30 வயதுக்கு மேல் சருமம் இளமையுடன் இருக்க வேண்டுமா? ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதுமே!

- Advertisement -

சரும பிரச்சனைகள் முப்பது வயதில் இருந்து பொதுவாக ஆரம்பிக்கிறது. அதற்குப் பிறகு என்னதான் செய்தாலும் நம்முடைய சருமமானது மீண்டும் இளமையை அடைவதற்கான வாய்ப்பை இழந்து விடுகிறது. பதின் வயதிலிருந்து சரும பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தாலும், அதனை சில வகைகளில் குணப்படுத்தி நிவாரணம் கண்டுவிடலாம். ஆனால் 30 வயதுக்கு மேல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாக சருமத்தை இளமையுடன் மீட்டெடுப்பது முடியாத விஷயமாக இருக்கிறது. இதனை ரொம்ப சுலபமாக ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வைத்து எப்படி சரி செய்வது? என்பது பற்றிய அழகு குறிப்பு ரகசியங்களை தான் இந்த பதிவில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இளமைக் காலத்தில் தோன்றும் முகப்பருக்களை சரியாக கையாளாமல் அதனை சிலர் கிள்ளி விடுவது உண்டு. இதனால் முகப்பருக்களை தோற்றுவிக்கும் கிருமிகள், மற்ற இடங்களிலும் பரவி சருமத்தில் துளைகளை உண்டாக்கி விடுகிறது. இதனால் சருமமானது மேடு பள்ளமாக மாறிவிடுகிறது. வயது கூட கூட இந்த பள்ளங்களும் நிரந்தரம் ஆகிவிடுகிறது.

- Advertisement -

30 வயதிலிருந்து நீங்கள் சருமத்திற்கு வெந்தயத்தை பயன்படுத்த ஆரம்பித்தால் என்றுமே சரும சுருக்கம் இல்லாமல் இளமையுடன் நம்மளுடைய தேகத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். அப்படியான சில குறிப்புகளை தான் இதில் பார்க்க இருக்கிறோம். முதலில் உங்கள் சருமத்திற்கு தேவையான அளவிற்கு வெந்தயத்தை அலசி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள்.

இரவு முழுவதும் ஊறிய பிறகு மறுநாள் காலையில் இந்த ஊறிய வெந்தயத்தை எடுத்து இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து மைய நைசாக பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த பேஸ்டை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் நன்கு உலர விட்டு விட வேண்டும். அதன் பிறகு முகத்தை கழுவினால் முகம் பளபளவென்று பளிங்கு போல மின்ன ஆரம்பிக்கும். மேலும் வெந்தயம் ஊறிய தண்ணீரை முகம் முழுவதும் தடவி உலர விட்டு பின் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள், கிருமிகள் அனைத்தும் நீங்கி முகம் மிருதுவாக பட்டு போல இருக்கும்.

- Advertisement -

வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை தலையிலும் தடவி பத்து நிமிடம் ஊற விட்டு பின் தலைக்கு அலசினால் தலைமுடி கண்டிஷனர் போட்டது போல காற்றில் அலைபாயும். வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். வெந்தயத்துடன் சேர்த்து வெந்தயம் ஊற வைத்த தண்ணீரையும் நீங்கள் அப்படியே பருகி விடலாம். இதனால் உடல் உஷ்ணம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையும். ஊற வைத்த வெந்தயத்தை அப்படியே எதுவும் சேர்க்காமல் அரைத்து பேஸ்ட் போல செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
பட்டுப் போன்ற பளப்பளக்கும் பால் போன்ற சருமம் வேண்டுமா? இந்த ஒரு பேக்கை ட்ரை பண்ணுங்க. நாம வேண்டாம்னு தூக்கி போட்ட இந்த பொருளில் இப்படி ஒரு பேரழகை பெற முடியுமான்னு ஆச்சரியப்படுவீங்க.

பின்னர் இந்த பேஸ்ட்டை முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் தடவி நன்கு உலர விட்டு விடலாம். அரை மணி நேரம் நன்கு உலர விட்டுவிட்டு காய்ந்ததும் துடைத்து எடுத்தால் எண்ணெய் பிசுக்குகள் இல்லாமல், அழுக்குகள் இல்லாமல் சருமமானது கண்ணாடி போல ஜொலிக்கும். வெந்தயத்தை கொண்டு இவ்வளவு விஷயங்களை நாம் செய்ய முடியும். வயது முதிர்ந்த தோற்றத்தில் இருந்து நம்மை இளமையாக வைத்துக் கொள்ளவும், தலைமுடி உதிர்தலை தடுத்து நிறுத்தி உடல் உஷ்ணத்தை தணிக்கவும், வெந்தயம் மிக சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

- Advertisement -