை தினமும் நீங்கள் செய்து வந்தால் சில நாட்களிலேயே அக்குள் பகுதியில் இருக்கும் கருமை மாயமாய் மறைந்து போய்விடும்.

- Advertisement -

அதுபோல இரவு தூங்கும் முன்பு கற்றாழை ஜெல்லை அக்குள் பகுதிகளில் பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை லேசாக தடவி மசாஜ் செய்யலாம். இதனால் அக்குள் பகுதியில் இருக்கும் சொரசொரப்பு தன்மை நீங்கி மென்மையாக மாறும். மேலும் அதில் இருக்கும் கருமையும் எளிதாக நீங்கும்.

உருளைக்கிழங்குகளில் நேச்சுரலாக ப்ளீச்சிங் செய்யக்கூடிய தன்மை உண்டு. இதனால் உருளைக்கிழங்கு சாறை எடுத்து அக்குள் பகுதிகளில் தடவி பத்து நிமிடம் மசாஜ் செய்து உலர விட்டு விடுங்கள். பின்பு ஈரத்துணியால் துடைத்து எடுத்தால் கருமை ரொம்பவே எளிதாக வந்துவிடும். இதை தொடர்ந்து செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

உருளைக்கிழங்கு மட்டும் அல்லாமல் எலுமிச்சை பழங்களிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் காணப்படுகிறது. ஆனால் எலுமிச்சையில் அரிப்பை ஏற்படுத்தக்கூடிய தன்மையும் உண்டு என்பதால் அதிகமாக இதனை பயன்படுத்த வேண்டாம். எலுமிச்சை பழத்தை பிழிந்து பயன்படுத்திய பின்பு மீதம் இருக்கும் தோலை கடலை மாவில் தொட்டு அக்குள் பகுதிகளில் லேசாக மசாஜ் செய்யுங்கள். இது போல செய்யும் பொழுது அக்குள் பகுதியில் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருக்கும் கருமையும் எளிதாக வந்து விடும்.

இதையும் படிக்கலாமே:
30 வயதுக்கு மேல் சருமம் இளமையுடன் இருக்க வேண்டுமா? ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதுமே!

பேக்கிங் சோடா சிறந்த ஒரு ஸ்கிரப்பராக செயல்படுகிறது. அக்குள் பகுதிகளில் இருக்கும் கடுமையான கருமையை கூட மிக எளிதாக போக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. சமையல் சோடா எனப்படும் இந்த பேக்கிங் சோடாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அக்குள் பகுதிகளில் ஸ்க்ரப் செய்வது போல லேசாக அழுத்தம் கொடுக்காமல் பரபரவென்று தேய்க்க வேண்டும். இதனால் அக்குள் பகுதிகளில் இருக்கக்கூடிய கருமை எளிதாக வர துவங்கும். வாரம் இரண்டு முறை ட்ரை பண்ணி பாருங்க, நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -