இந்த வருடம் அட்சய திதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது! கட்டாயம் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு இதை செய்யுங்கள்.

mahalakshmi

இந்த வருடம் வரக்கூடிய அட்சயதிரிதியை வீட்டிலிருந்தே சிறப்பாக எப்படி கொண்டாடுவது என்பதைப் பற்றியும், ஞாயிற்றுக்கிழமை அன்று அட்சய திதி வருவதால், இதை இன்னும் சிறப்பாக மாற்ற குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவான ஒரு தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே இந்த அட்சய திரிதியை அன்று நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது பன்மடங்காக பெருகும் என்பது ஐதீகம்.

kuladheivam 1

ஆகவே இந்த அட்சய திதி அன்று முடிந்தவரை குடும்பத்துடன் சேர்ந்து சந்தோஷமாக நேரத்தை கழிப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால் இந்த வருடம் முழுவதும் சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும் அல்லவா? காலை எழுந்து, பிரம்ம முகூர்த்த வேளையிலேயே வீட்டில் தீபம் ஏற்றி இறைவனை மனதார வழிபடுங்கள்.

குறிப்பாக குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் இந்த ஒரு முடிச்சை கட்டி வைப்பதன் மூலம், ஐஸ்வர்யம் பெருகும் என்பதும் ஒரு நம்பிக்கையாக முன்னோர்கள் இடத்தில் இருந்து வந்தது. நம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருக, மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான அந்த நான்கு பொருட்கள் என்ன என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Elakkai

உபயோகப்படுத்தாத சிகப்பு ரவிக்கைத்துணி உங்கள் வீட்டில் இருந்தால் அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அது புதிய துணையாக இருக்க வேண்டும். அதில் சிறிதளவு துணியை சதுரமாக வெட்டி எடுத்துக் கொண்டு அதில் 11 ஏலக்காய், சோம்பு 11, கிராம்பு 11 சிறிதளவு பச்சை கற்பூரம் இவை அனைத்தையும் வைத்து, குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, மொத்தமாக ஒரு பச்சைக் கலர் நூலில் கட்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு அதை உங்கள் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமியின் முன்பு வைத்து மனதார, குலதெய்வத்தை நினைத்து வேண்டிக்கொண்டு, பிரம்ம முகூர்த்த வெளியிலேயே உங்கள் வீட்டு பீரோவில் வைத்துவிடுங்கள்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்த வேளையில் நீங்கள் கட்டும் இந்த முடிச்சின் மூலம் மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், குலதெய்வத்தின் ஆசீர்வாதமும் கட்டாயம் கிடைக்கும். குறிப்பாக அட்சய திதி அன்று இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதன் மூலம் உங்களது குடும்பம் 16 வகையான செல்வங்களையும் பெற்று, சிறப்படையும் என்பது குறிப்பிடத்தக்கது.

money

இதேப்போல் இந்த அட்சய திதி தினத்தன்று தயவு செய்து யாரிடமும் கடன் வாங்காதீர்கள். கடன் கொடுக்காதீர்கள். கடையிலிருந்து வாங்கக்கூடிய பொருட்களைக்கூட இனாமாக கடன் வாங்கக்கூடாது. வீட்டில் சண்டை போடாதீர்கள். அனாவசியமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசாதீர்கள். இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு, இந்த சின்ன பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்வதன் மூலம், பெரிய பலனடையலாம் என்ற செய்தியோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
திருஷ்டி கழிப்பதற்கு இப்படியும் ஒரு வழி இருக்கிறதா! அது என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க ஆசைப்பட்றீங்களா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Akshaya thiruthiyai Tamil. Akshaya tritiya 2020 in Tamil. Akshaya tritiya puja in Tamil. Akshaya tritiya Tamil.