பேன் தொல்லை, பொடுகுத் தொல்லை, இளநரை பிரச்சனை, முடி கொட்டும் பிரச்சனை இவை அனைத்திற்கும் இந்த ஒரே ஒரு கலவையை தலையில் தடவினால் போதும். அனைத்து முடி பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைத்துவிடும்

hair
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் நீளமான முடி இருப்பது என்பது நூற்றுக்கு 90 சதவீதம் குறைவு தான். அனைவருக்குமே இடுப்ளவு முடி கூட இருப்பதில்லை. அதிலும் சில பெண் குழந்தைகளுக்கு பள்ளி பருவத்திலேயே முடி அதிக அளவில் கொட்ட ஆரம்பித்து தலை வழுக்கை விழுவது போன்று தோன்ற ஆரம்பிக்கிறது அந்த அளவிற்கு இப்போது உள்ள சுற்றுச்சூழலும் மிகவும் மாசுபாடுடன் இருக்கிறது. வெளியில் சென்று வரும் அனைவருக்கும் தலைமுடி பிரச்சனை அதிகமாகவே இருக்கிறது. பெரும்பாலும் முடி உதிர்வு, பொடுகு தொல்லை தான் அதிகமான பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது. இவை அனைத்து தொல்லைகளையும் இந்த ஒரே ஒரு பேஸ்ட்டை தலையில் தடவுவதன் மூலம் அகற்றிவிடலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் வற்றல் – அரை கப், எலுமிச்சை பழம் – பாதி அளவு, இஞ்சி சிறிய துண்டு – 1, கற்றாழை ஜெல் – 3 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் நெல்லிக்காய் வற்றலை நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை எனில் இயற்கையாக கிடைக்கும் பெரிய நெல்லிக்காய் வாங்கிக் கொண்டு அதனை சிறு துண்டுகளாக நறுக்கி, ஏழு நாட்கள் நிழலில் காயவைக்கவேண்டும். பிறகு இவை வற்றல் போன்று மாறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நெல்லிக்காய் வற்றல் பொடியிலிருந்து 3 ஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறை மட்டும் சேர்க்க வேண்டும். பிறகு மூன்று ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும். இந்த கற்றாழை ஜெல்லை இயற்கையாக பிரஷ்ஷாக கிடைத்தால் அதில் இருந்து எடுத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பிறகு இவை அனைத்தும் குளிர்ச்சியான பொருட்கள் என்பதால் சிலருக்கு சளி பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது இதற்காக ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதனை தேங்காய் துருவலில் வைத்து நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒரு வடிகட்டியில் சேர்த்து பிழிந்து விட்டால் அதன் சாறு கிடைத்து விடும். இந்த இஞ்சி சாறையும் இந்த கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து விட வேண்டும்.

இவற்றில் சேர்த்துள்ள கற்றாழை ஜெல் முடியின் வறடட்சித் தன்மையைப் போக்கி, மிகவும் சாஃப்டாக மாற்றிவிடும். இதில் சேர்த்துள்ள இஞ்சிச்சாறு தலையில் இருக்கும் அரிப்புகள் அனைத்தையும் அகற்றி விடும். அடுத்ததாக இதில் சேர்க்கப்படும் நெல்லிக்காய் உதிர்தல், இளநரையை போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கிறது. இந்தக் கலவையை முடியின் வேர் கால்களில் படுமாறு நன்றாக தடவி, மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து தலைக்கு குளிக்க வேண்டும்.

- Advertisement -