அக்குள் பகுதியை கவனிக்க மறந்தால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா? அக்குள் கருமை நீங்க நச்சென்று 4 டிப்ஸ்!

- Advertisement -

நம் உடம்பில் சில மறைமுக பகுதிகளை நாம் அந்த அளவிற்கு பெரிதாக கண்டு கொள்வது கிடையாது. அதில் முக்கியமான ஒரு பகுதி அக்குள்! இந்த அக்குள் பகுதியில் மெலனின் என்னும் நிறமி அதிகமாக இருக்கும். இப்படி பல்வேறு பிரச்சனைகளால் கருமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படியான இந்த அக்குள் கருமை எளிதாக நீங்க என்ன செய்வது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

அக்குள் பகுதியில் இருக்கும் அதிகமான நிறமி மற்றும் வியர்வை உண்டாகி அதனால் இறந்த செல்கள் அங்கு வெளியேற முடியாமல் தேங்கி விடுவதாலும் கருமை படர்கிறது. அடிக்கடி அந்த இடங்களில் சேவிங் செய்தாலும், கிரீம் உபயோகித்தாலும் இதுபோல கருமை படர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. இயற்கையாகவே நம் அக்குள் பகுதியை பாதுகாக்க மயிர் கால்கள் இருக்கும். இதனால் சென்சிடிவ் ஆன அந்த பகுதியில் ரேசர் போன்றவற்றை பயன்படுத்துவதால் நாளடைவில் சில பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

அக்குள் பகுதியில் டியோடிரன்ட் பயன்படுத்துபவர்கள் அதில் ஆல்கஹால் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆல்கஹால் நிறைந்த டியோ பயன்படுத்துவதன் மூலமும் இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. பல்வேறு மருத்துவ காரணங்களால் கூட அக்கல் பகுதியில் கருமை ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் தினமும் சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். அப்படியே விட்டுவிட்டாலும் இது போன்ற பிரச்சனைகள் வரும். கவனிக்காவிட்டால் நுண் துளைகள் வழியே அழுக்குகள் உள்ளே சென்று விடவும் வாய்ப்புகள் உண்டு.

நான்கைந்து தோல் சீவிய உருளைக்கிழங்குடன் சிறிதளவு தேன் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை 5 லிருந்து 10 நிமிடம் வரை அக்குள் பகுதியில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் அக்குள் கருமை எளிமையாக நீங்கும். மசாஜ் செய்த பிறகு ஈர துணியை வைத்து துடைத்து விடுங்கள். இதுபோல நாள் ஒன்றுக்கு இரண்டு முறை செய்ய சீக்கிரமே நல்ல பலன் காணலாம்.

- Advertisement -

அக்குள் பகுதியில் பாக்டீரியாக்கள் சேர்வதை தடுக்க தினமும் சிறிதளவு எலுமிச்சை சாறை எடுத்து அக்குள் பகுதியில் நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளித்துவிட்டு பன்னீர் அல்லது ஏதேனும் மாய்ஸ்ரைசர் பயன்படுத்தலாம். இதனால் கருமையும் மறைந்து, பாக்டீரியா பிரச்சனைகளும் இருக்காது.

எலுமிச்சை சாறு, தயிர், தேன், மஞ்சள் தூள் ஆகிய இந்த நான்கையும் சம அளவு கலந்து பேஸ்ட் போல அக்குள் பகுதியில் தடவி உலர விட்டு விடுங்கள். உலர்ந்ததும் ஈரத்துணியை வைத்து துடைத்து எடுத்து விடுங்கள். இதுபோல செய்தாலும் அக்குள் கருமை ரொம்ப சீக்கிரமாகவே மறையும்.

இதையும் படிக்கலாமே:
முகப்பரு வந்த தழும்பு கூட கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போக இதை விட பெஸ்ட் ரெமிடி இந்த உலகத்திலேயே இருக்காது.

ஆரஞ்சு பழத்தின் உடைய தோலை எடுத்து காய வைத்து பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆரஞ்சு பவுடர் உடன் பால் அல்லது பன்னீர் தேவையான அளவிற்கு சேர்த்து பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை 10 நிமிடம் நன்கு மசாஜ் செய்து தடவி உலர விட்டு விட வேண்டும். பின் குளிர்ந்த நீரினால் கழுவினால் சீக்கிரமே அக்குள் கருமை மறையும். மேலும் அக்குள் பகுதியில் இருக்கக்கூடிய துர்நாற்றங்களும் நீங்கி, பிரஷ் ஆக இருக்கும்.

- Advertisement -